மாலை நேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்றுவதன் காரணமும், உண்மை அர்த்தமும் என்னவென்று தெரியுமா ?

- Advertisement -

அறியாமை இருளை போக்கி ஒளியை பரப்பும் பரமாத்மாவின் திருஉருவமே விளக்கு என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன என பஞ்சாங்க கர்த்தா பிரம்மஸ்ரீ சில்கமர்த்தி பிரபாகர சக்ரவர்த்தி சர்மா கூறினார்.

-விளம்பரம்-

பொதுவாக இந்துக்களின் முறைப்படி வீட்டில் விளக்கு ஏற்றுவது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.வேதங்களில் முதன்மையானதாக, ரிக்வேதம் தனது முதல் வசனத்தை அக்னி தேவியிடம் செய்யும் பிரார்த்தனையுடன் தொடங்குகிறது. எனவே தான் இந்துக்களின் முறைப்படி ஒவ்வொரு விசேஷத்தின் பொழுதும் விளக்கு ஏற்றுவது கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விளக்கை மூன்று வேளைகளில் ஏற்ற வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றது.

- Advertisement -

விளக்கு ஏற்றுவதன் முக்கியத்துவம்

இந்துக்களில் சனநாதான தர்மத்தை பின்பற்றும் அனைவரும் கண்டிப்பாக விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றி தான் தெய்வ வழிபாடும் செய்ய வேண்டும். சூரியன் உதிக்கின்ற நேரம் மாலை நேரம் சூரியன் அஸ்தமிக்கும் நேரம் ஆன பிரதோஷத்துடன் தொடர்புடைய நேரம் என மூன்று வேளைகளிலும் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும்.

இந்த மூன்று வேளைகளில் மாலை நேரத்தில் ஏற்றக்கூடிய விளக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்கு முன்பாக வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையிலும் வீட்டின் வெளியே உள்ள துளசி மாடத்திலும் விளக்கு ஏற்றி வைத்து மந்திரங்கள் உச்சரித்து பூஜை செய்தால் லட்சுமிதேவி நம் வீட்டிற்கு வருவார்கள் என்று அர்த்தம் என சக்கரவர்த்தி கூறுகிறார்

வீட்டில் இருக்கக்கூடிய விளக்கை தீபலட்சுமி என்று அழைப்பார்கள். யார் ஒருவருடைய வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து வணங்குகிறார்களோ அவர்களே உண்மையான பணக்காரர்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

-விளம்பரம்-

விளக்கு ஏற்ற வேண்டிய சில முக்கியமான நேரங்கள்

பொதுவாக நம் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு ஒரு சில நேரங்கள் உள்ளது. அந்த நேரங்களில் விளக்கு ஏற்றினால் மிகவும் நல்லது. அதிகாலை பிரம்ம முகூர்த்தமான 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் விளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது. மாலை பிரதோஷ நேரத்தில் 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் விளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது. இப்படி நாம் விளக்கு ஏற்று வைத்த வழிபடுவதால் நாம் எண்ணி இது எல்லாம் நிறைவேறும் என்று சொல்வார்கள்

விளக்கு ஏற்றுவதற்கு சிறந்த எண்ணெய்

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு எண்ணெய் தீபத்துக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும். தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் முகத்திலும் பேச்சிலும் செயலிலும் வசீகரம் கூடும். நல்லெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் ஆரோக்கியம் அதிகரிக்கும். நெய் வைத்து விளக்கு ஏற்றினால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து வீட்டில் செல்வம் அதிகரிக்கும். விளக்கெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் மற்றவர்களுக்கு நம் மேல் உள்ள மதிப்பும் மரியாதையும் கூடும்.

வேப்ப எண்ணையை கொண்டு விளக்கு ஏற்றினால் வீட்டில் அமைதி நிலவும். பொதுவாக இலுப்பை எண்ணையை கோவில்களில் மட்டுமே பயன்படுத்தி விளக்கு ஏற்றுவார்கள் வீட்டில் இலுப்பை எண்ணையை பயன்படுத்தி விளக்கு ஏற்ற கூடாது. கோவில்களில் இலுப்பை எண்ணையை பயன்படுத்தி விளக்கு ஏற்றி வந்தால் குறிப்பாக சிவனுக்கு இலுப்பை எண்ணெய் விளக்கு ஏற்றினால் வீட்டில் உள்ள கடன்கள் அனைத்தும் தீர்ந்து போகும். பொதுவாக விளக்கு ஏற்றும் போது நாம் அந்த விளக்கை குளிர வைக்கும் வரையில் விளக்கில் எண்ணெய் கண்டிப்பாக இருக்க வேண்டும் விளக்கு எப்பொழுதுமே தானாக அணையக்கூடாது அப்படி அணைந்தால் அது வீட்டிற்கு நல்லது கிடையாது என்று கூறுவார்கள். எனவே விளக்கு ஏற்றும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

-விளம்பரம்-