கோவில் செல்லும் போது ஏன் அதிக தங்க நகை அணிந்து செல்ல வேண்டும் தெரியுமா ?

- Advertisement -

பொதுவாக கோவில்களுக்கு கடவுளை காண செல்லும் பொழுது தங்க நகைகளை அணிந்து கொண்டு செல்ல வேண்டும் என கூறுவார்கள் அதற்கு பின்னால் நாம் முன்னோர்கள் ஒளித்து வைத்திருக்கும் அறிவியலைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். பொதுவாக நம் முன்னோர்கள் கட்டிய கோவில்கள் என்று எடுத்துக் கொண்டால் அந்தக் கோவில்களில் கட்டப்பட்டிருக்கும் அமைப்புகளான கொடிமரம், கதவுகள், மூலஸ்தானம், கோபுர கலசங்கள், உள பிரகார பாதை, வெளிப்பிரகார பாதை, உள்கட்டமைப்பு, வெளி கட்டமைப்பு என அனைத்தும் ஒரு விஞ்ஞான அமைப்புடன் தான் கட்டப்பட்டிருக்கும். அதன் பின்னால் நமக்கு பயன்படக்கூடிய அறிவியல் அல்லது மருத்துவம் இரண்டில் ஏதாவது ஒன்று அமைந்திருக்கும். இல்லையென்றால் இரண்டு காரணமும் இருக்கும்.

-விளம்பரம்-

அப்படி நம் முன்னோர்கள் பார்த்து பார்த்து பிரம்மாண்டமாக கட்டிய கோவில்கள் அனைத்துமே ஊருக்கு ஒதுக்குப்புறமாக அல்லது உயரமான இடங்களில் காந்த அலைகள், நேர் மறை ஆற்றல் எங்கு அதிகம் உள்ளதோ அது போன்ற இடங்களை தேர்ந்தெடுத்து தான் கட்டியிருப்பார்கள். ஏன் தெரியுமா ? புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் வரும்பொழுது எல்லாம் அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக மக்கள் அனைவரும் கோவில்களில் தஞ்சம் புகுந்து விடுவார்கள்.

- Advertisement -

அப்படியே நம் முன்னோர்கள் கோவில் கட்டும் பொழுது எந்த இடத்தில் மிக மிக அதிகமான காந்த சக்தி இருக்கிறதோ அந்த இடத்தை தேர்ந்தெடுத்து அந்த இடம் முழுவதும் செப்பு தகடுகளை அடித்து அதன் மேல் மூலஸ்தானத்திற்குரிய சிலையை வடிவமைத்து வைத்து அதற்கு மேல் தான் கோவிலை கட்டினார்கள். அப்படி அவர்கள் மூலஸ்தானத்தில் பதித்த செப்பு தகடுகள் அங்கிருக்கும் அதிகப்படியான காந்த சக்தி அலைகளை கிரகித்துக் கொண்டு அதை பல நூறு மடங்கு நேர்மறையான ஆற்றலாக மாற்றி கோவில்களில் இருக்கும் மூலஸ்தான சிலைகள் மூலமாக வெளிவிடும்.

மேலும் மூலஸ்தானத்தில் மூன்று பக்கம் சுவர் எழுப்பி ஒரு பக்கம் தான் வாசல் இருக்குமாறு கட்டப்பட்டிருக்கும். ஏன் அவ்வாறு கட்டப்பட்டிருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா ? மூலஸ்தானத்தில் இருக்கும் செப்பு தகடுகளின் அங்கு இருக்கும் காந்த அலைகளை கிரகித்து நேர்மறை ஆற்றலாக மூலஸ்தான சிலையின் மூலம் வெளியிடும் அப்படி வெளியிடும் நேர்மையாற்றலுடன் அய்யர்கள் ஓதும் மந்திரங்கள் மூலமாகவும் அந்த இடத்தில் நேர்மறை ஆற்றல் பல மடங்காக அதிகரித்து நம் கடவுளை காண்பதற்காக அந்த இடம் திறக்கப்படும் பொழுது மூலஸ்தானத்தில் இருந்து வெளிவரும் ஆற்றல் அங்கு இருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் ஒருமித்தமாக கிடைக்கும். மேலும் கருவறையில் அணையா விளக்கு ஒன்று கண்ணாடி போட்டு அதை சுற்றி இருக்கும் பார்த்திருப்பீர்கள் அல்லவா. அது இந்த நேர்மறை ஆற்றலை அனைவருக்கும் பரவி கிடைக்குமாறு ஒரு நுட்பமான வேலையே செய்கிறது.

மேலும் வேண்டுதல் என்ற பெயரில் நாம் கொண்டு செல்லும் புதிய தங்க நகைகள், வீட்டின் சாவி மற்றும் நாம் அணியும் ஆபரணங்களை அந்த கண்ணாடியின் அருகில் வைத்து பூஜை செய்யும் போதோ, நாம் அருகில் செல்லும் போதோ அங்கு இருக்கும் நேர்மறை ஆற்றலை அந்த அபயணங்கள் பற்றி பிடித்துக் கொள்ளும். இந்த காரணத்தினால் தான் கோவிலுக்கு செல்லும்போது அதிகமாம தங்கத்தினால் செய்யப்பட்ட நகைகளை அணிந்து போக வேண்டும் என நாம் முன்னோர்கள் கூறுகின்றனர்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here