ருசியான முட்டை தவா மசாலா இப்படி ஒரு தரம் வீட்டில் செஞ்சி பாருங்க!

- Advertisement -

முட்டைகள் சைவ உணவா சைவ உணவான்னு எல்லாரும் யோசிச்சிட்டு இருக்கும் போது இந்த முட்டையை வைத்து நம்ம அசத்தலான ஒரு உணவு செய்யலாம் அந்த உணவுதான் முட்டை பச்சை நிற தவா மசாலா . என்ன பச்சை நிற தவா மசாலா இது முட்டை தவ மசாலா இந்த தவா மசாலா தான் நம்ம  பச்சை நிறத்தில் செய்ய போறோம். எப்போதும் சிகப்பு நிறத்தில இருக்கும் இல்லனா ஒரு மாதிரி மஞ்சள் நிறத்தில இருக்கும் ஆனா இப்ப நம்ம பண்ண போறது பச்சை நிறத்தில் இருக்கும்போது அதனாலதான் இது முட்டை பச்சை நிற தவா மசாலா அப்படின்னு பெயர் வைத்திருக்கும்.

-விளம்பரம்-

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா சாப்பாடு வச்ச உங்களுக்கு பேர் வைக்க தெரியலையே அப்படி யாரும் சொல்லிடக்கூடாது என்பதற்காக நாங்க செய்த இந்த தவா மசாலாவுக்கு இப்படி ஒரு பேரு வச்சிருக்கோம். முட்டை ரொம்பவே ஆரோக்கியமான ஒரு உணவு பொருள். இதில் அதிக அளவு புரோட்டீன் இருக்கிறது. நீங்க முட்டையில மஞ்சள் கருவை தவிர்த்துட்டு வெள்ளை கருவோட எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம் அதுல கொஞ்சம் கூட கொலஸ்ட்ரால் கிடையாது.

- Advertisement -

நீங்க மஞ்சள் கரு சேர்த்து சாப்பிடும்போது தான் உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கும். ஆனாலும் இரண்டுளையும் கலோரிகள்ல சிறிதளவு வித்தியாசம் காணப்படுறதுனால முட்டை ஒன்று மோசமான உணவு கிடையாது அது ஒரு ஹெல்தியான உணவு தான். அப்படி இந்த முட்டைய நல்லா அவிச்சு அத தவா மசாலா பண்ணி எப்படி சாப்பிடுவது அப்படின்னு இப்போ பாக்கலாம் வாங்க.

Print
No ratings yet

முட்டை தவா மசாலா | Egg Tawa Masala Recipe In Tamil

முட்டைகள் சைவ உணவா சைவ உணவான்னு எல்லாரும் யோசிச்சிட்டு இருக்கும் போது இந்த முட்டையை வைத்து நம்ம அசத்தலான ஒரு உணவு செய்யலாம் அந்த உணவுதான் முட்டை பச்சை நிற தவா மசாலா . என்ன பச்சை நிற தவா மசாலா இது முட்டை தவ மசாலா இந்த தவா மசாலா தான் நம்ம  பச்சை நிறத்தில் செய்ய போறோம். ஆனாலும் இரண்டுளையும் கலோரிகள்ல சிறிதளவு வித்தியாசம் காணப்படுறதுனால முட்டை ஒன்று மோசமான உணவு கிடையாது அது ஒரு ஹெல்தியான உணவு தான். அப்படி இந்த முட்டைய நல்லா அவிச்சு அத தவா மசாலாபண்ணி எப்படி சாப்பிடுவது அப்படின்னு இப்போ பாக்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Egg Tawa Masala
Yield: 4
Calories: 115kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 5 முட்டை
  • 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மல்லி தூள்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • 3 வெங்காயம்
  • 2 தங்காளி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் முட்டையை நன்றாக வேக வைத்து ஓட்டை உரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். எடுத்து வைத்துள்ள முட்டைகளை நீள வாக்கில் இரண்டாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில்ஒரு கடாயை வைத்து என்னை ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கி அதில் வெட்டி வைத்துள்ள முட்டைகளை போட்டு வறுத்து எடுக்கவும் . இரண்டு புறமும் திருப்பிப் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  •  பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு இவைகளை சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.வெங்காயம் பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி பழங்களை போட்டு விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • அரைத்து எடுத்து வைத்துள்ள விழுதை பொன்னிறமாக வதங்கிய  வெங்காயத்தில் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும். பிறகு மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • மசாலாக்களின் பச்சை வாசனை சென்ற பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து வறுத்து வைத்துள்ள முட்டைகளை இந்த மசாலாவில் போட்டு லேசாக பிரட்டி நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • மசாலாக்கள் முட்டைகளில் நன்றாக. சேர்ந்து கொதித்த பிறகு கொத்தமல்லி தலை தூவி இறக்கினால்   சுவையானபச்சை நிற முட்டை தவா மசாலா தயார். இதை சூடாக சப்பாத்தி, தோசை, இட்லி , சாதத்திற்கு கூட சேர்த்து சாப்பிடலாம்.

Nutrition

Serving: 100g | Calories: 115kcal | Carbohydrates: 12g | Protein: 7g | Calcium: 4.2mg | Iron: 0.24mg