Home அசைவம் சப்பாத்தி பூரிக்கு இந்த மாதிரி முட்டை நெய் ரோஸ்ட் செஞ்சு பாருங்க!

சப்பாத்தி பூரிக்கு இந்த மாதிரி முட்டை நெய் ரோஸ்ட் செஞ்சு பாருங்க!

எப்போவுமே நம்ம சப்பாத்தி பூரி செஞ்சா அதுக்கு சைடுஷா உருளைக்கிழங்கு குருமா காலிஃப்ளவர் குருமா வெஜிடபிள் குருமா சிக்கன் குருமா காளான் குருமா முட்டை குருமா வைப்போம் என்னதான் நம்ம இதுவரைக்கும் ஒரு டிஃபரண்டான முறையில் முட்டை குருமா வச்சிருந்தாலும் இப்போ பாக்க போற இந்த முட்டை நெய் ரோஸ்ட் நீங்க எதிர்பார்க்காத அளவிற்கு சப்பாத்தி பூரிக்கு ஒரு சூப்பரான காமினேஷனா.

-விளம்பரம்-

சப்பாத்தி பூரிக்கு மட்டுமில்லாமல் இட்லி தோசை சாதத்துக்கும் இது ஒரு சூப்பரான காம்பினேஷனா இருக்கும். உங்க வீட்ல சப்பாத்தி செய்ய போறீங்க அப்படின்னா கண்டிப்பா ஒரு தடவை இல்ல முட்டை நீ ரோஸ்ட் சென்று சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்க எப்போ சப்பாத்தி சுட்டாலும் இந்த மாதிரி முட்டை ரெசிபி தான் வைத்து சாப்பிடுவீங்க. முக்கியமா குழந்தைகளுக்கு இந்த கிரேவி ரொம்பவே பிடிக்கும்.

இரண்டு சப்பாத்தி எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க. உங்க வீட்ல ஏதாவது டிரையா புலாவ் தேங்காய் சாதம் செஞ்சா கூட இந்த முட்டை நெய் ரோஸ்ட் வச்சுக்கோங்க சாப்பிடுறதுக்கு அல்டிமேட்டா இருக்கும். மசாலா கூட நம்ம வறுத்து அரச்சி சேர்க்கிறதால மணமும் சுவையும் ரொம்ப வெயிட் டேஸ்ட்டா இருக்கும். கண்டிப்பா உங்க வீட்ல இன்னிக்கி கூட இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க ரொம்பவே ஈஸியாக டேஸ்டான ரெசிபி தான் இது. சுவையான முட்டை நெய் ரோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
No ratings yet

முட்டை நெய் ரோஸ்ட் | Egg Ghee Roast Recipe In Tamil

எப்போவுமே நம்ம சப்பாத்தி பூரி செஞ்சா அதுக்கு சைடுஷா உருளைக்கிழங்கு குருமா காலிஃப்ளவர் குருமாவெஜிடபிள் குருமா சிக்கன் குருமா காளான் குருமா முட்டை குருமா வைப்போம் என்னதான் நம்மஇதுவரைக்கும் ஒரு டிஃபரண்டான முறையில் முட்டை குருமா வச்சிருந்தாலும் இப்போ பாக்க போறஇந்த முட்டை நெய் ரோஸ்ட் நீங்க எதிர்பார்க்காத அளவிற்கு சப்பாத்தி பூரிக்கு ஒரு சூப்பரானகாமினேஷனா. கண்டிப்பா உங்க வீட்ல இன்னிக்கி கூட இந்த ரெசிபியைசெஞ்சு பாருங்க ரொம்பவே ஈஸியாக டேஸ்டான ரெசிபி தான் இது.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Egg Ghee Roast
Yield: 4
Calories: 245kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 முட்டை
  • 1 டீஸ்பூன் மல்லி விதைகள்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 12 பல் பூண்டு
  • 4 காய்ந்த மிளகாய்
  • புளி சிறிய எலுமிச்சை பழ அளவு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • நெய் தேவையான அளவு 

செய்முறை

  • முதலில் முட்டையை வேக வைத்து எடுத்து இரண்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் மல்லி விதைகள் சீரகம் வெந்தயம் மிளகு பட்டை கிராம்பு சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்துஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்
  • பிறகு கதை கடாயில் நெய் சேர்த்து பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து அதனையும் ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அனைத்தையும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் தேவையான அளவு நெய் ஊற்றி அதில் கருவேப்பிலை சேர்க்க புரிந்ததும் அரைத்து வைத்துள்ளவிழுதை சேர்த்த நன்றாக கிளறவும்.
  • தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் நன்றாக வேக வைத்த பின்னர் முட்டையை சேர்த்து நன்றாக பொறுமையாக கிளறவும்
  • இறுதியாக கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் சுவையான முட்டை நெய் ரோஸ்ட் தயார்

Nutrition

Serving: 300g | Calories: 245kcal | Carbohydrates: 199g | Protein: 12g | Potassium: 23.2mg | Vitamin A: 13IU | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் ரோட்டு கடை ஸ்டைல் முட்டை மசாலா இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!