சூப்பரான சேனைக்கிழங்கு பொடிமாஸ், சேனைக்கிழங்கை இப்படியும் பொடிமாஸ் செய்து சாப்பிடலாம், ருசி நாக்கிலேயே நிற்கும்.

- Advertisement -

நாம முட்டையில பொடிமா செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்ப நாம செய்து சாப்பிட போறது சேனைக்கிழங்கு பொடி மாஸ். கிழங்குகளில் பொடிமாஸ் அப்படிங்கறது ரொம்பவே யாரும் செய்திருக்க மாட்டோம். ஆனால் இப்போ  சேனைக்கிழங்கு வச்சு பொடி மாஸ் பண்ணி சாப்பிட போறோம். கிழங்குகள் எல்லாமே அதிக அளவு மாவு சத்து உடையது. கிழங்கு வகைகளை குழந்தைகளுக்கு உணவில் சேர்த்துக்கும் போது அதிக அளவு மாவுச்சத்து அவங்களுக்கு கிடைக்குது.

-விளம்பரம்-

உடலுக்கு எல்லா சத்துக்களும் சம அளவுல கிடைக்கணும். அப்படி எல்லாம் உணவு பொருளையும் சமமா எடுத்துக்கணும். அப்ப மாவு சத்து கிடைக்கணும் அப்படின்னா நம்ம நிறைய கிழங்கு வகைகளை குழந்தைகளுக்கும் சரி பெரியவர்களும் சரி எல்லாருமே எடுத்துக்கிறது ரொம்பவே நல்ல விஷயமா இருக்கும். வேகவச்ச கிழங்கு பிடிக்காத குழந்தைகள் நிறைய பேர் இருப்பாங்க. அப்படி இருக்கிற குழந்தைகளுக்கு கிழக்குகளை எப்படி வேற மாதிரியான உணவுகளா மாத்தி கொடுக்கணும் அப்படிங்கறது நிறைவே யோசிக்கணும்.

- Advertisement -

அந்த வகையில கிழங்குகள் பிடிக்காத குழந்தைகளுக்கு இந்த மாதிரி பொடிமாஸா செய்து கொடுக்கும் போது அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அப்படி சூப்பரான சுவையில இந்த சேனைக்கிழங்கை வச்சு எப்படி பொடிமாஸ் செய்ய போறோம் அப்படிங்கறது தெரிஞ்சுக்க இருக்கோம். வாங்க எப்படி சுவையான சேனைக்கிழங்கு பொடிமாஸ் செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.

Print
5 from 1 vote

சேனைக்கிழங்கு பொடி மாஸ் | Elephant Yam Scramble

உடலுக்கு எல்லா சத்துக்களும் சம அளவுல கிடைக்கணும். அப்படி எல்லாம் உணவு பொருளையும் சமமா எடுத்துக்கணும். அப்ப மாவு சத்து கிடைக்கணும் அப்படின்னா நம்ம நிறைய கிழங்கு வகைகளை குழந்தைகளுக்கும் சரி பெரியவர்களும் சரி எல்லாருமே எடுத்துக்கிறது ரொம்பவே நல்ல விஷயமா இருக்கும். வேகவச்ச கிழங்கு பிடிக்காத குழந்தைகள் நிறைய பேர் இருப்பாங்க. அப்படி இருக்கிற குழந்தைகளுக்கு கிழக்குகளை எப்படி வேற மாதிரியான உணவுகளா மாத்தி கொடுக்கணும் அப்படிங்கறது நிறைவே யோசிக்கணும்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: Side Dish
Cuisine: tamil nadu
Keyword: Elephant yam podimas
Yield: 3
Calories: 112kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ சேனைக்கிழங்கு
  • 3 வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் சீரகம் 
  • 1 ஸ்பூன் தனியா விதைகள்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சேனைக்கிழங்கை தோலை நீக்கிவிட்டு கழுவி சேனைக்கிழங்கை துருவி எடுத்துக் கொள்ளவும். துருவிய சேனைக்கிழங்கில் உப்பு சேர்த்து பிசறி எடுத்து தனியாக வைத்து விடவும்.
  • பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவிற்கு கொஞ்சம் கூடுதலாக எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • பின் துருவி வைத்துள்ள சேனைக்கிழங்கை பிழிந்து விட்டு நீரை எடுத்த பிறகு வெறும் சேனைக்கிழங்கு துருவலை மட்டும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • சேனைக்கிழங்கு வதங்கி கொண்டிருக்கும் பொழுதே வேறு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்காமல் காய்ந்த மிளகாய், சீரகம், தனியா விதைகளை சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • வறுத்தெடுத்துள்ள பொருட்கள் ஆறிய பிறகு அவைகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ளவும். சேனைக்கிழங்கு வெந்த பிறகு அதில் பொடித்து வைத்துள்ள மிளகாய் , சீரக, தனியா பொடியை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  • பொடியை சேர்த்து நன்றாக மொழி மாறுவதன் வெந்த பிறகு அதில் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலந்து விட்டு இறக்கினால் சுவையான சேனைக்கிழங்கு பொடிமாஸ் தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 112kcal | Carbohydrates: 9g | Protein: 1.2g | Fat: 2g | Sugar: 1g