Home காலை உணவு சத்தும் மணமும் நிறைந்த கறிவேப்பிலை தோசை இப்படி செய்து கொடுத்து உங்கள் காலை பொழுதை இனிமையாக...

சத்தும் மணமும் நிறைந்த கறிவேப்பிலை தோசை இப்படி செய்து கொடுத்து உங்கள் காலை பொழுதை இனிமையாக மாற்றிடுங்கள்!!!

தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும் தான். அதில் பல வீடுகளில் குட்டீஸ்களின் விருப்பமாக உள்ளது தோசை தான். இவை மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பி உண்ணப்படும் காலை உணவு. இதை வெகு எளிதாக செய்துவிடலாம். அதுமட்டுமின்றி தோசை உடல் பருமனை அதிகரிக்கும் பொருட்களையோ அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு பொருட்களையோ கொண்டவை அல்ல. மேலும் இவை எளிமையான மற்றும் எளிதாக செய்து முடிக்க கூடிய ஒரு உணவு வகை.

-விளம்பரம்-

தோசையில் பல வகை உண்டு அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மிகுந்த சுவையான மற்றும் வித்தியாசமான கறிவேப்பிலை தோசை. வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தினமும் ஒரே உணவை சாப்பிட்டு அலுத்து போய் இருக்கும். அந்த வகையில் காலை‌‌ மற்றும் இரவு உணவு வித்தியாசமான வகையில் இருக்க இன்று நாம் கறிவேப்பிலை தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். தினமும் கருவேப்பிலை சாப்பிட வேண்டும். அதேசமயம் கருவேப்பிலையை சாப்பிட எந்த சிரமமும் இருக்கக்கூடாது.

அந்த கருவேப்பிலை ரெசிபி நாவிற்கு ருசியாகவும் இருக்க வேண்டும். முடி அதிகமாக வளர வேண்டும். இப்படி உங்களுக்கு எந்த தேவை இருந்தாலும் சரி அதை தோசையாக ஊற்றி விடுங்கள். கறிவேப்பிலை எண்ணற்ற நன்மைகளை கொண்டது. ஆனால் அதை பெரும்பாலும் சாப்பிடும்போது தேவையற்ற பொருளாக ஒதுக்கி வைத்து விடுவோம். இதனால் அதன் நன்மைகளை பெற முடியாமலே போகும். எனவே இந்த கறிவேப்பிலை தோசை இதற்கு நல்ல தீர்வாக இருக்கும். இப்படி தோசை வைத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவார்கள். அதன் நன்மைகளும் முழுமையாக கிடைக்கும்.

Print
5 from 1 vote

கறிவேப்பிலை தோசை | Curry Leaves Dosa Recipe In Tamil

தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும் தான். அதில் பல வீடுகளில் குட்டீஸ்களின் விருப்பமாக உள்ளது தோசை தான். இவை மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பி உண்ணப்படும் காலை உணவு. இதை வெகு எளிதாக செய்துவிடலாம். அதுமட்டுமின்றி தோசை உடல் பருமனை அதிகரிக்கும் பொருட்களையோ அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு பொருட்களையோ கொண்டவை அல்ல. மேலும் இவை எளிமையான மற்றும் எளிதாக செய்து முடிக்க கூடிய ஒரு உணவு வகை. தோசையில் பல வகை உண்டு அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மிகுந்த சுவையான மற்றும் வித்தியாசமான கறிவேப்பிலை தோசை.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Curry Leaves Dosa
Yield: 4 People
Calories: 266kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 தோசை கல்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 2 கப் கறிவேப்பிலை
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • 4 சின்ன வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 1/2 கப் இட்லி அரிசி
  • 1/2 கப் பச்சரிசி
  • 3/4 கப் உளுந்தம் பருப்பு
  • 5 வர ‌மிளகாய்

செய்முறை

  • முதலில் உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி இரண்டையும் நன்கு தண்ணீரில் அலசி விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.
  • பின் கிரைண்டரில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், வரமிளகாய், சீரகம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். இதனை மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானவுடன் ஒரு கரண்டி மாவை சேர்த்து தோசையாக வார்த்து எண்ணெய் சுற்றி ஊற்றி வேக விடவும்.
  • பின் தோசை ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு ஒரு நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கறிவேப்பிலை தோசை தயார் இதனை தேங்காய் சட்னி உடன் பரிமாறலாம்.

Nutrition

Serving: 400g | Calories: 266kcal | Carbohydrates: 4.51g | Protein: 7.4g | Fat: 1.6g | Sodium: 186mg | Potassium: 284mg | Fiber: 6.3g | Vitamin A: 93IU | Vitamin C: 75mg | Calcium: 23mg | Iron: 35mg

இதனையும் படியுங்கள் : சுவையான இந்த கறிவேப்பிலை தொக்கை ஒரு முறை செய்து பாருங்கள் கறிவேப்பிலை பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்!!