Home ஐஸ் வாயில் கரைந்தோடும் சுவையில் ஃபுரூட் கஸ்டர்டு இப்படி ஒரு முறை அவசியம் செய்து பாருங்கள்!

வாயில் கரைந்தோடும் சுவையில் ஃபுரூட் கஸ்டர்டு இப்படி ஒரு முறை அவசியம் செய்து பாருங்கள்!

எப்ப பாத்தாலும் குழந்தைங்க ஸ்நாக்ஸ் கேட்டா அவங்களுக்கு வடை போண்டா கட்டில் பிரெஞ்ச் ப்ரைஸ்ன்னு இதையே செஞ்சு கொடுக்காம கொஞ்சம் டிஃபரண்டா ஆரோக்கியமா ஒரு தடவ ப்ரூட் கஸ்டர்ட் செஞ்சு கொடுங்க. ஒரு சில பசங்களுக்கு பழங்கள அப்படியே சாப்பிட பிடிக்கும் ஒரு சிலருக்கு ஜூஸ் போட்டு கொடுத்தா பிடிக்கும். ஆனா ஒரு சிலருக்கு சுத்தமா ஃப்ரூட்ஸ் சாப்பிடவே பிடிக்காது.

-விளம்பரம்-

அந்த மாதிரி உங்க குழந்தைங்க ஃப்ரூட்ஸ் சாப்பிட அடம் பிடிச்சா அவங்களுக்கு ஒரு தடவை இந்த ஃப்ரூட் கஸ்டட் செஞ்சு கொடுங்க அதுக்கு அப்புறமா அவங்க எப்பவுமே இந்த ஃப்ரூட் காஸ்ட்டர் கேட்டு அடம் பிடிப்பாங்க அந்த அளவுக்கு இந்த ஃப்ரூட் கஸ்டர்டோட டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும். இப்போ வெயில் காலம் வேற வரப்போகுது இந்த டயத்துல குழந்தைகளுக்கு ரொம்பவே சூடு பிடிக்கும் அந்த மாதிரி சூடு பிடிக்காமல் இருக்க அவங்களுக்கு இந்த மாதிரி ஏதாவது செஞ்சு கொடுத்தா ரொம்பவும் நல்லது.

குழந்தைங்க ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வரும்போது இந்த  ஃப்ரூட் கஸ்டர்ட் செஞ்சு நீங்க கொடுக்கலாம் அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. பழங்கள் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது டெய்லி நம்ம ஒரு பழம் சாப்பிட்டாலே நம்ம உடம்புக்கு எந்தவிதமான பிரச்சனைகளும் வராது அப்படின்னு சொல்லுவாங்க. அந்த வகையில இந்த மாதிரி உங்க குழந்தைகளுக்கு பழங்களை சாப்பிட்டு கொடுத்தா அவங்களுக்கு ரொம்ப ஆரோக்கியமானதா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான டேஸ்டான ப்ரூட் கஸ்டர்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 2 votes

ப்ரூட் கஸ்டர்ட் | Fruit Custard Recipe In Tamil

குழந்தைங்க ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வரும்போது இந்த ஃப்ரூட் கஸ்டர்ட் செஞ்சு நீங்க கொடுக்கலாம் அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.பழங்கள் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது டெய்லி நம்ம ஒரு பழம் சாப்பிட்டாலேநம்ம உடம்புக்கு எந்தவிதமான பிரச்சனைகளும் வராது அப்படின்னு சொல்லுவாங்க. அந்த வகையிலஇந்த மாதிரி உங்க குழந்தைகளுக்கு பழங்களை சாப்பிட்டு கொடுத்தா அவங்களுக்கு ரொம்ப ஆரோக்கியமானதாஇருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான டேஸ்டான ப்ரூட் கஸ்டர்ட் எப்படி செய்வது என்றுபார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: Dessert
Cuisine: tamil nadu
Keyword: Fruit Custard
Yield: 4
Calories: 201kcal

Equipment

  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1/2 லிட்டர் பால்
  • 1 டேபிள் ஸ்பூன் கஸ்டர்டு பவுடர்
  • 1 கப் மாதுளை
  • 1 கப் ஆப்பிள்
  • 2 வாழைப் பழம்
  • 1/2 கப் சர்க்கரை
  • 10 பாதாம்
  • 10 பிஸ்தா
  • 1 டீஸ்பூன் சப்ஜா விதைகள்

செய்முறை

  • முதலில் ஆப்பிள் வாழைப்பழம் இரண்டையும் உங்களுக்கு தேவையான வடிவத்தில் சிறியதாக வெட்டி வைத்துக் கொள்ளவும் மாதுளம் பழத்தை உரித்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் பால் ஊற்றி அது கால் லிட்டராக ஆகும் வரை நன்றாக காய்ச்சவும். அதனுடன் சர்க்கரையையும்சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • கஸ்டர்ட் பவுடருடன் சிறிதளவு பால் ஊற்றி கலக்கி அதனை காய்ச்சி வைத்துள்ள பாலில் சேர்த்து அடுப்பைஅணைத்து ஆற வைக்கவும்.
  • சப்ஜா விதைகளை தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  • இப்பொழுது பாலை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் நறுக்கி வைத்துள்ள ஆப்பிள் வாழைப்பழம்மற்றும் மாதுளையை சேர்த்து கலக்கவும்
  • பிறகு சப்ஜா விதைகளையும் சேர்த்து அதனை இரண்டு மணி நேரம் பிரிட்ஜுக்குள் வைத்து எடுத்தால் சுவையானகுளு குளு ப்ரூட் கஸ்டர்ட் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 201kcal | Carbohydrates: 48g | Protein: 2.1g | Sodium: 12mg | Potassium: 178mg

இதையும் படியுங்கள் : வரும் கோடை வெயிலில் குளுகுளுனு சாப்பிட சூப்பரான ஆரஞ்சு ஐஸ்கிரீம் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க!