மாலை நேரம் ஸ்நாக்ஸ் சாப்பிட ரூசியானஎக் லாலிபாப் ஒரு தடவை இப்படி செஞ்சு குழந்தைகளுக்கு கொடுங்க!

- Advertisement -

எல்லா குழந்தைகளுக்கும் ஸ்கூல் லீவ் விட போறாங்க அப்போ எல்லாரும் வீட்ல இருக்கும்போது டெய்லி ஏதாவது ஸ்னாக்ஸ் கேட்டு தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அவங்களுக்கு ஏதாவது ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுக்க நம்ம புதுசு புதுசா ஏதாவது கத்துக்கிட்டே தான் இருக்கணும் அந்த வகையில குழந்தைகளுக்கு லாரி பாப் அப்படின்னா ரொம்ப பிடிக்கும் லாலிபாப் கடையில வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே முட்டை வச்சு எக் லாலிபாப் செஞ்சு கொடுத்தா கண்டிப்பா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

முட்டை சாப்பிடுவது உடம்புக்கு ரொம்பவே நல்லது சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் ரொம்பவே ஆரோக்கியம் அப்படின்னு சொல்லலாம். அந்த வகையில முட்டை சாப்பிடாத சில குழந்தைகளுக்கு இல்ல ஸ்னாக்ஸ் கேட்டாலும் பிடிக்கிற சில குழந்தைகளுக்கு ரொம்பவே ஈஸியா செய்யக்கூடிய இந்த எக்லாலிபாப் செஞ்சு கொடுத்து அசத்துங்க கண்டிப்பா அவங்க விரும்பி சாப்பிடுவாங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுத்தா உங்களை பாராட்டிட்டு தான் போவாங்க.

- Advertisement -

முட்டை வச்சு நம்ம பலவிதமான ஸ்னாக்ஸ் ட்ரை பண்ணி சாப்பிட்டு இருப்போம் ஆனால் ஒரு தடவை இந்த எக்லாலிபாப் செஞ்சு பாருங்க உள்ள சாஃப்டா வெளில நல்லா மொறுமொறுன்னு சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா இருக்கும். பிரட் தூள் சேர்த்து இதை நம்ம செய்றதால மொறுமொறுப்பு இன்னுமே அதிகமா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான குழந்தைகளுக்கு ரொம்ப புடிச்ச அட்டகாசமான ஒரு ஸ்நாக்ஸ் ஆன எக்லாலிபாப் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்

Print
No ratings yet

எக் லாலிபாப் | Egg Lollypop Recipe In Tamil

முட்டை சாப்பிடுவது உடம்புக்கு ரொம்பவே நல்லது சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் ரொம்பவே ஆரோக்கியம் அப்படின்னு சொல்லலாம். அந்த வகையில முட்டை சாப்பிடாத சில குழந்தைகளுக்கு இல்ல ஸ்னாக்ஸ் கேட்டாலும் பிடிக்கிற சில குழந்தைகளுக்கு ரொம்பவே ஈஸியா செய்யக்கூடியஇந்த எக்லாலிபாப் செஞ்சு கொடுத்து அசத்துங்க கண்டிப்பா அவங்க விரும்பி சாப்பிடு வாங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுத்தாஉங்களை பாராட்டிட்டு தான் போவாங்க. பிரட் தூள் சேர்த்து இதை நம்ம செய்றதால மொறுமொறுப்புஇன்னுமே அதிகமா இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: starters
Cuisine: tamil nadu
Keyword: Egg Lollypop
Yield: 4
Calories: 245kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 3 முட்டை
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • 1/2 கப் பிரட் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முட்டையை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும் ஆறியவுடன் அதனை துருவி எடுத்துக் கொள்ளவும்
  •  
    அதில் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மிளகாய் தூள் நறுக்கிய பச்சை மிளகாய் மிளகுத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  • ஒரு கிண்ணத்தில் மைதா மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • கலந்து வைத்துள்ள முட்டை கலவையில் இருந்து சிறு உருண்டையை எடுத்து மைதா மாவில் நன்றாக முக்கி எடுத்து பிரட் தூளில் பிரட்டி எடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான எக் லாலிபாப் தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 245kcal | Carbohydrates: 199g | Protein: 12g | Sodium: 216mg | Potassium: 23.2mg | Vitamin A: 13IU | Calcium: 14mg

இதையும் படியுங்கள் : மாலை நேரம் சூப்பரான Non-Veg ஸ்நாக்ஸ் சாப்பிட சூப்பரான சிக்கன் கோலா உருண்டை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!