- Advertisement -
முட்டை குழம்பு என்றாலே அனைவர்க்கும் மிகவும் பிடித்த குழம்பாகும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
வேகவைத்த முட்டையில் உடலுக்கு தேவையான நன்மைகள் அடைங்கியுள்ளது.
- Advertisement -
முட்டையில் அத்தியாவசிய தாதுக்கள் வைட்டமின்கள் உள்ளன.இதனால் தான் முட்டையை சூப்பர் ஃபுட் என்று சொல்வார்கள்.
-விளம்பரம்-
முட்டையை வேகவைத்து சாப்பிடுவதனால் உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட.
இந்த முட்டை குழம்பை சுலபமாகவும் சுவையாகவும் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். சுவையான இந்த முட்டை குழம்பை நீங்களும் சமைத்து பாருங்கள்.
முட்டை குழம்பு
முட்டை குழம்பு என்றாலே அனைவர்க்கும் பிடித்தமான குழம்பாகும்.பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.வேகவைத்த முட்டையில் உடலுக்கு தேவையான நன்மைகள் அடைங்கியுள்ளது.முட்டையில் அத்தியாவசிய தாதுக்கள் வைட்டமின்கள் உள்ளன.இதனால் தான் முட்டையை சூப்பர் ஃபுட் என்று சொல்வார்கள்.
Yield: 3 people
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
முட்டை புரட்டுவதற்கு தேவையான பொருட்கள்.
- 6 முட்டை வேகவைத்தது
- 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- ¼ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
- ½ டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
- உப்பு தேவையான அளவு
- ¼ டேபிள் ஸ்பூன் மிளகு பொடி
முட்டை குழம்பு செய்வதற்கான பொருட்கள்.
- 1 பட்டை
- 2 ஏலக்காய்
- 3 கிராம்பு
- ½ டேபிள் ஸ்பூன் சீரகம்
- 2 வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது
- 3 பச்சைமிளகாய்
- ½ மஞ்சள் தூள்
- 1 கரம் மசாலா
- 1 மல்லித்தூள்
- 2 மிளகாய்த்தூள்
- 1 தக்காளி நறுக்கியது
- ½ கப் தேங்காய் அரைத்தது
செய்முறை
முட்டை புரட்டுவது.
- முதலில் வேகவைத்த முட்டையை சிறிதாக கீறிவிடவும்.பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,கொஞ்சம் உப்பு, சிறிதளவு மிளகு பொடி சேர்த்து கலந்து விடவும். பிறகு முட்டை சேர்த்து சிறிது நேரம் புரட்டிவிடவும்.
குழம்பு செய்வது.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானபிறகு அதில் பட்டை,கிராம்பு,ஏலக்காய்,சீரகம் சேர்த்து கலந்து விடவும்.
- பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வரும்வரை வதக்கவும்.
- வதங்கிய பிறகு பச்சைமிளகாய், மஞ்சள்தூள், கரம்மசாலா, மல்லித்தூள், மிளகாய்தூள் அதனுடன் சேர்த்து கலந்து விடவும்.
- பின்பு அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
- தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து கலந்து சிறிது நேரம் வேக விடவும்.
- எண்ணெய் பிரிந்து வந்த பிறகு அரைத்த தேங்காவை சேர்த்து 2 நிமிடம் வேகவிடவும்.
- வெந்த பிறகு அதில் முட்டை சேர்த்து அதன் மேல் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை தூவி விடவும்.
- இப்பொழுது சுவையான முட்டை குழம்பு தயார்…
Nutrition
Serving: 260g | Fat: 20g