இவ்வளவு நாட்கள் இது தெரியாம போச்ச ருசியான தேங்காய்பால் சாதம் ஈஸியாக ஒரு முறை இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

அதிகப்படியான மசாலா பொருட்களை சேர்த்து, செய்வது பிரியாணி. மசாலா பொருட்களை குறைவாக சேர்த்து கொஞ்சம் நெய்விட்டு தேங்காய்பால்  சேர்த்து தேங்காய்பால் சாதம் செய்வார்கள். வெள்ளையாக  தேங்காய்பால் சாதம் செய்துவிட்டு, இதற்கு சைட் டிஷ் ஆக நீங்கள் சைவம் அல்லது அசைவத்தில் எந்த குருமாவை வேண்டுமென்றாலும் பரிமாறலாம்.

-விளம்பரம்-

தேங்காய்பால் நிறைந்து செய்யப்படுவதால் சுவைப்பதற்கு ருசியான உணவாக உள்ளது. தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், எலும்புகளை வலுமைப்படுத்தும் இது போன்ற உடலுறுப்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்.  பக்குவமாக வெள்ளை நிறத்தில் இந்த தேங்காய்பால் சாதத்தை எப்படி செய்வது. தெரிந்து கொள்வோம் வாருங்கள். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை உங்களுடைய வீட்டில் இத ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -
Print
4.67 from 3 votes

சுலபமான தேங்காய்பால் சாதம் | Easy Coconut milk Rice

அதிகப்படியானமசாலா பொருட்களை சேர்த்து, செய்வது பிரியாணி. மசாலா பொருட்களை குறைவாக சேர்த்து கொஞ்சம்நெய்விட்டு தேங்காய்பால்  சேர்த்து தேங்காய்பால்சாதம் செய்வார்கள். வெள்ளையாக தேங்காய்பால் சாதம் செய்துவிட்டு, இதற்கு சைட் டிஷ் ஆக நீங்கள் சைவம் அல்லது அசைவத்தில்எந்த குருமாவை வேண்டுமென்றாலும் பரிமாறலாம். தேங்காய்பால் நிறைந்துசெய்யப்படுவதால் சுவைப்பதற்கு ருசியான உணவாக உள்ளது. தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், எலும்புகளை வலுமைப்படுத்தும் இது போன்ற உடலுறுப்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்.  பக்குவமாக வெள்ளை நிறத்தில் இந்த தேங்காய்பால் சாதத்தை எப்படி செய்வது. தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamilnadu
Keyword: Easy CoconutMilk Rice
Yield: 4
Calories: 210kcal

Equipment

  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 2 கப் பாசுமதி அரிசி
  • 2 கப் தேங்காய் பால்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 5 பச்சை மிளகாய்
  • 1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 3 கிராம்பு
  • 2 பிரிஞ்சி இலை
  • சோம்பு சிறிதளவு
  • சீரகம் சிறிதளவு
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா
  • கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

  • முதலில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, சோம்பு, சீரகம் போடவும்
  • பின்னர் கறிவேப்பிலை சேர்த்து, அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் தக்காளி, கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
  • அதனுடன் 2 கப் தேங்காய் பால் சேர்த்து கலக்கவும். இப்போது ஒரு முறை கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து அதனுடன் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வைத்து பின்னர் இறக்கி விடவும்.
  • சுவையான ஈசி தேங்காய் பால் சாதம் ரெடி.

Nutrition

Serving: 500g | Calories: 210kcal | Carbohydrates: 78g | Protein: 12g | Fat: 2.6g | Saturated Fat: 0.3g | Cholesterol: 10mg | Sodium: 5mg | Potassium: 382mg | Fiber: 8g | Sugar: 0.5g | Vitamin A: 4.7IU | Calcium: 8mg | Iron: 2mg