பொதுவாக கருவேப்பிலை என்றாலே அனைவருக்கும் ஒருவித அலர்ஜி உண்டு. அதை யாரும் மென்று சாப்பிடுவது கிடையாது. சாதாரண சமையலில் கருவேப்பிலையை தனியாக ஒதுக்கி வைப்பவர்களுக்கு, இது போல சட்னி செய்து கொடுத்துப் பாருங்கள், அதனுடைய முழு சத்து சென்றடையும். தலை முடி உதிர்தல் பிரச்சனையை முற்றிலுமாக நிறுத்தக்கூடிய இந்த கறிவேப்பிலையை தவிர்ப்பது கூடாது.
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கருவேப்பிலையை நம் உணவோடு சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஆனால் தாளிப்பதற்காக கருவேப்பிலையை பயன்படுத்தினால் அதை நாம் ஒதுக்கி விட்டு தான் சாப்பிடுகிறோம். கருவேப்பிலை நம் வயிற்றுக்குள் செல்வதே கிடையாது.
ஆரோக்கியம் தரக்கூடிய கருவேப்பிலையை சட்னியாக அரைத்து விட்டால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான கருவேப்பிலை சட்னி. அதுவும் 5 நிமிடத்தில் எப்படி அரைப்பது. காரசாரமான கருவேப்பிலை சட்னியை செய்து கொடுத்தால் பத்து பதினைந்து இட்லிகளை கூட நாம் உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கலாம். எனவே ரொம்பவே சுவையான ஒரு கறிவேப்பிலை சட்னியை எளிதாக நம் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.
கறிவேப்பிலை சட்னி | Curry Leaves Chutney Recipe In Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 3 தக்காளி
- 6 மிளகாய் வற்றல்
- 10 சின்ன வெங்காயம்
- 10 கொத்து கறிவேப்பிலை
- 1 1/2 தேக்கரண்டி வெள்ளை உளுத்தம் பருப்பு
- 1/2 தேக்கரண்டி உப்பு
- 1 1/2 தேக்கரண்டி கடுகு
- 1 மேசைக்கரண்டி கடலைப் பருப்பு
- 2 மேசைக்கரண்டி எண்ணெய்
செய்முறை
- தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும். மற்ற தேவையானப்பொருட்களை தயாராக எடுத்து கொள்ளவும்.
- வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, வெள்ளை உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். அதனுடன்சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அதில் கடலைப்பருப்பு, மிளகாய் வற்றலை சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு வதங்கியதும் கறிவேப்பிலையை போட்டு நன்கு வதக்கி விட்டு ஆறவைக்கவும்.
- பிறகு ஆறவைத்தப் பொருட்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு மையாக அரைத்து எடுக்கவும். சுவையானகறிவேப்பிலை சட்னி தயார்.