Home அசைவம் காரசாரமா கருவாட்டு கத்தரிக்காய் தொக்கு செஞ்சு பாருங்க சாப்பாடு சாப்பிடாதவங்க கூட ரெண்டு தட்டு சாப்பாடு...

காரசாரமா கருவாட்டு கத்தரிக்காய் தொக்கு செஞ்சு பாருங்க சாப்பாடு சாப்பிடாதவங்க கூட ரெண்டு தட்டு சாப்பாடு சாப்பிடுவாங்க..!

பொதுவா நிறைய பேருக்கு மீனும் கருவாடும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுவும் நிறைய பேரு கருவாட்டு குழம்பு வச்சு கொடுத்தா ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு அவங்களுக்கு கருவாட்டு குழம்பு தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். பழைய சாதத்துக்கு கருவாடும் சின்ன வெங்காயமும் போட்டு எண்ணெயில் பொரிச்சு சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும்னு சொல்லுவாங்க.

-விளம்பரம்-

பழைய சாதத்துக்கு மட்டுமில்லாமல் சுடு சாதத்துக்கும் கருவாட்டு குழம்பு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். அந்த காலத்துல மீன விட கருவாடு தான் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு இந்த கருவாடு வாசனை எல்லாம் பெரும்பாலும் பிடிக்காது ஆனா அவங்களுக்கு நம்ம புடிக்கிற மாதிரி செஞ்சு கொடுத்தோம் அப்படின்னா ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.

அந்த வகையில சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி கருவாடும் கத்திரிக்காயும் சேர்த்து தொக்கு தான் செய்யப் போறோம் இந்த கருவாட்டு கத்திரிக்காய் தொக்கு செஞ்சு கொடுத்தா சுடு சாதத்தில் போட்டு சாப்பிட எல்லாரும் ஆசைப்படுவாங்க நம்ம வீட்ல வைக்கிற இந்த தொக்கோட வாசனை பக்கத்து தெரு வரைக்கும் இருக்கும் அந்த அளவுக்கு இதோட ருசியும் வாசனையும் செம சூப்பரா இருக்கும். மீன் வாங்க காசு பத்தல அப்படின்னா இந்த கருவாட்டு குழம்பு வச்சா போதும் மீனை கூட மறந்துடுவாங்க.

எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த கருவாட்டு கத்திரிக்காய் தொக்கு பல பேரு பலவிதமா செஞ்சாலும் கிராமத்து ஸ்டைலில் ரொம்ப டேஸ்டா இருக்கக்கூடிய விதத்துல ரொம்ப குறைவான பொருட்களை வைத்து சீக்கிரமா நம்ம இந்த தொக்கு செஞ்சிடலாம். முன்னாடி நாள் வைக்கிற தொக்கு மீந்து போச்சு அப்படின்னா அடுத்த நாள் காலையில பழைய சாதம் இருந்துச்சுன்னா அது கூட சேர்த்து வச்சு இந்த தொக்கு சாப்பிட்டா பிரியாணி கூட தொட்டுப் போயிடும் அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கிராமத்து முறையில் செய்யக்கூடிய கருவாட்டு கத்திரிக்காய் தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
3.67 from 3 votes

கருவாட்டு கத்தரிக்காய் தொக்கு | Dry Fish Brinjal Thokku

பழைய சாதத்துக்கு மட்டுமில்லாமல் சுடு சாதத்துக்கும் கருவாட்டு குழம்பு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். அந்த காலத்துல மீன விட கருவாடு தான் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு இந்த கருவாடு வாசனை எல்லாம் பெரும்பாலும் பிடிக்காது ஆனா அவங்களுக்கு நம்ம புடிக்கிற மாதிரி செஞ்சு கொடுத்தோம் அப்படின்னா ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அடுத்த நாள் காலையில பழைய சாதம் இருந்துச்சுன்னா அது கூட சேர்த்து வச்சு இந்த தொக்கு சாப்பிட்டா பிரியாணி கூட தொட்டுப் போயிடும் அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Dry Fish Brinjal Thokku
Yield: 4
Calories: 128kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ கத்தரிக்காய்
  • 1/4 கிலோ சின்ன வெங்காயம்
  • 100 கிராம் கருவாடு
  • 2 பெரிய தக்காளி
  • 4 பச்சைமிளகாய்
  • 4 பல் பூண்டு
  • 2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • 1 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கருவாட்டை சுடு தண்ணீரில் சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • பூண்டை நன்றாக தட்டி எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு அதில் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும்
  • தட்டிய பூண்டையும் சேர்த்து அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு கத்திரிக்காயை நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • இப்பொழுது மஞ்சள் தூள் மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
  • கத்திரிக்காய் ஓரளவு வெந்தவுடன் கருவாடு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் சுவையான கருவாட்டுக் கத்திரிக்காய் தொக்கு தயார்

Nutrition

Serving: 100g | Calories: 128kcal | Carbohydrates: 33.3g | Protein: 14g | Sodium: 35mg | Potassium: 186mg

இதையும் படியுங்கள் : ருசியான நெத்திலி கருவாடு வறுவல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! வீட்ல பழைய சாதம் இருந்தா அதன் கூட சாப்பிட்டு பாருங்க இதன் ருசியே தனி தான்!

-விளம்பரம்-