- Advertisement -
பூண்டு நாண் செய்முறை என்பது வெற்று மாவு மற்றும் பூண்டுடன் செய்யப்பட்ட மிகவும் பிரபலமான இந்திய ரெசிபி. இது இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ளது, இதன் சுவை காரணமாக. வட இந்திய அல்லது பஞ்சாபி கறிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ரொட்டி அற்புதமாக நன்றாக ருசிக்கிறது மற்றும் காலை உணவு மற்றும் இரவு உணவிற்கு எளிதாக பரிமாறலாம்.
-விளம்பரம்-
கார்லிக் நாண் | Garlic Naan Recipe in Tamil
பூண்டு நான் செய்முறை என்பது வெற்று மாவு மற்றும் பூண்டுடன் செய்யப்பட்ட மிகவும் பிரபலமான இந்திய பிளாட்பிரெட் ரெசிபி. இது இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ளது, முக்கியமாக சுவை மற்றும் சுவை காரணமாக. வட இந்திய அல்லது பஞ்சாபி கறிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ரொட்டி அற்புதமாக நன்றாக ருசிக்கிறது மற்றும் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு எளிதாக பரிமாறலாம்.
Yield: 4 People
Calories: 252kcal
Equipment
- 1 தோசை கல்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 2 கப் மைதா மாவு
- 1/4 கப் சூடான தண்ணீர்
- 1 தேக்கரண்டி ஈஸ்ட்
- 1 தேக்கரண்டி சர்க்கரை
- 1 மேஜைக்கரண்டி எண்ணெய்
- உப்பு தேவையானஅளவு
- கொத்தமல்லி இலை சிறிதளவு
- 1 தேக்கரண்டி கருப்பு எள்
- 6 பூண்டு பல்
- 1 மேஜைக்கரண்டி வெண்ணெய்
செய்முறை
- நாண் செய்வதற்கு முதலில் ஈஸ்டை தயார் செய்ய வேண்டும்.
- அதற்கு ஒரு பாத்திரத்தில் வெதுவெதப்பான தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் பிறகு அதில் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து 15 நிமிடங்கள் மூடி வைத்து விடவும்.
- சிறிது நேரத்தில் நுரை போன்று படிந்து ஈஸ்ட் தயாராக இருக்கும்.
- மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, எண்ணெய், உப்பு, ஈஸ்ட் கலவை சேர்த்து பிசையவும்.
- பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக அழுத்தி பிசையவும்.
- முதலில் கையில் ஓட்டுவது போல் இருக்கும் 10 நிமிடங்கள் தொடர்ந்து பிசைந்தால் மிருதுவாக ஆகிவிடும்.
- பிசைந்த மாவின் மேல் சிறிதளவு எண்ணை பூசி ஒரு துணி வைத்து மாவு இரட்டிப்பு ஆகும்வரை மூடி வைக்கவும்.
- பிறகு அதிலிருந்து சிறிதளவு மாவை எடுத்து உருட்டவும்.
- முட்டை வடிவில் உருட்டிய நாண் இல் சிறிதளவு எள்ளு, கொத்தமல்லி தழை,பூண்டு மற்றும் வெண்ணை கலவையை தடவி கொள்ளவும்.
- பிறகு அதை பின்புறமாக திருப்பி தண்ணீர் தடவி கொள்ளவும்.
- தயார் செய்த நாணை தோசைக்கல்லில் போடவும் மேல்புறம் சிறிது சிறிதாக மேலெழும்பி வந்தவுடன் தோசைக்கல்லை அப்படியே திருப்பி தீயில் காட்டவும்.
- முன்புறமும் நன்றாக சிவந்து வந்ததும் அடுப்பை அணைத்து பரிமாறவும்.
- சுட சுட தாபா ஸ்டைல் கார்லிக் நாண் சென்னா மசாலாவுடன் சுவைக்க தயார்.
- இதனுடன் சிக்கன் கிரேவி, பன்னீர் பட்டர் மசாலா, சென்னா மசாலா அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும்.
Nutrition
Serving: 500g | Calories: 252kcal | Potassium: 322mg | Sugar: 3.4g | Vitamin C: 4.283mg | Calcium: 124mg | Iron: 1.73mg
- Advertisement -