முட்டை புளிக்கறி ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க! ஒரு சட்டி சோறும் காலியாகும்!

- Advertisement -

சுவையான முட்டை புளிக்கறி சூடான சாதத்துடன் தொட்டு சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும்.அசைவம் சமைக்க முடியாத நேரத்தில் முட்டையை வைத்து ஏதாவது செய்து சாப்பிட்டால் கூட ஒரு அசைவ சமையலை சாப்பிட்ட திருப்தி கிடைத்து விடும். இந்த முட்டையை வைத்து  அசைவ குழம்பே தோற்றுப் போகக் கூடிய வகையில் சூப்பரான முட்டை புளிக்கறி  எப்படி செய்வது என்று தான் இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

-விளம்பரம்-
Print
5 from 1 vote

முட்டை புளிக்கறி | Egg Tamarind Curry Recipe In Tamil

சுவையான முட்டைபுளிக்கறி சூடான சாதத்துடன் தொட்டு சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும்.அசைவம்சமைக்க முடியாத நேரத்தில் முட்டையை வைத்து ஏதாவது செய்து சாப்பிட்டால் கூட ஒரு அசைவசமையலை சாப்பிட்ட திருப்தி கிடைத்து விடும். இந்த முட்டையை வைத்து  அசைவ குழம்பேதோற்றுப் போகக் கூடிய வகையில் சூப்பரான முட்டை புளிக்கறி  எப்படி செய்வது என்று தான் இப்போது இந்த சமையல்குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamilnadu
Keyword: Egg Tamarind Curry
Yield: 4
Calories: 240kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 முட்டை
  • புளி ஒருநெல்லிக்காய் அளவு
  • 1/4 ஸ்பூன் கடுகு
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவையானஅளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 1/2 ஸ்பூன் மசாலா பொடி

செய்முறை

  • முட்டையை நன்றாக அவித்து உரித்து ஊசியால் ஆங்காங்கே குத்தி வைக்கவும். சின்ன வெங்காயத்தை அரைத்து எடுக்கவும்.
  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, மசாலாப் பொடிகளைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டவும்.
  • புளியை கரைத்து ஊற்றி, அரைத்த வெங்காயம் போட்டு, உப்பும் போடவும். குழம்பு கெட்டியானதும் முட்டையைப் போட்டு இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.

Nutrition

Serving: 1cup | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Fat: 4.1g | Cholesterol: 25mg | Potassium: 104mg | Calcium: 16mg | Iron: 0.9mg
- Advertisement -