இன்று நாம் காலை உணவுக்கு ஏற்ற முட்டை சப்பாத்தி பற்றி தான் பார்க்க இருக்கிறோம் காலையில் உடனடியாக உணவு செய்யும் அவசர நேரங்களில் இது போன்று முட்டை சப்பாத்தி செய்து சாப்பிடுங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். இதனுடன் வைத்து சாப்பிடுவதற்கு சைடுடிஷ் எதுவும் தேவைப்படாது. நாம் முட்டைகளை துருவி சப்பாத்தியின் உள் ஸ்டஃப் பண்ணி அதன் பின் சப்பாத்தியை தோசை கல்லில் போட்டு வேக வைத்து சாப்பிடும்
இதையும் படியுங்கள் : சுவையான புதினா சப்பாத்தி செய்வது எப்படி ?
பொழுது சப்பாத்தியுடன் உள்ளே இருக்கும் முட்டையும் ஃபிளேவர் இணைந்து சாப்பிடும் போது சுவை அற்புதமாக இருக்கும். காலை உணவாக உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் இதை தயார் செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் பெரியவர்கள் கூட இந்த முட்டை சாப்பாத்தி ரெசிபி பிடித்து போகும். அதனால் நம் முட்டை சப்பாத்தி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
ஸ்டவ்வுடு முட்டை சப்பாத்தி | Egg Chapathi Recipe in Tamil
Equipment
- 1 பெரிய பவுள்
- 1 தோசை கல்
- 1 பெரிய தட்டு
தேவையான பொருட்கள்
முட்டை மசாலா செய்ய
- 3 அவித்த முட்டை துருவியது
- ¼ tbsp மஞ்சள் தூள்
- ½ tbsp மிளகாய் துள்
- ¼ tbsp கரம் மசாலா
- ¼ tbsp மிளகு தூள்
- ¼ tbsp சீரகத் தூள்
- உப்பு
- 1 கைப்பிடி கொத்த மல்லி
சப்பாத்தி மாவு பிசைய
- 1 ½ கப் கோதுமை மாவு
- 2 tbsp எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
- தண்ணீர் தேவையான அளவு
செய்முறை
- முதலில் மூன்று முட்டைகளை அவித்து எடுத்து வைத்துக் கொண்டு பின் ஒரு தட்டில் அந்த மூன்று முட்டைகளையும் துருவி சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு துருவி அந்த முட்டையுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் கரம் மசாலா, கால் டீஸ்பூன் மிளகு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- பின் நாம் சேர்த்த மசாலா பொருட்களை நன்கு கலந்து விட்டு பின் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்பு ஒரு பவுளில் ஒன்றைக் அளவிற்கு கோதுமை மாவு எடுத்து அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் இரண்டு டீஸ்பூன் அளவ எண்ணெய் ஊற்றி ஒரு முறை கலந்து கொள்ளவும்.
- பின் மாவுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளுங்கள். பின்பு ஒரு ஐந்து நிமிடம் முடி ஊறவிட்டு பின் எப்போதும் சப்பாத்திக்கு உருண்டை பிடிக்கும் அளவில் உருண்டை பிடித்து பூரிக்கட்டையில் வைத்து நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள்.
- பின் நாம் முதலில் துருவி மசாலா கலந்த முட்டையிலிருந்து இரண்டு டீஸ்பூன் எடுத்து வைத்து சப்பாத்தியை பாதியாக மூடிவிட்டு அதன் ஓரங்களை மடித்து விட்டு முள் கரண்டியால் மீண்டும் சப்பாத்தியின் ஓரங்களை அழுத்தி விடவும்.
- பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் சப்பாத்தி சேர்த்து திருப்பி எடுத்துக் கொள்ளவும் அவ்வளவுதான் நாம் சப்பாத்தியின் உள்ள வைத்திருக்கும் முட்டையும் நன்றாக வெந்துவிடும். எந்த சைட்டிஷ் இல்லாமல் அப்படியே சாப்பிடலாம்