புளிச்ச கீரையை வைத்து அருமையான சட்னி எப்படி செய்வது என்று தான் இன்று நாம் பார்க்க போகிறோம். இதை கோங்குரா சட்னி என்றும் சொல்வார்கள். புளிச்ச கீரையில் இரும்புச் சத்துக்கள், வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளன. பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும். வயிற்றில் அமிலத்தன்மை குறையும்போது பசி இல்லாமல் போகிறது.
புளிச்ச கீரை பசியை தூண்டும்.இந்த புளிச்சக்கீரையை பக்குவமாக தொக்கு செய்துவிட்டால் போதும். சுடச்சுட சாதத்தில் இந்த துவையலை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அத்தனை அருமையாக இருக்கும். எவ்வளவு சாதம் உள்ளே இறங்குது அப்படின்னு தெரியவே தெரியாது.கோங்குரா சட்னி அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அசத்தலான சுவையில் எவ்வாறு செய்வது என்று தெரிந்து கொள்ளலாமா
உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் நன்மை மட்டுமே தரக்கூடிய உணவுகள் பல வகைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் ஒரு சில உணவு வகைகளை மட்டும் தான் நாம் வீட்டில் சமைத்து சாப்பிடுகின்றோம். அதில் பெரும்பாலும் கீரை வகைகளை அனைவரும் தவித்து தான் வருகின்றனர். ஆனால் 2, 3 காய்கறிகளை சாப்பிடுவதை விட ஒரு கீரையை சாப்பிடுவது என்பது உடலுக்கு அபரிமிதமான ஊட்டச்சத்தை அளிக்கிறது. இவ்வாறு சத்து மிக்க கீரை வகையான புளிச்ச கீரையை வைத்து கோங்குரா சட்னி தொக்கை எவ்வாறு சுவையாக செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்
கோங்குரா சட்னி | Gongura Chutney Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கட்டு புளிச்ச கீரை
- 1 சிறிய எலுமிச்சை அளவு புளி
- 15 பல் பூண்டு
- 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 2 காய்ந்த மிளகாய்
- 1/2 தேக்கரண்டி வெந்தயம்
- 1 மேசைக்கரண்டி தனியா
- 1 தேக்கரண்டி கடுகு
- 1/2 தேக்கரண்டி சீரகம்
- பெருங்காயம் சிறிதளவு
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- உப்பு தேவையானஅளவு
- 1 கப் எண்ணெய்
செய்முறை
- வாணலியில் வெந்தயம் மற்றும் தனியாவை எண்ணெயில்லாமல் வறுத்தெடுக்கவும்.
- புளிச்ச கீரையை கழுவி பொடியாக நறுக்கி காய வைக்கவும். புளியை கழுவி விட்டு சிறிதளவு (புளி மூழ்கும் வரை) சுடு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். ஊறியபுளி (மற்றும் புளி தண்ணீர்) மற்றும் 10 பல் பூண்டை ஒன்றாக அரைத்து வைக்கவும். வெந்தயம் மற்றும் தனியாவை கொரகொரப்பாக பொடித்து வைக்கவும்.
- அரை கப் எண்ணெயில் கீரையை நன்றாக வதக்கவும். கீரையில் உள்ள நீர் போய் நன்றாக ட்ரை ஆகும் வரை வதக்கவும்.
- மீதமுள்ள எண்ணெயில் கடுகு, சீரகம், மீதமுள்ள பூண்டு (பொடியாக நறுக்கியது). பெருங்காயம், மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய் தாளித்து வதக்கி வைத்துள்ள கீரையில் கொட்டவும்.
- எண்ணெய் சூடாக இருக்கும் போதே இதனுடன் அரைத்து வைத்துள்ள பொடி மிளகாய் தூள், உப்பு மற்றும் புளி கலவையை சேர்க்கவும்.
- நன்றாக கிளறினால் சுவையான கோங்குரா ரெடி,