- Advertisement -
வீட்டில் கறிவேப்பிலைப் இட்லி பொடியை சுவையாக அரைத்து வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள். இந்த கறிவேப்பிலைப் பொடி இட்லி எந்த கடையில் வாங்கின அப்படின்னு தான் கேட்பாங்க. அந்த அளவுக்கு சுவையான ஒரு கறிவேப்பிலைப் பொடி இட்லி ரெசிபியை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.. வாங்க நேரத்தை கடத்தாமல் ரெசிபியை பார்க்கலாம்.
-விளம்பரம்-
கறிவேப்பிலைப் பொடி இட்லி | Curry Leaves Podi idly
வீட்டில் கறிவேப்பிலைப் இட்லி பொடியை சுவையாக அரைத்து வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள். இந்த கறிவேப்பிலைப் பொடி இட்லி எந்த கடையில் வாங்கின அப்படின்னு தான் கேட்பாங்க. அந்த அளவுக்கு சுவையான ஒரு கறிவேப்பிலைப் பொடி இட்லி ரெசிபியை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.. வாங்க நேரத்தை கடத்தாமல் ரெசிபியை பார்க்கலாம்.
Yield: 4
Calories: 123kcal
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 10 இட்லி
தாளிக்க:
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 டீஸ்பூன் எண்ணெய்
வறுத்துப் பொடிக்க:
- 1 கைப்பிடி கறிவேப்பிலை
- 5 மோர்மிளகாய்
- 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
செய்முறை
- வெறும் கடாயில் கறிவேப்பிலை, சீரகம், உளுத்தம்பருப்பு மூன்றையும் தனித்தனியே வறுத்துக்கொள்ளுங்கள்.
- எண்ணெயைக் காயவைத்து, குறைந்த தீயில் மோர்மிளகாயைக் கிள்ளிப்போட்டு, நன்கு வறுத்துக்கொள்ளவும்.
- பிறகு, மிளகாய்களை எடுத்துவிட்டு, அந்த எண்ணெயிலேயே கடுகைச் சேர்த்துப் பொரியவிட்டு இறக்குங்கள்.
- மோர் மிளகாய்களுடன் கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, சீரகத்தைச் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளுங்கள்.
- இட்லிகளைபொடியாக நறுக்கி, பொடித்த மோர்மிளகாய்+கறிவேப்பிலைப் பொடி சேர்த்து, பொரித்த கடுகையும், ருசிக்கேற்ப உப்பையும் சேர்த்து நன்கு கிளறவும். வித்தியாசமான ஆனால் ருசியான டிபன் இது.
Nutrition
Serving: 100G | Calories: 123kcal | Carbohydrates: 6.2g | Protein: 1.7g | Fat: 0.3g | Sodium: 2.7mg | Potassium: 54.6mg | Fiber: 0.8g | Vitamin A: 2.8IU | Calcium: 16mg | Iron: 0.3mg
- Advertisement -