Home அசைவம் காரசாரமான ருசியில் ரோட்டு கடை ஸ்டைல் முட்டை மசாலா இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!

காரசாரமான ருசியில் ரோட்டு கடை ஸ்டைல் முட்டை மசாலா இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!

ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! ரோட்டுக்கடை உணவுகள் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பானிபூரி, மசாலா பூரி, பேல் பூரி, சிக்கன் பக்கோடா, காளான் என எதுவாக இருந்தாலும் நாம் கடைகளில் சப்புக்கொட்டி சாப்பிடுவோம். அவை ஆரோக்கியமான உணவு இல்லை என்று நமக்கு நன்றாக தெரியும். ஆனால்‌ அதில் இருக்கும் சுவை நாக்கில் தாண்டவமாடும். என்னதான் வீட்டில் சுவையாக சமைத்து கொடுத்தாலும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வீட்டில் செய்யும் உணவுப்பொருட்களை விட வெளி உணவகங்களில் சாப்பிடும் உணவுப் பொருட்களின் சுவைதான் மிகவும் பிடித்திருக்கும். அதுவும் இந்த ரோட்டுக் கடையில் கிடைக்கும் முட்டை மசாலாவின் சுவை மிகவும் அருமையாகத்தான் இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த முட்டை மசாலாவை ரோட்டு கடையின் சுவையிலேயே வீட்டில் எவ்வாறு சமைப்பது என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

-விளம்பரம்-

ஒவ்வொரு ஊரிலும் பிரசித்தி பெற்ற உணவுகள் பல இருக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் மும்பை நகரின் பிரசத்தி பெற்ற ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை காண உள்ளோம். மும்பை ஸ்ட்ரீட் புட்களில் ஒன்றான முட்டை மசாலாவை இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இது வழக்கமாக நாம் சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்த ரெசிபியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை இருக்கும். வாருங்கள்! ருசியான முட்டை மசாலாவை ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Print
4 from 2 votes

ரோட்டுக்கடை முட்டை மசாலா | Street Food Egg Masala Recipe In Tamil

ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! ரோட்டுக்கடை உணவுகள் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பானிபூரி, மசாலா பூரி, பேல் பூரி, சிக்கன் பக்கோடா, காளான் என எதுவாக இருந்தாலும் நாம் கடைகளில் சப்புக்கொட்டி சாப்பிடுவோம். அவை ஆரோக்கியமான உணவு இல்லை என்று நமக்கு நன்றாக தெரியும். ஆனால்‌ அதில் இருக்கும் சுவை நாக்கில் தாண்டவமாடும். என்னதான் வீட்டில் சுவையாக சமைத்து கொடுத்தாலும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வீட்டில் செய்யும் உணவுப்பொருட்களை விட வெளி உணவகங்களில் சாப்பிடும் உணவுப் பொருட்களின் சுவைதான் மிகவும் பிடித்திருக்கும். அதுவும் இந்த ரோட்டுக் கடையில் கிடைக்கும் முட்டை மசாலாவின் சுவை மிகவும் அருமையாகத்தான் இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: evening
Cuisine: Indian
Keyword: Street Food Egg Masala
Yield: 3 People
Calories: 67kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 முட்டை
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1/2 டீஸ்பூன் தனியா தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் முட்டையை வேக வைத்து அதன் தோலை உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் வெங்காயம், தக்காளி, பூண்டு, மல்லி இலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து பின் நறுக்கி வைத்துள்ள பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • அதன்பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் பொடியாக நறுக்கிய மல்லி இலை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், கரம் மசாலத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி நறுக்கி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்த்து கலந்து வேக வைக்கவும்.
  • பின் தண்ணீர் வற்றி வந்தவுடன் நறுக்கிய மல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான ரோட்டுக்கடை முட்டை மசாலா தயார். இந்த முட்டை மசாலா ரோட்டு கடைகளில் கிடைக்கும் சப்பாத்தி, பிரெட், கலந்த சாதத்துடனும் சுவைக்கலாம்.

Nutrition

Serving: 300g | Calories: 67kcal | Carbohydrates: 6g | Protein: 6.64g | Fat: 4.5g | Sodium: 130mg | Potassium: 128mg | Fiber: 5.4g | Vitamin A: 200IU | Vitamin C: 15mg | Calcium: 24mg | Iron: 9.1mg

இதனையும் படியுங்கள் : வட இந்திய ஸ்டைல் ரோட்டு கடை பட்டாணி மசாலா இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க