ருசியான டெல்லி தூத் பன்னீர் மசாலா ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன்! பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!

- Advertisement -

பன்னீர் பயன்படுத்தி நிறைய கிரேவிகள் வந்து நம்ம பண்ணி சாப்பிட்டு இருக்கோம். பன்னீர் 65, பன்னீர் மசாலா, பன்னீர் பட்டர் மசாலா பல வெரைட்டிகளில் பண்ணி உணவுகள் சாப்பிட்டிருப்போம். இப்ப நம்ம சாப்பிட போற பன்னீர் மசாலாவும் இருக்கும். மசாலா எப்படி நீங்க பன்னீர் மசாலா பண்ணி கொடுத்தீர்களா  குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த பன்னீர் தூத் மசாலா ரொம்பவே ருசியானது இதில் அதிக அளவு கால்சியம் இருக்கிறது அதனால் உடலுக்கு அதிக அளவு ஊட்டச்சத்து கிடைக்கும்.

-விளம்பரம்-

குழந்தைகளுக்கு இந்த பன்னீர் தூத் மசாலா கொடுக்கும்போது இந்த கிரீமியான ரொம்பவே ருசியான பன்னீர் பட்டர் மசாலாவை அதிக விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. அது கூட குடுக்குற சப்பாத்தி ஆகட்டும் பூரி ஆகட்டும் இல்ல பராத்தா இந்த மாதிரி எதுவாக இருந்தாலும் அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. பன்னீர் தூத் மசாலா அப்டின்னா ஒன்னும் இல்ல பன்னீர்ல நம்ம பால் சேர்த்து மசாலா பண்ண போறோம்.

- Advertisement -

இந்த மசாலா ரொம்பவே சுலபமாகவும் ஈசியாவும் பண்ணலாம். வீட்டுல இருக்கிற பொருட்கள் போதும் தேவை இல்லாம எக்ஸ்ட்ராவா எந்த ஒரு பொருளும் ஆட் பண்ணாம ரொம்ப சுலபமாக குறைந்த பொருட்களை வைத்து ரொம்ப ருசியான இந்த பன்னீர் மசாலா பண்ணலாம் வாங்க. சுவையான இந்த டெல்லி பன்னீர் தூத் மசாலா எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.

Print
5 from 1 vote

டெல்லி தூத் பன்னீர் மசாலா | Delhi Paneer Masala In Tamil

குழந்தைகளுக்கு இந்த பன்னீர் தூத் மசாலா கொடுக்கும்போது இந்த கிரீமியான ரொம்பவே ருசியான பன்னீர் பட்டர் மசாலாவை அதிக விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. அது கூட குடுக்குற சப்பாத்தி ஆகட்டும் பூரி ஆகட்டும் இல்ல பராத்தா இந்த மாதிரி எதுவாக இருந்தாலும் அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. பன்னீர் தூத் மசாலா அப்டின்னா ஒன்னும் இல்ல பன்னீர்ல நம்ம பால் சேர்த்து மசாலா பண்ண போறோம். சுவையான இந்த டெல்லி பன்னீர் தூத் மசாலா எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast
Cuisine: tamil nadu
Keyword: Delhi Paneer Masala
Yield: 4
Calories: 318kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் பன்னீர்
  • 10 முந்திரிபருப்பு
  • 1 ஸ்பூன் கசகசா
  • 1 ஸ்பூன் பூசணி விதை
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் நெய்
  • 1 கப் பால்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 பிரியாணி இலை
  • 2 காய்ந்த மிளகாய்
  • 2 ஏலக்காய்
  • 1 கஸ்தூரி மேத்தி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பன்னீரை சதுர வடிவாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி பன்னீரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு  பாலை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். பன்னீரை சேர்த்து பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • பன்னீர் ஊறும் நேரத்திற்கு இடையில் ஒரு மிக்ஸி ஜாரில் முந்திரிப் பருப்பு ஊற வைத்த கசகசா ஊறவைத்த பூசணி விதைகளை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் இஞ்சி,பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  •  இந்த மசாலாவை தான் நாம் பன்னீர் தூத் மசாலா செய்வதற்கு பயன்படுத்தப் போகின்றோம். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து பிரியாணி இலை, சீரகம், காய்ந்த மிளகாய், ஏலக்காய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும். பிறகு மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  •  பிறகு அதில் பாலில் ஊற வைத்துள்ள பன்னீரை சேர்த்து நன்றாக கலந்து விடவும். இந்த பன்னீர் தூத் மசாலா கெட்டியான பிறகு அதில் சிறிதளவு கஸ்தூரி மேத்தியே சேர்த்து சூடாக பரிமாறினால் சுவையான டெல்லி பன்னீர் தூத் மசாலா தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 318kcal | Carbohydrates: 30.7g | Protein: 30.7g | Trans Fat: 61g | Sodium: 0.6mg | Vitamin C: 61mg

இதையும் படியுங்கள் : இனி சப்பாத்திக்கு ருசியான ப்ரோக்கோலி பன்னீர் கறி இப்படி செய்து பாருங்க!