மீன் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி சுவையான மீன் கட்லெட் செய்து கொடுத்தால் தட்டாமல் சாப்பிடுவார்கள்!

- Advertisement -

பொதுவாக அனைவருக்கும் மீன் என்றாலே மிகவும் பிடிக்கும். கடலோரத்தில் இருக்கும் மக்களுக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்கும் மீன் குழம்பு மீன் வருவல் என்றால் மிக மிக பிடிக்கும். மீன் குழம்பு வைத்தால் அதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட அனைவருக்கும் நாக்கில் எச்சில் ஊறும். அந்த அளவிற்கு மீன் குழம்பு மேல் பலரும் காதலுற்று இருப்பார்கள்.

-விளம்பரம்-

மீனில் பல வகையான சத்துக்கள் உள்ளது புரத சத்துக்கள் நல்ல கொழுப்புகள் என நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே மீன் உடலின் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. மீனில் நாம் குழம்பு மீன் புட்டு மீன் பிரியாணி மீன் வறுவல் என பலவிதமான ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா கொஞ்சம் டிஃபரண்டா மீன்ல கட்லட் செய்ய போறோம். உருளைக்கிழங்கு காய்கறிகள், சிக்கன் மட்டன்  இதெல்லாம் வச்சு நம்ம கட்லட் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா கொஞ்சம் புதுசா நீங்க கட்லட் செய்யப் போறோம்.

- Advertisement -

எப்பவுமே மீன்ல ஒரே மாதிரி செஞ்சு போர் அடிச்சிருந்தா மாலை நேரத்துல ஸ்நாக்ஸுக்கு இந்த மீன் கட்லெட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. சுவையும் அருமையா இருக்கும். அதே நேரத்துல ஆரோக்கியமானதாகவும் இருக்கும். என்னதான் மீன் எல்லாருக்கும் பிடிச்சாலும் அந்த மீன்ல முள் இருக்குன்னு ஒரு சிலர் சாப்பிட மாட்டாங்க. அவங்களுக்காக அந்த மீன் முள்ளு எல்லாமே எடுத்துட்டு இந்த கட்லட் செஞ்சு கொடுங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த மீன் கட்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

மீன் கட்லெட் | Fish Cutlet Recipe In Tamil

மீனில்பல வகையான சத்துக்கள் உள்ளது புரத சத்துக்கள் நல்ல கொழுப்புகள் என நிறைய சத்துக்கள்நிறைந்துள்ளது. எனவே மீன் உடலின் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. மீனில் நாம் குழம்பு மீன் புட்டு மீன் பிரியாணி மீன் வறுவல் என பலவிதமான ரெசிப்பிஸ்செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா கொஞ்சம் டிஃபரண்டா மீன்ல கட்லட் செய்ய போறோம். உருளைக்கிழங்கு காய்கறிகள், சிக்கன் மட்டன்  இதெல்லாம்வச்சு நம்ம கட்லட் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா கொஞ்சம் புதுசா நீங்க கட்லட் செய்யப் போறோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Fish cutlet
Yield: 4
Calories: 124kcal

Equipment

 • 1 கடாய்

தேவையான பொருட்கள்

 • 1/2 கிலோ மீன்
 • 5 பச்சைமிளகாய்
 • 1 கப் புதினா இலைகள்
 • 3 பெரிய வெங்காயம்
 • 3 உருளைக்கிழங்கு
 • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
 • 1 டேபிள் ஸ்பூன் மைதா
 • 2 பிரட்
 • எண்ணெய் தேவையான அளவு
 • உப்பு தேவையான அளவு
 • 1 கப் மல்லி இலைகள்

செய்முறை

 • முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
 • பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் மீன் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேகவைத்த மீன் முல்லை எடுத்து மீனை உதிர்த்து வைத்துக் கொள்ளவும். எடுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்
 • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது புதினா இலைகள் மல்லி இலை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
 • இதனுடன் உதிர்த்து வைத்த மீன் உருளைக்கிழங்கு சேர்த்து உப்பு சரி பார்த்து பிசைந்து கொள்ளவும். மைதா மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ளவும்.
 • பிசைந்து வைத்துள்ள மாவை வடை போன்று தட்டி அதனை மைதா மாவில் லேசாக நனைத்து பிறகு பொடி செய்து வைத்துள்ள பிரட்டில்  பிரட்டிஎடுத்துக் கொள்ளவும்
 • ஒரு கடாயில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி வடை பதத்திற்கு தட்டி வைத்துள்ள மீன் கலவையை போட்டு பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
 • இப்பொழுது சூடான மீன் கட்லெட் தயார் இதனை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.

Nutrition

Serving: 500g | Calories: 124kcal | Carbohydrates: 20.6g | Fat: 4g | Cholesterol: 40mg | Potassium: 427mg | Vitamin A: 31IU | Vitamin C: 52mg | Iron: 2.38mg

இதையும் படியுங்கள் : காரசாரமான பச்சை நிற மீன் வறுவல் ஒருமுறை இப்படி செய்து அசத்துங்கள்!