நாம் வீட்டில் சமைக்கும் சைவம் அல்லது அசைவம் என்று எந்த உணவானாலும் இஞ்சியை நாம் பயன்படுத்தி வருகிறோம். நிறைய ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய மசாலாக்களில் இஞ்சி முக்கியமான ஒன்றாக உள்ளது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலி மற்றும் வீக்கத்தை போக்க உதவுகின்றன.
இவை புற்றுநோயை குறைக்கும் ஆற்றலை கொண்டுள்ளதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளன. தவிர, இவற்றை பெரும்பாலும் நமது உணவுகளில் பயன்படுத்தி வருகிறோம். இவற்றில் கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்களும், எ, பி, சி போன்ற வைட்டமின்களும் நிரம்பி காணப்படுகின்றன.
இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதால் இவற்றை மாத்திரை மற்றும் மிட்டாய் வடிவில் கூட பயன்படுத்தியும் வருகிறோம். இப்படி ஏராளமான நன்மைகளை தாராளமாக வழங்கி வரும் இஞ்சியில் எப்படி பச்சடி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம். இதனை இட்லி, தோசை, தயிர் சாதம், தக்காளி சாதம் லெமன் சாதம் போன்றவைக்கு நல்ல காம்பினேஷனாக இருக்கும்.
இஞ்சி பச்சடி | Ginger Pachadi Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- உப்பு தேவையான அளவு
- 100 மிலி நல்லெண்ணெய்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1/2 கப் கருவேப்பிலை
அரைக்க
- 1/4 கிராம் மா இஞ்சி
- 200 கிராம் புளி
- 200 கிராம் நாட்டு சர்க்கரை
- 10 வர மிளகாய்
- 5 பச்சை மிளகாய்
செய்முறை
- முதலில் இஞ்சியை நன்கு கழுவி விட்டு தோல் சீவிக் கொள்ளவும்.
- பின் ஒரு மிக்ஸியில் இஞ்சி, புளி, நாட்டு சர்க்கரை, வர மிளகாய், பச்சைமிளகாய், உப்பு, சிறிதளவு தண்ணீர் என அனைத்தையும் சேர்த்துநைசாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- அதன் பிறகு இதனுடன் அரைத்த இஞ்சி விழுதை சேர்த்துக் கொள்ளவும்.
- இஞ்சி விழுது நன்கு சுருண்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை மிதமான தீயில் மூடி வைத்து 5 நிமிடம் வரை வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான இஞ்சி பச்சடி தயார். இது ஆறியவுடன் ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளவும்.
- இட்லி,தோசை, தயிர் சாதம் போன்றவற்றிற்கு இந்த இஞ்சி பச்சடி மிகவும் சுவையாக இருக்கும்.