- Advertisement -
குழந்தைகளுக்கு மத்திய உணவாக இந்த முட்டை சாதம் செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்ருவாக ஏனென்றால் இந்த முட்டை சாதம் அவ்வளவு சுவையாகவும், நிறைய பேர் ரோட்டுக்கடை எக் ரைஸ் மிஸ் பானுவாக, றோட்டுக்கடைகளில் எக் ரைஸ் சாப்பிடுவது சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள்.
-விளம்பரம்-
இனி கவலையே வேண்டாம் வீட்டிலேயே சுலபமாகவும், ருசியாகவும் செய்து விடலாம். இந்த ரெசிபி ஒரு முறை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க அப்புறம் உங்க வீட்டில் இருக்கும் எல்லோரும் திரும்ப திரும்ப செய்துகொடு என்று கேட்பாங்க.
- Advertisement -
இந்த ரெசிபி எப்படி செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டிருக்கு அதனை நன்கு படித்து பார்த்து நிகழும் ட்ரை பண்ணுங்க.
முட்டை சாதம் | Egg Masala Rice Recipe In Tamil
குழந்தைகளுக்கு மத்திய உணவாக இந்த முட்டை சாதம் செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்ருவாக ஏனென்றால் இந்த முட்டை சாதம் அவ்வளவு சுவையாகவும், நிறைய பேர் ரோட்டுக்கடை எக் ரைஸ் மிஸ் பானுவாக, றோட்டுக்கடைகளில் எக் ரைஸ் சாப்பிடுவது சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள். இனி கவலையே வேண்டாம் வீட்டிலேயே சுலபமாகவும், ருசியாகவும் செய்து விடலாம். இந்த ரெசிபி ஒரு முறை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க அப்புறம் உங்க வீட்டில் இருக்கும் எல்லோரும் திரும்ப திரும்ப செய்துகொடு என்று கேட்பாங்க. இந்த ரெசிபி எப்படி செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டிருக்கு அதனை நன்கு படித்து பார்த்து நிகழும் ட்ரை பண்ணுங்க.
Yield: 2 people
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- 1 கப் வடித்த சாதம்
- 3 முட்டை
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 1 துண்டு பட்டை
- 1 ஏலக்காய்
- 2 கிராம்பு
- ¼ டீஸ்பூன் சோம்பு
- 1 பெரியவெங்காயம் பொடியாக நறுக்கியது
- 1 பச்சைமிளகாய்
- கறிவேப்பிலை ஒரு கொத்து
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் மல்லித்தூள்
- ¼ டீஸ்பூன் கரம் மசாலா
- 2 தக்காளி பொடியாக நறுக்கியது
- உப்பு தேவைக்கேற்ப
- ½ டீஸ்பூன் பெப்பர்
- கொத்தமல்லி தழை நறுக்கியது கொஞ்சம்
செய்முறை
செய்முறை:
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதக்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- பிறகு மஞ்சள் தூள். மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, இவற்றை சேர்த்து வதக்கவும். அடுத்து தக்காளி சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு குழைய வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் அதே கடாயில் ஓரத்தில் ஒதுக்கி வைக்கவும். பிறகு மறுபக்கம் முட்டையை உடைத்து ஊற்றி பெப்பர் சேர்த்து பொரித்து இரண்டையும் கலந்து விடவும்.
- பிறகு வேக வைத்த சாதத்தை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி கொத்தமல்லி இழைகளை தூவி விடவும்.
- இப்பொழுது முட்டை மசலா ரைஸ் ரெடி.
Nutrition
Carbohydrates: 28.6g | Protein: 5.7g | Fat: 8.9g | Sodium: 221.9mg | Potassium: 133mg | Fiber: 1.4g | Calcium: 62.1mg | Iron: 3mg