வட இந்திய ஸ்டைல் ரோட்டு கடை பட்டாணி மசாலா இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க

- Advertisement -

மாலை நேரத்துல அப்படியே நம்ம ரோட்டு பக்கமா நடந்து போனோம் அப்படின்னா நம்ம கண்ணுக்கு மசால் பூரி பானி பூரி மசாலா சுண்டல் மசாலா, காளான் மசாலா, பட்டாணி மசாலா அப்படின்னு நிறைய ஐட்டங்கள் கிடைக்கும். அத பார்த்தவுடனே குழந்தைங்க அத வாங்கி தர சொல்லி அடம் பிடிப்பாங்க. நம்மளும் வாங்கி கொடுப்போம் ஆனால் கடைகளில் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும்போது இப்பெல்லாம் ரொம்பவே பார்த்து தான் வாங்கி கொடுக்க வேண்டியது இருக்கு.

-விளம்பரம்-

காரணம் இப்போ எல்லா கடைகளிலும் ஆரோக்கியமற்ற முறையில் தான் சமைக்கிறாங்க அதனால கடைகள்ல கிடைக்கிறது மாதிரியே சுவைல நம்மளை வீட்டிலேயே குழந்தைகள் கேட்கிற மாதிரி எது வேணாலும் செஞ்சு கொடுக்கலாம். அந்த வகையில இன்னைக்கு ரோட்டு கடைகளில் கடைக்கு குடிக்க சூப்பர் டேஸ்டான பட்டாணி மசாலா தான் செய்யப் போறோம். இந்த பட்டாணி மசாலா செய்வதற்கு நமக்கு குறைவான பொருட்கள் மட்டுமே தேவைப்படும் மிகவும் ஆரோக்கியமான இந்த பட்டாணி மசாலா செய்வதற்கு குறைவான நேரம் மட்டும்தான் தேவைப்படும். ஆனால் டேஸ்ட் கடைகள்ல கிடைக்கிற மாதிரியான அதே டேஸ்ட்டே இருக்கும்.

- Advertisement -

மாலை நேரத்துல குழந்தைங்க ஸ்கூல் விட்டு வரும்போது இதை செஞ்சு கொடுத்தோம் அப்படின்னா கண்டிப்பாக குழந்தைகள் ஜாலியாகி சாப்பிட்டு முடிச்சுட்டு படிக்க ஆரம்பிச்சிடுவாங்க. அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான மசாலா தான் இந்த பட்டாணி மசாலா. குழந்தைங்க மட்டும் இல்லாம பெரியவங்களும் ரொம்ப வேக விரும்பி சாப்பிடுவாங்க அதனால உங்க வீட்ல இருக்கிற எல்லோருக்குமே இத செஞ்சு கொடுங்க கண்டிப்பா சாப்பிட்டு உங்களை பாராட்டுவாங்க.

அதுக்கப்புறம் கடைகளுக்கு போய் பட்டாணி மசாலா வாங்கிய சாப்பிட மாட்டாங்க சாப்பிடணும் அப்படின்னு தோணுச்சுன்னா வீட்லயே செஞ்சு சாப்பிடுவீங்க அந்த அளவுக்கு இந்த ரெசிபி நமக்கு பெர்பெக்டா கிடைக்கும். இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான ஆரோக்கியமான பட்டாணி மசாலா வீட்டிலேயே எப்படி சீக்கிரத்துல செஞ்சு கொடுக்கிறது என்று பார்க்கலாம்

Print
2.34 from 3 votes

ரோட்டு கடை பட்டாணி மசாலா | Peas Masala In Tamil

மாலை நேரத்துல குழந்தைங்க ஸ்கூல் விட்டு வரும்போது இதை செஞ்சு கொடுத்தோம் அப்படின்னா கண்டிப்பாக குழந்தைகள் ஜாலியாகி சாப்பிட்டு முடிச்சுட்டு படிக்க ஆரம்பிச்சிடுவாங்க. அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான மசாலா தான் இந்த பட்டாணி மசாலா. குழந்தைங்க மட்டும் இல்லாம பெரியவங்களும் ரொம்ப வேக விரும்பி சாப்பிடுவாங்க அதனால உங்க வீட்ல இருக்கிற எல்லோருக்குமே இத செஞ்சு கொடுங்ககண்டிப்பா சாப்பிட்டு உங்களை பாராட்டுவாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Road shop Pattani Masala
Yield: 4
Calories: 240kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பட்டாணி
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பூண்டு
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் சாம்பார் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  •  
    பட்டாணியை முதலில் எட்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.பட்டாணி ஊறிய பிறகு ஒரு குக்கரில் சேர்த்து தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நான்கு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்
  • பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  • பிறகு அதில் சாம்பார் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்
  •  
    ஐந்து நிமிடங்கள் கழித்து வேக வைத்துள்ள பட்டாணியை சேர்த்து கொள்ளவும் சிறிதளவு பட்டாணி மட்டும் நன்றாக நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்
  • பத்து நிமிடங்கள் பட்டாணியும் மசாலாவும் சேர்ந்து நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பரிமாறினால் சுவையான ரோட்டு கடை பட்டாணி மசாலா தயார்

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 5.5g | Cholesterol: 5.5mg | Potassium: 104mg | Calcium: 13mg

இதையும் படியுங்கள் : சப்பாத்திக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு சப்பாத்தி கூட சாப்பிட வாங்க!

-விளம்பரம்-