கிழங்கில் சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, சர்க்கரை வல்லிக் கிழங்கு, மரவல்லிக் கிழங்கு என்று வகைகள் உள்ளன. ஒவ்வொரு கிழங்கும் ஒரு தனித்துவமான சுவையை தரும். அந்த வகையில் இன்று நாம், சேனை கிழங்கினை வைத்து தவா ரோஸ்ட் ரெசிபியை காண உள்ளோம். உங்கள் வீட்டில் உள்ளோர் சேனைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் சேனைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சுவையான ரோஸ்ட் செய்யுங்கள். இது சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றிக்கு சூப்பராக இருக்கும். ஒவ்வொரு நாளும் மதிய வேலை உணவிற்காக தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதாவது ஒரு பொரியல், குழம்பு செய்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது.
அவ்வாறு சாம்பார் வைத்தால் அதிகப்படியாக காரமான பொரியல் வகைகளை தான் செய்கிறோம். அதேபோல் காரக்குழம்பு அல்லது குருமா குழம்பு செய்து விட்டால் குறைவான காரம் சேர்க்கும் பொரியல் வகையை சமைத்து வைக்கின்றோம். அவ்வாறு மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட ஒரு அருமையான சேனைக்கிழங்கு ரோஸ்ட் செய்தால் மட்டும் போதும். இதை செய்து விட்டால் எல்லா வகை குழம்புக்கும் ஏற்ற உணவாக இருக்கும். இதில் கால்சியம் சத்து உள்ளதால் பற்களுக்கும் எழும்புகளுக்கு வலுவை சேர்க்கும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான கோளாறு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
சேனையை நாம் அதிகமாக சாப்பிடுவதில்லை ஆனால் இதில் இருக்கும் ஈஸ்டோஜன் பெண்களுக்கு மிகவும் நல்லது அதனால் இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த சேனைக்கிழங்கு வறுவலில் பலவகையான மசாலாக்கள் சேர்த்து செய்வதால், இதன் சுவையோ கறி சுவைக்கு நிகராக இருக்கும். கறி செய்து சாப்பிட முடியாத நாட்களில் இந்த மாதிரி செய்து பாருங்க. கறியே வேண்டாம், இதனையே செய்து கொடுத்தால் போதும் என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லுவார்கள். சரி இந்த சுவையான சேனைக்கிழங்கு தவா ரோஸ்ட் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சேனைக்கிழங்கு தவா ரோஸ்ட் | Yam Tawa Roast Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 தவா
தேவையான பொருட்கள்
- 1/4 கி சேனைக்கிழங்கு
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 டேபிள் ஸ்பூன் புளி கரைசல்
- 1 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் மல்லி தூள்
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் சேனைக்கிழங்கை தோல் நீக்கி விட்டு சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பவுளில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பின் இதில் இஞ்சி பூண்டு விழுது, புளிக்கரைசல் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்.
- பின் மசாலாவை வெட்டி வைத்துள்ள கிழங்கில் சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கிழங்கை தனித்தனியாக வைத்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சேனைக்கிழங்கு தவா ரோஸ்ட் தயார். இது தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதம் உடன் பரிமாறலாம்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சூப்பரான சேனைக்கிழங்கு பொடிமாஸ், சேனைக்கிழங்கை இப்படியும் பொடிமாஸ் செய்து சாப்பிடலாம், ருசி நாக்கிலேயே நிற்கும்.