- Prep
- 5 min
- Cook
- 5 min
- Total
- 11 min
- Serves
- 1
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
குழந்தைகளுக்கு லன்ச்க்கு என்ன சாதம் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. யோசிக்காமல் சட்டுனு முட்டை புலாவ் இது போன்று செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் எல்லா சாதத்த்தையும் சாப்பிட்டு விடுவார்கள்.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients
Method
சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், போட்டு தாளித்துக் கொள்ளவும்.
அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிரட்டி விடவும்.
அதனுடன் வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
சாதத்துடன் முட்டை சேர்த்து நன்கு பொலபொலவென வந்ததும் மேலே நெய் ஊற்றி கிளறி இறக்கி விடவும். சுவையான முட்டை புலாவ் தயார்.






