நாவில் எச்சில் ஊரும் சுவையில் முட்டை கட்லெட் குழம்பு ஒரு முறை ருசித்து விட்டால் மீண்டும் அடிக்கடி செய்வீர்கள்!

- Advertisement -

முட்டை கட்லெட் குழம்பு செய்வது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. முட்டையை தனியாக கட்லெட் போல் செய்து எடுத்து குழம்பில் போட்டு கொதிக்க விட்டால் போதும் முட்டை கட்லெட் குழம்பு ரொம்பவே டேஸ்டாக நமக்கு கிடைத்துவிடும். எல்லோருமே விரும்பி சாப்பிடக்கூடிய இந்த முட்டை குழம்பை உடைத்து அப்படியே ஊற்றினால் பலருக்கும் பிடிக்காமல் போய்விடும்! ஆனால் இது போல் கட்லெட் போல் செய்து குழம்பு வைக்கும் பொழுது எல்லோருமே விரும்பி சாப்பிட்டு விடுவார்கள்.

-விளம்பரம்-

சிக்கன், மட்டன் சமைக்க முடியாத நேரத்தில் முட்டையை வைத்து ஏதாவது செய்து சாப்பிட்டால் கூட ஒரு முழு அசைவ சமையலை சாப்பிட்ட திருப்தி கிடைத்து விடும். இந்த முட்டையை வைத்து அசைவ குழம்பே தோற்றுப் போகக் கூடிய வகையில் சூப்பரான முட்டை கட்லெட் குழம்பு செய்வது சுலபம்.

- Advertisement -

முட்டை கட்லெட் குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி, மட்டுமின்றி சாதம், காய்கறி பிரியாணி, புலாவ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  இதனை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யலாம்.  முட்டையை அவித்து அல்லது ஆம்லெட் செய்வதற்கு பதிலாக முட்டையை கட்லெட் செய்து செய்யக்கூடிய குழம்பு வகை தான் இது. மிகவும் சூப்பரான சுவையில் இருக்கும் இதனை குழந்தைகளும் மிக விருப்பமாக சாப்பிடுவார் இந்த  சுவையான முட்டை கட்லெட் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.

Print
5 from 1 vote

முட்டை கட்லெட் குழம்பு | Egg Cutlet Gravy Recipe In Tamil

முட்டை கட்லெட் குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி,மட்டுமின்றி சாதம், காய்கறி பிரியாணி, புலாவ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  இதனை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யலாம்.  முட்டையை அவித்து அல்லது ஆம்லெட் செய்வதற்கு பதிலாகஉடனடியாக முட்டையை கட்லெட் செய்து செய்யக்கூடிய சுலபமான குழம்பு வகை தான் இது. மிகவும்சூப்பரான சுவையில் இருக்கும் இதனை குழந்தைகளும் மிக விருப்பமாக சாப்பிடுவார் இந்த  சுவையான முட்டை கட்லெட் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும்என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Egg Cutlet Kulambu
Yield: 4
Calories: 61kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 6 முட்டை
  • 1/2 கப் கேரட் துருவல்
  • 1/4 கப் பொட்டுக்கடலை மாவு
  • 8 மிளகாய்
  • 1/2 துண்டு இஞ்சி
  • தேக்கரண்டி சோம்பு
  • கசகசா
  • 6 பல் பூண்டு
  • 2 பெரிய வெங்காயம்
  • 1/4 மூடி தேங்காய்
  • 2 தக்காளி பழம்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • உப்பு தேவைக்கேற்ப
  • மல்லி சிறிதளவு
  • நல்லெண்ணெய் சிறிதளவு

செய்முறை

  • முதலில் பூண்டு இஞ்சியை தனியாக அரைத்துக்கொள்ளவும். பின்பு மிளகாயை வதக்கி மை போல் அரைத்துகொள்ளவும்.
  • மிக்ஸியில் வெங்காயம், தக்காளி, சீரகம், கசகசா ஆகியவற்றை தனியாக வறுத்து தேங்காயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின்பு முட்டையை நன்றாகக் கடைந்து, அத்துடன் உப்பு, கேரட் துருவல், பொட்டுக்கடலை மாவு கால் தேக்கரண்டி, அரைத்த மிளகாய் விழுதை சேர்த்து நன்றாக கலக்கி நெய் தடவி சிறு கிண்ணங்களில் ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்து வைக்கவும்,
  •  
    வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ந்ததும் பூண்டு இஞ்சியை போட்டு வதக்கவும், எண்ணெய் பிரியும்போது நறுக்கிய வெங்காயம், தக்காளியைப் போடவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அரைத்து வைத்துள்ள மசாலா சாமான்கள், மிளகாய் விழுது, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, 2 கப் தண்ணீர் விட்டு 20 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • பின் கலவையை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி கரைத்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். இதை சப்பாத்தி, புரோட்டாவிற்கு பரிமாறலாம்.

Nutrition

Serving: 100g | Calories: 61kcal | Carbohydrates: 7g | Protein: 1.2g | Fat: 0.5g | Potassium: 405mg | Calcium: 32mg | Iron: 1.2mg

இதையும் படியுங்கள் : சிக்கன் லெக் பீசில் சூப்பரான கால்சி கபாப் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!