கிராமத்து சுவையில் மண மணக்கும் கருவாடு மசாலா பொரியல் ஒருமுறை இவ்வாறு செய்து பாருங்கள். இந்த குழம்பின் வாசனைக்கு வீட்டில் உள்ள அனைவரின் வாயிலும் எச்சில் ஊற ஆரம்பிக்கும்.ஒரு சிலருக்கு கறியை விட மீன் மற்றும் கருவாட்டின் மீது அதிக விருப்பம் இருக்கும். இப்படி கருவாட்டு பிரியர்களுக்கு கருவாடு மசாலா என்றால் சொல்லவே வேண்டாம், வாயில் இருந்து எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு சுவையாக இருக்க கூடியது இந்த கருவாடு மசாலா பொரியல்
என்னதான் இன்றைய அவசர உலகத்தில் வேகவேகமாக சமையல் செய்து சட்டென முடித்து விட்டாலும் அதன் சுவை சொல்லும்படியாக இருப்பதில்லை. ஆனால் நமது , பாட்டி காலத்தில் எல்லாம் வீட்டில் நமது செய்யும் குழம்பு பத்து வீடு தாண்டியும் அதன் வாசனை சென்றிருக்கும். அவ்வாறு பாரம்பரிய கை பக்குவம் மிகவும் அருமையாக இருந்தது. வாருங்கள் அதேபோல் கிராமத்து சுவையில் இந்த கருவாடு மசாலா பொரியல் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கருவாடு மசாலா பொரியல் | Dry Fish Fry Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 100 கிராம் கருவாடு
- 1 தக்காளி
- 50 கிராம் சின்ன வெங்காயம்
- 10 பல் பூண்டு
- 10 வரமிளகாய்
- 2 துண்டு தேங்காய்
- மஞ்சள்தூள் சிறிதளவு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
தாளிக்க
- வெந்தயம் சிறிதளவு
- சோம்பு சிறிதளவு
- சீரகம் சிறிதளவு
செய்முறை
- முதலில் கருவாட்டை எடுத்து மண் போகும் அளவுக்கு நன்கு கழுவி சுத்தம் செய்து சிறுதுண்டாக நறுக்கி கொள்ளவும்.
- பின்பு வெங்காயம், தக்காளி, பூண்டு இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும், மிக்சி ஜாரில் மிளகாய், தேங்காய், சோம்பு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில்கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, சீரகம் போட்டு தாளித்து கொள்ளவும், அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
- அதனுடன்மிக்சி ஜாரில் அரைத்த விழுது, அரை டம்ளர் தண்ணீர் விட்டு, சிறுதுண்டாக நறுக்கிய கருவாட்டையும் போட்டு பச்சை வாசனை போகும் வரை கெட்டியாக வந்ததும் இறக்கினால் சுவையான கருவாடு மசாலா பொரியல் ரெடி.