தேங்காய்ப் பால் ஆட்டுக்கால் குருமாவை ஒரு முறையாவது இப்படி செய்து பாருங்க! வீடே மணமணக்கும்!

- Advertisement -

சைவ உணவை விடவும் அசைவ உணவு பிரியர்களே அதிகமாக உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் சைவ உணவினை சாப்பிட்டு இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று மீன், கோழி, ஆடு இவற்றில் எந்த அசைவத்தை சமைக்க முடியுமோ அதனை ருசியாக சமைத்து, சமைத்த உணவினை மனதார விரும்பி, ருசித்து சாப்பிடுவார்கள். இவ்வாறாக அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவான தேங்காய்ப் பால் ஆட்டுக்கால் குருமா மிகவும் ருசியாக இருக்கும்.

-விளம்பரம்-

இன்று நாம் இடியாப்பம் ஆப்பம் தோசை மற்றும் இட்லி போன்ற டிபன் வகை உணவுகளுடன் ஊற்றி சாப்பிடும் வகையில் தேங்காய்ப் பால் ஆட்டுக்கால் குருமா பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக காலை மற்றும் இரவு நேரங்களில் செய்யும் டிபன் வகை உணவுகளுக்கு வழக்கம்போல் சாம்பார் சட்னி என செய்து சாப்பிடுவதற்கு பதில் இதுபோன்ற ஒரு முறை இந்த தேங்காய்ப் பால் ஆட்டுக்கால் குருமா செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுங்கள்.

- Advertisement -

தேங்காய்ப் பால் ஆட்டுக்கால் குருமா அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுபவர்கள். அடுத்த முறையும் இதே போல் செய்ய சொல்லி உங்களை தொந்தரவு செய்வார்கள். இந்த தேங்காய்ப் பால் ஆட்டுக்கால் குருமா அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும் அதனால் இன்று இந்த பாய் வீட்டு ஆட்டுக்கால் பெப்பர் பாயா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
3 from 1 vote

தேங்காய்ப் பால் ஆட்டுக்கால் குருமா | Goat Leg Kuruma

தேங்காய்ப் பால் ஆட்டுக்கால் குருமா அனைவரும்மிகவும் விரும்பி சாப்பிடுபவர்கள். அடுத்த முறையும் இதே போல் செய்ய சொல்லி உங்களை தொந்தரவுசெய்வார்கள். பொதுவாக காலை மற்றும் இரவு நேரங்களில் செய்யும்டிபன் வகை உணவுகளுக்கு வழக்கம்போல் சாம்பார் சட்னி என செய்து சாப்பிடுவதற்கு பதில்இதுபோன்ற ஒரு முறை இந்த தேங்காய்ப் பால் ஆட்டுக்கால் குருமா செய்து உங்கள் வீட்டில்உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுங்கள். இந்த தேங்காய்ப் பால் ஆட்டுக்கால் குருமா அந்த அளவிற்கு ஒரு அற்புதமானசுவையில் இருக்கும் அதனால் இன்று இந்த பாய் வீட்டு ஆட்டுக்கால் பெப்பர் பாயா எப்படிசெய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில்நாம் காணலாம் வாருங்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner, KURUMA
Cuisine: tamil nadu
Keyword: Goat Leg Kuruma
Yield: 4
Calories: 306.7kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 2 ஆட்டுக்கால் துண்டுகளாக்கியது
  • 150 கிராம் தேங்காய்ப் பால்
  • 4 முந்திரி பொடி செய்தது
  • 4 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 3 சிவப்பு மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு மிளகாய் விழுது
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 3 டேபிள் ஸ்பூன் உப்பு
  • எண்ணெய் தேவையானஅளவு
  • 3 உருளைக் கிழங்கு துண்டுகளாக்கி பொறித்தது

செய்முறை

  • முதலில் ஆட்டுக் காலில் இஞ்சி பூண்டு விழுது. சிவப்பு மிளகாய் விழுது, ஆகியவற்றைத் தடவி 3 மணி நேரம் வைக்கவும், தேங்காய்ப் பாலில் முந்திரி பருப்பு விழுதைச் சேர்த்து தனியே வைக்கவும்.
  • பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி, லேசான தீயில் வெங்காயம், ஏலக்காய், லவங்கப்பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் ஆட்டுக்கால் சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேக வைக்கவும்.
  • கடைசியாக தேங்காய்ப் பால்- முந்திரி விழுதை சேர்த்தால், திக்கான க்ரேவி கிடைக்கும்.
  • வறுத்த உருளைக் கிழங்கையும் சேர்த்து பறிமாறவும். தேங்காய்ப் பால் ஆட்டுக்கால் குருமா தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 306.7kcal | Carbohydrates: 60g | Protein: 8g | Fat: 2g | Sodium: 11.7mg | Fiber: 4.7g