இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் சிக்கன் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? ஒரு அசத்தலான மற்றும் வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் தாபா சிக்கன் கறி செய்யுங்கள். சிக்கன் கிரேவி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு. அதை சற்று காரம் தூக்கலாக செய்து சுவைத்தால் எப்படி இருக்கும்? அது தான் பஞ்சாபி ஸ்டைல் தாபா சிக்கன் கிரேவி.
இதனையும் படியுங்கள் : காஷ்மீர் சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்க! அடுத்து அடிக்கடி வீட்டில் காஷ்மீர் சிக்கன் கறி தான்!
அதைத்தான் நம்ம ஊர் சிக்கன் கிரேவிக்கும் தாபா ஸ்டைல் சிக்கன் கிரேவிக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் காரம் தான். நம்ம ஊர் சிக்கன் கிரேவியை சுவைத்து அலுத்து போனவர்களுக்கு தாபா ஸ்டைல் சிக்கன் கிரேவி ஒரு நல்ல மாற்று. இந்த சிக்கன் கறி மிகச் சுவையாக, சரியான காரம் மற்றும் மணத்துடன் இருக்கும். பரோட்டா, நாண், சப்பாத்திக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும்.
தாபா சிக்கன் கறி | Dhaba Chicken Curry
Equipment
- 1 மிக்ஸி
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 3/4 கிலோ சிக்கன்
- 1/4 கப் நறுக்கிய
- 1/4 கப் நறுக்கிய தக்காளி
- 2 டீஸ்பூன் இஞ்சி
- 1/2 டேபிள் ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
- 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
- 1/2 டேபிள் ஸ்பூன் தனியா தூள்
- 2 டேபிள் ஸ்பூன் கரம்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள்
- உப்பு தேவையானஅளவு
- 1 ஸ்பூன் கஸ்தூரி மேத்தி
- கொத்தமல்லி இலை சிறிதளவு
தாளிக்க
- 1/4 கப் கடலை எண்ணெய்
- 2 பட்டை
- 7 கிராம்பு
- 4 கருப்பு ஏலக்காய்
- 2 பச்சை மிளகாய்
- 2 டீஸ்பூன் நெய்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 2 டீஸ்பூன் நறுக்கிய
செய்முறை
- முதலில் தக்காளியை ஒரு மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
- பின்னர் பெரிய துண்டுகளாக நறுக்கிய சிக்கனை கழுவி வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரம் வைத்து, எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பின் நறுக்கிய வெங்காயம், மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- அவை வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து இஞ்சி பூண்டு விழுது மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சீரகம் தூள், மல்லி தூள் சேர்த்து கலந்து விடவும்.
- பின் தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- பின் சிக்கன் துண்டுகள் சேர்த்து வாசம் நீங்க 10 நிமிடங்களுக்கு நன்றாக கலந்து விடவும்.
- பின் தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிடங்களுக்கு சிக்கன் வேகும் வரை மூடி போட்டு கொதிக்க விடவும்.
- சிக்கன் வெந்து நமக்கு தேவையான கிரேவி பதம் வந்ததும் கஸ்தூரி மெதி மற்றும் மல்லி தழை தூவி இறக்கலாம்.
- கடைசியாக சிறு வாணலியில் நெய் ஊற்றி சிறிதாக நறுக்கி இஞ்சி சேர்த்து பொரிந்ததும், மிளகாய் தூள் சேர்த்து கலந்து விட்டு, கிரேவியில் சேர்த்து கலந்து விடவும்.
- அவ்வளவு தான். சுவையான தாபா சிக்கன் கறி ரெடி. இது பரோட்டா, சப்பாத்தி, நாண் இவற்றிற்கு சைடிஷ்-ஆக இருக்கும்.