ருசியான பச்சை பட்டாணி புலாவ் மதிய உணவாக இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

- Advertisement -

புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இது குறிப்பாக காஷ்மீரிகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லவும் சிறந்த மதிய உணவாக திகழ்கின்றன.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : மதிய உணவுக்கு சுட சுட ருசியான முட்டை புலாவ் இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

- Advertisement -

புலாவில் பல வகை உண்டு. அதில் மட்டர் புலாவ், பன்னீர், காஷ்மீரி, மட்டன் மற்றும் சிக்கன் புலாவ் பிரசித்தி பெற்றது. ஆனால் வீட்டில் செய்யும் போது பெரும்பாலும் வெஜிடபிள் புலாவே இல்லத்தரசிகளின் தேர்வாக இருக்கிறது. இவை பெரும்பாலும் சைவப் பிரியர்கள் பன்னீர் பட்டர் மசாலா அல்லது ரைத்தாவை வைத்தும், அசைவப் பிரியர்கள் முட்டை அல்லது சிக்கன் கறி வைத்து உண்கிறார்கள்.

Print
5 from 1 vote

பச்சை பட்டாணி புலாவ் | Green Peas Pulao Recipe in Tamil

புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இது குறிப்பாக காஷ்மீரிகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லவும் சிறந்த மதிய உணவாக திகழ்கின்றன. புலாவில் பல வகை உண்டு. ஆனால் வீட்டில் செய்யும் போது பெரும்பாலும் வெஜிடபிள் புலாவே இல்லத்தரசிகளின் தேர்வாக இருக்கிறது.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian
Keyword: Pulao
Yield: 4 People
Calories: 62kcal

Equipment

  • 1 குக்கர்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 கப் பாசுமதி
  • 200 கிராம் பச்சை பட்டாணி
  • 200 மிலி தேங்காய் பால்
  • 3 பெரிய
  • 1 துண்டு பட்டை
  • 2 ஏலக்காய்
  • 1 பிரியாணி
  • 4 பல் பூண்டு
  • 3 கிராம்பு
  • 1 டீஸ்பூன் துருவிய இஞ்சி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 4 பச்சை மிளகாய்
  • 3 டேபிள் ஸ்பூன் ஆலிவ்
  • உப்பு தேவையான
  • 1 கைப்பிடி புதினா, கொத்தமல்லி

செய்முறை

  • பாசுமதி அரிசியை 20 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  • பின் அடுப்பில் ஒரு குக்கரை வைத்து ஆலிவ் ஆயில் விட்டு சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு இவற்றை லேசாக வறுக்கவும்.
  • பின் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, அரிசி சேர்த்து லேசாக வறுக்கவும்.
  • பிறகு பட்டாணி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  • இப்பொழுது தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் குக்கரை மூடி ஒரு விசில் விட்டு ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.
  • பின்னர் நீளமாக நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அவ்வளவுதான் பச்சை பட்டாணி புலாவ் ரெடி. மேலாக வறுத்த வெங்காயத்தை போட்டு அலங்கரிக்கவும்.

Nutrition

Serving: 600g | Calories: 62kcal | Carbohydrates: 11g | Protein: 4.1g | Fat: 0.2g | Sodium: 70mg | Potassium: 354mg | Fiber: 3.6g | Vitamin C: 58mg | Calcium: 4.6mg | Iron: 2.1mg