ருசியான கறிவேப்பிலை தொக்கு இப்படி செய்து பாருங்க சாதத்திற்கு மட்டுமல்லாமல் சப்பாத்தி இட்லி தோசைக்கும் வைத்து சாப்பிட, அருமையாக இருக்கும்!

- Advertisement -

பொதுவாக நாம் சமைக்கும் அனைத்து வகையான குழம்புகளிலும் பொறியல்களிலும் சட்னி சாம்பார் என அனைத்திலும் கருவேப்பிலை சேர்த்து தாளித்தால் மனமும் சுவையும் சற்று அதிகமாகவே இருக்கும். கருவேப்பிலை சாப்பிட்டால் நமக்கு எண்ணற்ற பயன்கள் உள்ளது. முடி உதிர்தலை தடுக்க கருவேப்பிலை மிக மிக பயனுள்ளதாக இருக்கும்.

-விளம்பரம்-

முகத்திற்கும் கறிவேப்பிலை சாப்பிடுவது மிகவும் நல்லது. கருவேப்பிலை நாம் தொடர்ந்து சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் குறைபாடு நமக்கு வரவே வராது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கக்கூடிய சக்தி இந்த கறிவேப்பிலைக்கு ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்துக் கொள்ள உதவும். சைவம் முதல்ல செல்வம் வரை எல்லா உணவுகளிலும் இருக்கக்கூடிய இந்த கறிவேப்பிலையை பெரும்பாலும் அனைவரும் தட்டில் ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

- Advertisement -

ஆனால் அப்படி செய்யாமல் அந்தக் கருவேப்பிலையை நாம் சாப்பிட்டு வந்தால் நேர்குறிப்பிட்ட அனைத்து பயன்களும் நமக்கு கிடைக்கும். கருவேப்பிலையில் பொடி ,கருவேப்பிலை துவையல், என கருவேப்பிலையில் பலவிதமான ரெசிபி செய்து நாம் சாப்பிட்டிருப்போம் ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக கருவேப்பிலை தொக்கு செய்து சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அதன் ருசி அவ்வளவு அருமையாக இருக்கும்.

பொதுவாக குழந்தைகளுக்கு இந்த கறிவேப்பிலை தொக்கு வைத்து ஊட்டினால் சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு தேவையான பல சத்துக்கள் அவர்களது உடம்பில் போய் சேரும். மிகவும் சட்டென செய்ய கூடிய இந்த கருவேப்பிலை தொக்கை வீட்டில் குழம்பு வைக்க சோம்பேறித்தனமாக இருந்தால் செய்யலாம். இப்ப வாங்க இந்த கறிவேப்பிலை தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
3 from 3 votes

கறிவேப்பிலை தொக்கு | Curry Leaves Thokku Recipe In Tamil

கறிவேப்பிலை சாப்பிடுவது மிகவும் நல்லது. கருவேப்பிலை நாம் தொடர்ந்து சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் குறைபாடு நமக்கு வரவே வராது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கக்கூடிய சக்தி இந்த கறிவேப்பிலைக்கு ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்துக் கொள்ள உதவும். சைவம் முதல்ல செல்வம் வரை எல்லா உணவுகளிலும் இருக்கக்கூடிய இந்த கறிவேப்பிலையை பெரும்பாலும் அனைவரும் தட்டில் ஒதுக்கி வைத்து விடுவார்கள். மிகவும் சட்டென செய்ய கூடிய இந்த கருவேப்பிலை தொக்கை வீட்டில் குழம்பு வைக்க சோம்பேறித்தனமாக இருந்தால் செய்யலாம்.
Prep Time2 minutes
Active Time7 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Curry Leaves Thokku
Yield: 4
Calories: 191kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கறிவேப்பிலை
  • 15 சின்ன வெங்காயம்
  • 10 பூண்டு
  • புளி நெல்லிக்காய் அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 2 டீஸ்பூன் கடலைபருப்பு
  • 5 காய்ந்தமிளகாய்

செய்முறை

  • ஒரு கடாய் எண்ணெய் சேர்த்து வெங்காயம் பூண்டு கருவேப்பிலை அனைத்தையும் நன்கு கழுவி சுத்தம் செய்து அதில் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு,மிளகு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  •  இப்பொழுது வறுத்தத்தையும் வதக்கியதையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு வெந்தயம் சேர்த்து தாளித்து கொள்ளவும் தாளித்த பிறகு அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறவும்.
  •  நெல்லிக்காய் அளவு புலியை நன்றாக கரைத்து அதை சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
  • என்னை பிரிந்து வரும் வரை நன்றாக கிளறி எடுத்தால் கறிவேப்பிலை தொக்கு தயார். சுவை அருமையாக இருக்கும்.

Nutrition

Serving: 100g | Calories: 191kcal | Carbohydrates: 41g | Protein: 6g | Sodium: 5mg