உங்க வீட்ல காய்கறி இல்லாத அப்போ இந்த எம்டி சால்னா சென்று அதை தோசை இட்லி சப்பாத்தினு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டு பாருங்க!!!

- Advertisement -

பொதுவான சப்பாத்தி செஞ்சா அதுக்கு தகுந்த மாதிரியான வெஜிடபிள் குருமா சிக்கன் குருமா உருளைக்கிழங்கு குருமா அப்படின்னு தான் செஞ்சு சாப்பிடுவோம். ஆனா ஒருவேளை நம்ம வீட்ல காய்கறிகள் முட்டை சிக்கன் எதுவுமே இல்ல அப்படின்னா அவசரத்துக்கு எதுவுமே இல்லாம ஒரு எம்டியான சால்னா நம்ம வைக்கலாம். இந்த சால்னா நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ரிச்சான டேஸ்ட்ல ரொம்பவே அருமையா இருக்கும்.

-விளம்பரம்-

நம்ம வீட்ல இருக்கிற பொருட்களை போதும் சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். இந்த எம்டி சால்னாவ சப்பாத்திக்கு மட்டுமில்லாமல் இட்லி, தோசை பூரி அப்படின்னு எல்லாத்துக்கும் வச்சு சாப்பிடலாம். ஒருவேளை நம்ம வீட்ல குஸ்கா செஞ்சா கூட அதுக்கும் இந்த எம்டி சால்னாவ வச்சு சாப்பிடலாம். இப்ப நான் எல்லார் வீட்டிலும் பரோட்டா அவங்களை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க அப்படி நீங்க பரோட்டா போடும்போது இந்த எம்டி சால்னா வச்சு கொடுத்தீங்கன்னா கடையில் கிடைக்கும் அதே மாதிரியான டேஸ்ட்டுல சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா இருக்கும்.

- Advertisement -

எதுவுமே இல்லாத அப்போ உங்களுக்கு கை கொடுக்கக்கூடியது தா இந்த எம்டி சால்னா. இந்த சால்னா நீங்க வச்சு கொடுத்தீங்கன்னா ஒரு சப்பாத்தி சாப்பிடறவங்க கூட எக்ஸ்ட்ரா ரெண்டு மூணு சப்பாத்தி சேர்த்து சாப்பிடுவாங்க. உங்க வீட்டில அசைவம் எடுக்க முடியாத சூழ்நிலை வரும்போது இந்த எம்டி சால்னாவை மட்டும் வைத்து சாப்பிட்டீங்கன்னா அப்படியே அசைவ சுவைல ரொம்பவே வாசனையாகவும் டேஸ்டாவும் இருக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்ட்டான எம்டி சால்னா எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
3.50 from 2 votes

எம்டி சால்னா | Empty Salna Recipe In Tamil

வீட்ல இருக்கிற பொருட்களை போதும் சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். இந்த எம்டி சால்னாவ சப்பாத்திக்கு மட்டுமில்லாமல் இட்லி, தோசை பூரி அப்படின்னு எல்லாத்துக்கும் வச்சு சாப்பிடலாம். ஒருவேளை நம்ம வீட்ல குஸ்கா செஞ்சா கூட அதுக்கும் இந்த எம்டி சால்னாவ வச்சு சாப்பிடலாம். இப்ப நான் எல்லார் வீட்டிலும் பரோட்டா அவங்களை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க அப்படி நீங்க பரோட்டா போடும்போது இந்த எம்டி சால்னா வச்சு கொடுத்தீங்கன்னா கடையில் கிடைக்கும் அதே மாதிரியான டேஸ்ட்டுல சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா இருக்கும்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Empty salna
Yield: 4
Calories: 84kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 பச்சை மிளகாய்
  • 2 சோம்பு
  • 1 பட்டை
  • 1 கிராம்பு
  • 5 முந்திரிப் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கசகசா
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1 டேபிள்ஸ்பூன் பொட்டுக் கடலை
  • 1 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் மல்லித்தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம்மசாலா
  • 1 டீஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  • 1 கொத்து கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • ஒருகடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்
  • பிறகு நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியையும் நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  • அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
  •  
    பிறகு அதில் மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் முந்திரி பருப்பு கசகசா சிறிதளவு சோம்பு பொட்டுக்கடலை அனைத்தும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இப்பொழுது அரைத்த விழுதையும் சேர்த்து 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும்
  • இறுதியாக கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் சுவையான எம்டி சால்னா தயார்

Nutrition

Serving: 200g | Calories: 84kcal | Carbohydrates: 5.8g | Monounsaturated Fat: 6.6g | Vitamin A: 5.37IU | Calcium: 2.6mg | Iron: 1mg