காரசாரமான ருசியில் நெல்லிக்காய் ஊறுகாய் இப்படி சுலபமாக வீட்டிலயே செஞ்சு பாருங்கள்!

- Advertisement -

குஜராத் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற உணவு ரெசிபிகளில் ஒன்றான ஆம்லா சுண்டா என்றழைக்கப்டும் நெல்லிக்காய் ஊறுகாயும் ஒன்றாகும். இதில் இனிப்பு,காரம், புளிப்பு மற்றும் உப்பு ஆகிய நான்கு சுவைகளையும் கொண்டது. நெல்லியில் அதிக அளவில் விட்டமின் சி இருப்பதால் நாம தினமும் அதனை உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. வைட்டமின் சி எலும்புக்கு வலு சேர்க்கும். சளி, காய்ச்சல், மூச்சிரைப்பைப் போக்கும் சக்தி வைட்டமின் சிக்கு உள்ளது. வைட்டமின் சி இருந்தால்தான் ரத்தத்துக்குத் தேவையான சத்துகள் சேரும். நெல்லிக்காய் சீசன் போதுதான் கிடைக்கும் என்பதால் அதை ஊறுகாயாக செய்து ஜாடியில் அடைத்து வைத்தால் ஆண்டு முழுவதும் சாப்பிட்டு பலன்களைப் பெறலாம். நெல்லிக்காயை கொண்டு ஜாம், தேன், நெல்லிக்காய், ஊறுகாய், நெல்லிக்காய் சாதம் என பல்வேறு வித்தியாசமான ரெசிபிகளை செய்யலாம். அதிலும் புளிப்பும் துவர்ப்பும் கலந்த நெல்லிக்காயை கொண்டு ஊறுகாய் செய்தால் படு ஜோராக இருக்கும்.

-விளம்பரம்-

வெயிலில் காய வைத்து அதிக நேரம் செலவில்லாமல் ஈஸியான முறையில் நெல்லிக்காய் ஊறுகாய் செய்யலாம். பாரம்பரிய சுவை மாறாமல் நெல்லிக்காய் ஊறுகாயை வெறும் 10 நிமிஷத்தில் சுலபமாக செய்திட முடியும் இந்த இன்ஸ்டன்ட் நெல்லிக்காய் ஊறுகாயை தயிர் சாதத்துடன் வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். இந்த எளிமையான நெல்லிக்காய் ஊறுகாயை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். பொதுவாக ஊறுகாய் என்றாலே அனைவருக்கும் வாயில் எச்சில் ஊரும். அதிலும் நெல்லிக்காய் ஊறுகாய் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. எனவே அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய நெல்லிக்காய் ஊறுகாய் எப்படி செய்வது என்று இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -
Print
No ratings yet

நெல்லிக்காய் ஊறுகாய் | Gooseberry Pickle Recipe In Tamil

குஜராத் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற உணவு ரெசிபிகளில் ஒன்றான ஆம்லா சுண்டா என்றழைக்கப்டும் நெல்லிக்காய் ஊறுகாயும் ஒன்றாகும். இதில் இனிப்பு,காரம், புளிப்பு மற்றும் உப்பு ஆகிய நான்கு சுவைகளையும் கொண்டது. நெல்லியில் அதிக அளவில் விட்டமின் சி இருப்பதால் நாம தினமும் அதனை உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. வைட்டமின் சி எலும்புக்கு வலு சேர்க்கும். சளி, காய்ச்சல், மூச்சிரைப்பைப் போக்கும் சக்தி வைட்டமின் சிக்கு உள்ளது. வைட்டமின் சி இருந்தால்தான் ரத்தத்துக்குத் தேவையான சத்துகள் சேரும். நெல்லிக்காய் சீசன் போதுதான் கிடைக்கும் என்பதால் அதை ஊறுகாயாக செய்து ஜாடியில் அடைத்து வைத்தால் ஆண்டு முழுவதும் சாப்பிட்டு பலன்களைப் பெறலாம்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Gooseberry Pickle
Yield: 4 People
Calories: 44kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 300 கி பெரிய நெல்லிக்காய்
  • 1/2 டீஸ்பூன் கரும்பு எள்ளு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் ஓமம்
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • 3 டீஸ்பூன் கடுகு
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 5 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் கருப்பு உப்பு
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் உலர்ந்த மாங்காய் தூள்
  • 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 துண்டு வெல்லம்
  • 1/2 டீஸ்பூன் மிளகு

செய்முறை

  • முதலில் நெல்லிக்காயை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
    நெல்லிக்காய் ஆறியதும் அதன் கொட்டையை நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து கருப்பு எள்ளு, ஓமம், கடுகு, உப்பு, சீரகம், சோம்பு,வெந்தயம், மிளகு சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பவுளில் அரைத்து வைத்துள்ள பவுடர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மாங்காய் தூள், உப்பு, கருப்பு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் அதே கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நெல்லிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதன் பிறகு நாம் கலந்து வைத்துள்ள பவுடர், வெல்லம் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் தயார். இதனை ஆறவைத்து கண்ணாடி ஜாரில் போட்டு வைத்தால் இரண்டு மாதம் வரை வைத்து சாப்பிடலாம்.

Nutrition

Serving: 400g | Calories: 44kcal | Carbohydrates: 10g | Protein: 4.9g | Fat: 0.6g | Sodium: 4mg | Potassium: 196mg | Fiber: 3.4g | Vitamin A: 290IU | Vitamin C: 27.7mg | Calcium: 25mg | Iron: 2.31mg

இதனையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க ருசியான நெல்லிக்காய் சிக்கன் குழம்பு இப்படி செஞ்சி பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி ருசி தான்!