விடுமுறை நாட்களில் தான் நம்மால் மீனை வாய்க்கு சுவையாக சமைத்து பொறுமையாக சாப்பிட முடியும். அதிலும் மீனை வித்தியாசமான சுவையில் சமைத்து சாப்பிட விரும்பினால், இந்த வாரம் கறிவேப்பிலை மீன் வறுவலை செய்து சுவையுங்கள்.இதை செய்வது மிகவும் சுலபம். இங்கு அந்த கறிவேப்பிலை மீன் வறுவலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து பாருங்கள்.
அசைவ உணவுகளில் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் உணவானது கடல் உணவுகள் அதிலும் முக்கியமாக மீனுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த மீனை பொறுத்தவரை நாம் குழம்பு,பிரியாணி, புட்டு இவைகள் எல்லாம் விரும்பி உண்பதை விட வறுவல் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்த மீன் உணவு என்றால் அது வறுவல் தான். அப்படிப்பட்ட மீனை வறுவலை கருவேப்பிலை சேர்த்து கறிவேப்பிலை மீன் வறுவல் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
குழந்தைகளுக்கு மீன் மிகவும் பிடிக்கும். உணவில் பிரதானம் சுவையாக உண்ண வேண்டும் என்பதுதான். நாம் இந்த கறிவேப்பிலை மீன் வறுவலை செய்ய இருக்கிறோம். மீன் குழம்பு அதிக சுவையுடையதாகத்தான் இருக்கும், இருந்தாலும் மீன் வறுவலுக்கு என்று தனியாக ஒருக கூட்டமே இருக்கின்றது .மீனில் இருக்கும் ஒமேகா 3 கால்சியம் வைட்டமின்கள் போன்றவை உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடியவை. இவைகளில் கெட்ட கொழுப்புகள் இல்லாததால் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதய நோயாளிகள் கூட மீன் உணவை உணவில் எடுத்து கொள்ளலாம். இந்த கறிவேப்பிலை மீன் வறுவலை எந்த மீனில் வேண்டுமானாலும் செய்யலாம். சுலபமாக வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்து ரொம்ப குறைவான நேரத்தில் டேஸ்டியான கறிவேப்பிலை மீன் மீன் வறுவல் எப்படி செய்து சாப்பிடலாம்.எப்படி கறிவேப்பிலை மீன் சேர்த்து மீன் வறுவல் செய்வது என்று பார்க்கலாம்
கறிவேப்பிலை மீன் வறுவல் | Curry Leaves Fish Fry In Tamil
Equipment
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1 பாம்ஃப்ரெட் மீன் (Pomfret Fish)
- பெரிய கையளவு தேங்காய் எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு
அரைப்பதற்கு
- 1 கையளவு கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் மிளகு
- 3 வரமிளகாய்
- 4 பற்கள் பூண்டு
- 3 பச்சை மிளகாய்
- 2 டீஸ்பூன் மல்லித் தூள்
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி
- 1 டீஸ்பூன் கரம் மசாலா
- 3 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
- பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்
- பின்பு அந்த மசாலா தூள் வகைகளை மீனில் தடவி, 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவேண்டும்.
- பிறகு ஒரு தவா அல்லது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், கறிவேப்பிலை மீன் வறுவல் ரெடி!!!