ஒரு சூப்பரான வெஜ் பிரியாணி செய்ய நினைத்தால் ருசியான முருங்கைக்காய் பிரியாணி இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

பிரியாணி என்றாலே அனைவருக்கும் வாயில் எச்சில் ஊரும் இதில் சிறியவர் பெரியவர் என்று எந்த பாகுபாடும் கிடையாது. ஆனால் அந்த பிரியாணி சிக்கன் மட்டன் போன்றவற்றில் செய்ததாக இருக்க வேண்டும். அசைவத்தில் செய்யும் பிரியாணிக்கு இருக்கும் மவுசு சைவத்தில் செய்யும் பிரியாணிக்கு கிடையாது. சைவம் அந்த அளவிற்கு சுவையாக இருக்காது என்பது அனைவரின் கருத்து. ஆனால் இந்த முருங்கைக்காய் பிரியாணி செய்து சாப்பிட்ட பிறகு அனைவரும் செய்த பிரியாணியை விரும்ப ஆரம்பித்து விடுவார்கள்.

-விளம்பரம்-

பொதுவாக சுடச்சுட சாப்பிட வேண்டும் என்று அனைவரும் பலமுறை ஆசைப்படுவார்கள். அப்படி செய்த உடனே சுடச்சுட சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு வகைகள் என்று பல இருக்கின்றன. அதிலும் ஒன் பாட் உணவு வகைகள் இது போன்ற நேரங்களில் சாப்பிட மிகவும் ஏற்றதாக இருக்கும்.

- Advertisement -

அவ்வாறு தக்காளி சாதம், பிரிஞ்சி சாதம், தேங்காய் சாதம், பிரியாணி போன்ற உணவு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும். இவற்றை அடிக்கடி நமது வீடுகளில் செய்திருப்போம். ஆனால் முதல்முறையாக முருங்கைக்காயை பயன்படுத்தி செய்யக்கூடிய இந்த பிரியாணியை இவ்வாறு செய்து பாருங்கள். இதன் சுவை சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Print
4.50 from 2 votes

முருங்கைக்காய் பிரியாணி | Drumstick Biryani In Tamil

 பிரியாணி என்றாலே அனைவருக்கும் வாயில் எச்சில்ஊரும் இதில் சிறியவர் பெரியவர் என்று எந்த பாகுபாடும் கிடையாது. ஆனால் அந்த பிரியாணிசிக்கன் மட்டன் போன்றவற்றில் செய்ததாக இருக்க வேண்டும். அசைவத்தில் செய்யும் பிரியாணிக்குஇருக்கும் மவுசு சைவத்தில் செய்யும் பிரியாணிக்கு கிடையாது. சைவம் அந்த அளவிற்கு சுவையாகஇருக்காது என்பது அனைவரின் கருத்து. ஆனால் இந்த முருங்கைக்காய் பிரியாணி செய்து சாப்பிட்டபிறகு அனைவரும் செய்த பிரியாணியை விரும்ப ஆரம்பித்து விடுவார்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Drumstick Biryani
Yield: 4
Calories: 321kcal

Equipment

  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 2 கப் பாசுமதிஅரிசி
  • 12 துண்டுகள் நறுக்கிய முருங்கைக்காய்
  • 1 டேபிள்ஸ்பூன் தயிர்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/4 கப் சதுரங்களாக வெட்டிய பனீர்
  • 3 டீஸ்பூன் நெய்
  • 6 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவைக்கேற்ப

அரைக்க

  • 10 பாதாம்பருப்பு, ஊறவைக்கவும்
  • 10 முந்திரிப் பருப்பு ஊறவைக்கவும்
  • 5 பல் பூண்டு
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் தனியாத்தூள்
  • 1 டீஸ்பூன் சர்க்கரை
  • 1 தக்காளி

செய்முறை

  •  
    அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும்.
  • பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும்.
  • குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு… நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, உப்பு சேர்த்து, அரைத்த விழுதைப் போட்டு வதக்கி மூன்றரை கப் நீர் விட்டு, அரிசி, தயிர் சேர்த்து குக்கரை மூடிவிடவும்.
  • ஆவி வந்ததும், குக்கரைத் திறந்து முருங்கைக்காயைச் சேர்த்து வெயிட் போடவும் (முருங்கைக்காயை முதலிலேயே சேர்த்தால் கரைந்துவிடும்).
  • ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். வாணலியில் 3 டீஸ்பூன் நெய், 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் இரண்டையும் சேர்த்து நறுக்கிய பனீரைப் பொரித்து எடுக்கவும்.
  • குக்கரைத் திறந்து, பொரித்த பனீர் துண்டுகளைச் சேர்த்துக் கிளறிவிடவும்.

Nutrition

Serving: 200g | Calories: 321kcal | Carbohydrates: 3.9g | Protein: 25g | Sodium: 18mg | Potassium: 71mg | Vitamin A: 505IU | Vitamin C: 25mg | Calcium: 40mg | Iron: 4.1mg

இதையும் படியுங்கள் : மதிய உணவுடன் சாப்பிட ருசியான முருங்கை கீரை வேர்க்கடலை பிரட்டல் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க! ஒரு சட்டி சோறும் காலியாகும்!