கரூர் ஸ்பெஷல் வாத்துக்கறி பெப்பர் வறுவல் இப்படி செஞ்சு பாருங்க, இதனுடைய சுவைக்கு நாக்கு அடிமையாகிவிடும்!

- Advertisement -

வித்தியாசமாக இப்படி ஒரு வாத்துக்கறி பெப்பர் வறுவல் செய்து பாருங்கள். கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சாப்பிடுவதற்கு இது மிகவும் ருசியாக  இருக்கும். வாத்துக்கறி வறுவல் பிரியர்கள் இதை கட்டாயம் மிஸ் பண்ண கூடாது. ரசம் சாதம் தயிர் சாதம் இவைகளுக்கு தொட்டு சாப்பிட அருமையான சைட் டிஷ் இது. தேவைப்பட்டால் வைட் கலரில் இருக்கக்கூடிய புலாவுக்கு சைடிஷ் ஆகவும் இதைத் தொட்டு சாப்பிடலாம். அத்தனை அருமையாக இருக்கும், எனவே வாத்துக்கறி பெப்பர் வறுவல் செய்யும் செய்முறையை தெரிந்து கொள்வோம்.

-விளம்பரம்-
Print
No ratings yet

வாத்துக்கறி பெப்பர் வறுவல் | Duck Pepper Fry

வாத்து பெப்பர் வறுவல் செய்து பாருங்கள், கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சாப்பிடுவதற்கு இது மிகவும் ருசியாக  இருக்கும். அருமையாக இருக்கும். எனவே வாத்து பெப்பர் வறுவல் செய்யும் செய்முறையைதெரிந்து கொள்வோம்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Course: Fry, LUNCH
Cuisine: Karur, tamilnadu
Keyword: Duck Pepper Fry
Yield: 4
Calories: 119kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ வாத்துக்கறி
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவைக்கேற்ப
  • 1/4 டீஸ்பூன் தயிர்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

தாளிக்க

  • 4 காய்ந்த மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 6 பல் பூண்டு
  • 2 கொத்து கறிவேப்பிலை

அரைக்க : –

  • 2 காய்ந்த மிளகாய்
  • 6 மிளகு
  • 1 டீஸ்பூன் தனியா தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்

செய்முறை

  • வாத்துக் கறியை சுத்தம் செய்து கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த வாத்துக்கறி துண்டுகளைப் போட்டு மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிரட்டி ஊற வைக்க வேண்டும்.
  • வாணலியில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், ஆகியவற்றை போட்டு வறுக்கவும். வறுத்த பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ள வேண்டும்.
  • வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் கறி துண்டுகளை போட்டு ஒரு முறை நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
  • மற்றொரு வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். அதன் பிறகு தாளித்தவற்றை வேக வைத்த வாத்துக் கறியுடன் சேர்த்து கலக்கி சிறிது நேரம் கழித்து இறக்கி விடவும்.

Nutrition

Calories: 119kcal | Protein: 23.5g | Fat: 2g | Sodium: 89mg | Iron: 3.9mg
- Advertisement -