அடிக்கடி மட்டன் வாங்காமல் அடுத்தமுறை மட்டன் குடல் வாங்கி சால்னா இப்படி செய்து பார்க்கலாம்!

- Advertisement -

இட்லி தோசை என்றால் சாம்பார், சட்னி,பூரி என்றால் கிழங்கு, இப்படி ஒவ்வொரு சமையலுக்கும் அதற்கான சைட் டிஷ் இருந்தால் தான் அதன் சுவை மேலும் அதிகரிக்கும். அந்த வகையில் பரோட்டாவை  சப்பாத்தி, பொறுத்த வரையில் எப்போதுமே சால்னா தான் அதற்கு சரியான சைடிஷ். அது எந்த வகை சால்னாவாக இருந்தாலும் சரி. இந்த சால்னாவையே பல வகையில் செய்யலாம். ஆட்டு குடல் வைத்து சால்னா செய்தால் மிகவும் அருமையாக இருக்கும்.

-விளம்பரம்-

இட்லி தோசை குறிப்பா பரோட்டாவுக்கு இந்த சால்னா செம சைடிஷ். முட்டை தோசை வார்த்து அதன் மேலே இந்த ஆட்டு குடல் சால்னாவை ஊற்றி சாப்பிட்டால் சொல்லவே வேண்டாம். வேற லெவல் சுவையாக இருக்கும்.  ஆட்டு குடல் இது பலரால் போட்டி என அழைக்கப்படுகிறது. செரிமானம் சார்ந்த எந்த ஒரு பிரச்சினை உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது. குறிப்பாக அல்சர் என்று சொல்லக்கூடிய வயிற்று புண்களை குணமாக்கும் மற்றும் செரிமான உறுப்புகளை வந்து வலுவாக்கி சீராக இயங்குவதற்கும் உதவிசெய்யக்கூடியது இந்த பிரிஞ்சி, வெள்ளை குஸ்கா, இது போன்ற காரம் குறைவான பிரியாணி வகைகளை ஆர்டர் செய்யும் போது அதற்கு சைட் டிஷ் ஆக ஒரு சால்னா கொடுப்பார்கள்.

- Advertisement -

ஆட்டு குடல் சால்னாவின் சுவைக்கு இந்த சாதங்கள் சைலன்டாக உள்ளே சென்று விடும்.வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சூப்பரான ஒரு ஆட்டு குடல் சால்னா எப்படி செய்வது. அதுவும் கடைகளில் கிடைக்கும் மட்டன் மசாலா சிக்கன் மசாலா இல்லாமல், அசத்தலான சுவையில்.ஆட்டு குடல் சால்னா எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.

Print
No ratings yet

ஆட்டு குடல் சால்னா | Goat Intestine Gravy Recipe In Tamil

இட்லி தோசை குறிப்பா பரோட்டாவுக்கு இந்த சால்னா செமசைடிஷ். முட்டை தோசை வார்த்து அதன் மேலே இந்த ஆட்டு குடல் சால்னாவை ஊற்றி சாப்பிட்டால்சொல்லவே வேண்டாம். வேற லெவல் சுவையாக இருக்கும். ஆட்டு குடல் இது பலரால் போட்டி என அழைக்கப்படுகிறது. செரிமானம் சார்ந்த எந்தஒரு பிரச்சினை உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது. குறிப்பாக அல்சர் என்று சொல்லக்கூடியவயிற்று புண்களை குணமாக்கும் மற்றும் செரிமான உறுப்புகளை வந்து வலுவாக்கி சீராக இயங்குவதற்கும்உதவிசெய்யக்கூடியது இந்த பிரிஞ்சி, வெள்ளை குஸ்கா, இது போன்ற காரம் குறைவான பிரியாணிவகைகளை ஆர்டர் செய்யும் போது அதற்கு சைட் டிஷ் ஆக ஒரு சால்னா கொடுப்பார்கள்
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamilnadu
Keyword: Goat Intestine Gravy
Yield: 4
Calories: 84kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 250 g ஆட்டுகுடல்
  • 3 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 3 பச்சமிளகாய்
  • 3 டேபுள்ஸ்பூன் இஞ்சி,பூண்டு பேஸ்ட்
  • 1/4 கட்டு கொத்து மல்லி
  • 1/4 கட்டு புதினா
  • 2 டீ பூன் மிளகாய்தூள்
  • 2 தனியாதூள்
  • 2 பட்டை
  • 2 லவங்கம்
  • 1 ஏலம்
  • 200 gram கத்திரிக்காய்
  • கால் கப் கடலைப் பருப்பு

செய்முறை

  • குடலை மஞ்சள் தூள் கொஞ்சம் வினீகர் போட்டு, நன்றாக பத்து நிமிடம் ஊற வைத்து அதில்உள்ள அழுக்கை தேய்த்து கழுவவும். சுத்தம் செய்யப்பட்ட குடல் கிடைத்தால் பிரச்சனை இல்லை.
  • சட்டியை காயவைத்து எண்ணை ஊற்றி சூடு வந்ததும் பட்டை,லவங்கம். ஏலம் போடவும். போட்டு அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை வதக்கவும் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பொன்னிறமாக வதக்கவும்
  • அத்துடன் குடலையும் போட்டு பெறட்டவும். பிறட்டி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து பிறகு தக்காளி,பச்ச மிளகாய், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்
  • அதற்கு ஏற்றார் போல தண்ணீர் ஆறு ஏழு கப் ஊற்றி அரை மணி நேரம் குக்கரில் வேகவிடனும். கடலைப்பருப்பை அந்த குக்க்கரிலேயே ஐந்து நிமிடம் ஊற வைத்து ஒருசிறிய பாத்திரத்தில் மூடி போட்டு வெயிட்டையும் போட்டு வேகவிடவும்
  • வெந்து குக்கர் சவுண்டு அடங்கியதும் அதில் உள்ளே வைத்திருக்கும். கடலைப்பருப்பை லேசாக மசித்து போடவும் போட்டு கத்திரிக்காயை நான்காக அரிந்து போட்டு தேங்காயையும் அரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு கத்திரிக்காயை வெந்ததும் இறக்கிவிடவும்.
  • அருமையான ஆட்டு குடல் சால்னா தயார்!

Nutrition

Serving: 200g | Calories: 84kcal | Saturated Fat: 5.8g | Monounsaturated Fat: 6.6g | Cholesterol: 88mg | Vitamin A: 5.37IU | Calcium: 2.6mg | Iron: 21mg