தீர்க்க முடியாத கடன் பிரச்சனையும் தீர வேண்டுமா ? இந்த ஒரு பொருள் மட்டும் உங்கள் கையில் இருந்தால் போதும்!

- Advertisement -

கடன் வாங்குவது என்பது ஒன்னும் அவ்வளவு பெரிய தவறு இல்லை, அனைவருக்கும் கடன் என்பது இருக்கும் அனைவரும் கடன் வாங்க தான் செய்வார்கள். ஆனால் ஒரு சிலர் கடன் வாங்கும் போது அவர்களால் திருப்பிக் கொடுக்க முடியாமல் இது போன்ற கடன் பிரச்சனையில் மாட்டிக் கொள்வார்கள். அவர்களும் எவ்வளவுதான் முட்டி மோதி பார்த்தாலும் இந்த கடன் பிரச்சனையில் இருந்து அவர்களால் மீளவே முடியாது இது போன்று மீளவே முடியாது என்று இருக்கும் கடன் பிரச்சனையிலிருந்து மீண்டு உங்களுக்கு பணவரவை அதிகரிக்க இந்த ஆன்மீகம் ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பதை தான் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காண போகிறோம்.

-விளம்பரம்-

சுக்கிரன் பகவான், குரு பகவான்

நீங்கள் இது போன்ற கடன் பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்களாக இருந்தால் உங்களுக்கு ஜாதகம் ரீதியாக சில பிரச்சினைகள் இருக்கும். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரனும், குருவம் உங்களுக்கு பாதிப்பு விளைவிக்கக்கூடிய இடத்தில் இருக்கும்போது இது போன்ற கடன் சம்பந்தமான பிரச்சினைகளும் தொடர்ந்து ஏற்படுத்துக் கொண்டே இருக்கும். அதிலும் கண்டிப்பாக உங்கள் வீட்டில் தங்க நகை நிலையாக இருக்காது அடகுக்கு செல்வதும, வருவதுமாக இருக்கும். அதனால் இது போன்ற மீனும் முடியாத கடனில் இருந்து மீள வேண்டும் என்றால் உங்களுக்கு சுக்கிர பகவான் மற்றும் குருபகவானின் பரிபூரண அருள் இருக்க வேண்டும்.

- Advertisement -

பரிகாரம்

இப்படி இந்த இருவரின் பரிபூரணமான ஆசி நீங்கள் பெற வேண்டுமென்றால் ஒரு சிறிய பரிகாரம் செய்ய வேண்டி இருக்கிறது. இந்த பரிகாரம் செய்வதற்கு நீங்கள் முதலில் ஒரு பச்சை நிற நூலை எடுத்துக் கொள்ளுங்கள் அதன் பின் உங்கள் கடன் பிரச்சனைக்கு ஏற்றவாறு 27, 57, 108, 1008 என்ற எண்ணிக்கையில் ஏலக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஏலக்காயை நீங்கள் மாலையாக கோர்க்க வேண்டும். மாலையாக கோர்ப்பதற்கு சிலர் ஏலக்காயை ஊற வைப்பார்கள் ஆனால் எக்காரணம் கொண்டும் ஏலக்காயை தண்ணீரில் ஊற வைக்க கூடாது அப்படியே கோர்க்க வேண்டும். மேலும் இந்த பரிகாரத்தை நீங்கள் புதன், வியாழன் மற்றும் வெள்ளி போன்ற கிழமைகளில் மட்டும் தான் செய்ய வேண்டும். அதுவும் சுக்கிர ஹோரையில். சுக்கிர ஹோரை நேரம் எப்போது வரும் என்று தெரியாதவர்கள் உங்கள் வீட்டில் இருக்கும் காலண்டர் பின்பக்கம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மாலை இங்கு அமர்ந்து செய்யலாம்

அதனால் இந்த கிழமைகளில் பரிகாரம் செய்வதற்கு முன்பாகவே ஏலக்காய் மாலையை தயார் செய்து கொள்ளுங்கள். அப்படி இந்த ஏலக்காய் மாலையை நீங்கள் கோர்க்கும் போது உங்கள் வீட்டில் இருக்கும் துளசி மாடம், பூஜை அறை, மொட்டைமாடி, மாட்டு தொழுவம், ஆற்றங்கரை, தோட்டம் இது போன்ற இடங்களில் உட்கார்ந்து கோர்ப்பது இன்னும் சிறப்பானதாக இருக்கும். அதேபோல நீங்கள் ஏலக்காய் மாலையை கோர்ப்பதற்கு முன்பாக “குருவடி சரணம், திருவடி சரணம்” என்றோ அல்லது குரு பகவானின் ஏதாவது ஒரு மந்திரத்தை கூறி கோர்க்க வேண்டும் அல்லது “ஓம் மகாலட்சுமியே நமஹ” என்ற மந்திரத்தை உச்சரித்துவிட்டு மாலையை கோர்க்க வேண்டும்.

மாலை மகாலட்சுமிக்கு அணியுங்கள்

ஏலக்காய் மாலையை தயார் செய்த பிறகு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மகாலட்சுமி கோவிலுக்கு சென்று சுக்கிர ஹோரையில் மகாலட்சுமி தாயாருக்கு இந்த ஏலக்காய் மாலையை அணிவிக்க வேண்டும். கோவில் செல்ல நேரம் இல்லாதவர்கள் உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை அறையில் மகாலட்சுமி தாயாரின் திருஉருவ படத்திற்கு ஏலக்காய் மாலையை அணிவிக்கலாம். மாலையை அனுபவித்துவிட்டு உங்கள் கடன் பிரச்சினை தீர வேண்டும் என மகாலட்சுமி தாயே மனதார நினைத்து மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

தானம் செய்யுங்கள்

பிறகு கோவிலில் மாலை அணிவித்து வீட்டிற்கு வந்துதும் சுமங்கலி பெண்களுக்கு பால் பாயாசம், தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் மற்றும் சிறிதளவு அட்சதையை தானமாக கொடுக்க வேண்டும். அட்சதை என்பது பச்சரிசியில் மஞ்சள் கலந்து வைத்திருப்பது. நீங்கள் தானம் கொடுக்கும் நேரமும் சுக்கிர ஹோரையாக இருக்க வேண்டும். இப்படி நீங்கள் தானம் செய்வதன் மூலம் சுக்கிர பகவான் மிகுந்த மகிழ்ச்சி அடைவார் அதனால் அவரின் பரிபூரண ஆசியும் உங்களுக்கு கிடைக்கும்.

முடிந்தால் இங்கு சென்று வாருங்கள்

இப்படி உங்கள் கடன் பிரச்சனை தீரும் வரை இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வாருங்கள். ஆனால் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்த மூன்று மாதத்திலேயே சுக்கிரன் மற்றும் குரு பகவானின் அருள் கிடைத்துவிடும். நீங்களும் மீள முடியாத கடனிலிருந்து மீண்டு விடலாம். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், மதுரை மீனாட்சி அம்மன் இவர்களை சுக்கிர ஹோரையில் தரிசனம் செய்ய முடிந்தால் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். இதனால் உங்கள் கடன் பிரச்சனை தீர்ந்து உங்களுக்கு பணவரவு என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கும்.