கிராமத்து ஸ்டைலில் ஆட்டு ரத்த பொரியல் இப்படி செஞ்சி பாருங்க வீடே மணமணக்கும் ருசிசியில்!

- Advertisement -

ஆட்டின் உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் உணவாக உட்கொண்டு இருக்கின்றோம். ஆட்டின் ரத்தம் முதல் ஈரல் வரை மூளை முதல் குடல் வர என அனைத்திலும் நம் வித விதமான உணவுகள் செய்து சாப்பிட்டு கொண்டிருக்கிறோம்.  எளிதில் தயாராகும் இந்த ரத்த பொரியல், உங்களின் காலை உணவுக்கு சிறப்பான உணவாக இருக்கும். அசைவ உணவிற்கு நிறைய உயிரினங்கள்  இருந்தாலும், ஆடுகள் பங்களிப்பு அபரிவிதமானது.

-விளம்பரம்-

ஆட்டின் எந்த உறுப்பும் வீணாகாது. அந்த வகையில் ஆட்டு ரத்தம் மூலம் தயாரிக்கப்படும் ரத்தப் பொரியல், பலருக்கும் காலை டிபன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? பல இடங்களில் சைடு டிஷ் ஆகவும் பயன்படுத்துகிறார்கள் ரத்தப் பொரியல், சுவையான, ருசியான உணவு என்பது அதை வழக்கமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு தெரியும். இதை தயாரிப்பது ரொம்ப ரொம்ப எளிது. 2 நிமிட மேஹியை விட எளிதில் தயாரித்துவிடலாம். இதோ ரத்த பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

- Advertisement -

ரத்த பொரியலை செய்வது மிகவும் சுலபம்.  ஆட்டு ரத்தத்தில் விட்டமின் பி இருப்பதால் இது கொழுப்பை கரைப்பதற்கு உதவுகிறது. ஆகையால் உடல் எடை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் ஆட்டு ரத்தத்தை உண்பது மிகவும் நல்ல பலன்களை தரும். இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது அதனால் இரத்தசோகையை குறைப்பதற்கு பயன்படுகிறது. அது மட்டுமல்லாமல் கால்சியம்  விட்டமின்கள் இருப்பதால் இது உடலுக்கு நல்ல ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது. வாருங்கள் எப்படி ஆட்டு ரத்தம் சமைக்கலாம் என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

ஆட்டு ரத்த பொரியல் | Goat Blood Poriyal Recipe In Tamil

ரத்த பொரியலை செய்வது மிகவும் சுலபம்.  ஆட்டுரத்தத்தில் விட்டமின் பி இருப்பதால் இதுகொழுப்பை கரைப்பதற்கு உதவுகிறது. ஆகையால் உடல் எடை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் ஆட்டு ரத்தத்தை உண்பது மிகவும் நல்ல பலன்களை தரும். இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது அதனால் இரத்தசோகையை குறைப்பதற்கு பயன்படுகிறது. அது மட்டுமல்லாமல் கால்சியம்  விட்டமின்கள்இருப்பதால் இது உடலுக்கு நல்ல ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது. வாருங்கள் எப்படி ஆட்டு ரத்தம் சமைக்கலாம் என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Goat Blood Poriyal
Yield: 4
Calories: 213kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 ஆட்டு ரத்தம்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் மிளகுத் தூள்
  • 1 ஸ்பூன் சீரக தூள்
  • 2 வெங்காயம்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கப் தேங்காய்
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் ஆட்டு ரத்தம் வாங்கியதும் அதை மேலாக நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.இதில் ஆட்டின் முடி இரத்ததில்  இருக்கவாய்ப்பு உண்டு. ஆகையால் நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் அதிக அழுத்தம் கொடுத்து கழுவ கூடாது.
  •  
    பின்னர் கட்டியாக உள்ள ரத்தத்தை நன்கு உடைத்து திரவமாக மாற்றவும் எந்த அளவுக்கு பிசைகிறோமோ அந்த அளவிற்கு சுனை அதிகரிக்கும்.
  • அடுப்பில் கடாயை வைத்து  எண்ணெய்ஊற்றி காய்ந்ததும் கடுகு , பச்சைமிளகாய் கறிவேப்பிலை , சோம்பு சேர்த்து தாளித்து கொள்ளவும்.
  • பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து  பொன்னிறமாகவறுத்துகொள்ளவும்.பின் பிசைந்து வைத்துள்ள இரத்தத்தில் உப்பு சேர்த்து நன்றாக கலந்து  தாளிப்பில்சேர்த்து நன்றாக கிளறி மூடி போட்டு வேக வைக்கவும்.
  • 5 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து கிளறி விட்டு பின் அதில் மிளகுதூள் , சீரக தூள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு மூடி போட்டு  வேக  வைக்கவும்.
  • பின் இரத்தம் நன்றாக வெந்ததும் துருவிய தேங்காய், கொத்தமல்லி தழை தூவி நன்றாக கிளறி  இறக்கவும்.சூடான சத்தான ஆட்டு இரத்த பொரியல் தயார். இதை காலை உணவாகவோ அல்லது மதிய உணவுக்கு சைடிஸ்சாகவோ பரிமாறலாம்.

Nutrition

Serving: 500g | Calories: 213kcal | Carbohydrates: 34.48g | Fat: 13g | Sodium: 120mg | Potassium: 19.22mg | Calcium: 105mg