Home சைவம் இதுவரைக்கும் யாருமே சாப்பிட்டு பார்க்காத வகையில் ஒரு சூப்பரான கொய்யா அல்வா செய்யலாம்!

இதுவரைக்கும் யாருமே சாப்பிட்டு பார்க்காத வகையில் ஒரு சூப்பரான கொய்யா அல்வா செய்யலாம்!

கொய்யா அல்வா வா அப்படின்னு நிறைய பேரு ஷாக் ஆகி இருப்பீங்க. ப்ரெட் அல்வா கோதுமை அல்வா அசோகா அல்வா காசி அல்வா பீட்ரூட் அல்வா கேரட் அல்வா அப்படின்னு நிறைய அல்வா கொய்யா அல்வா தான் பாக்க போறோம். இந்த கொய்யா அல்வா உங்க வாழ்க்கையில் நீங்க ட்ரை பண்ணி பார்த்து இருக்க மாட்டீங்க ஆனா ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் உங்க வீட்ல நிறைய கொய்யாப்பழம் இருந்துச்சுன்னா கண்டிப்பா இந்த கொய்யாப்பழ அல்வா நீங்க ட்ரை பண்ணி பாப்பிங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் சூப்பரா இருக்கும்.

-விளம்பரம்-

ஒரு சில குழந்தைகள் கொய்யாப்பழம் சாப்பிட அடம் பிடிப்பாங்க ஆனால் இந்த கொய்யாப்பழம் சாப்பிடுவதால் நம் உடம்புக்கு பலவகையான சத்துக்கள் கிடைக்கும். விட்டமின் சி நார் சத்துக்கள் அப்படின்னா எக்கச்சக்கமான சத்துக்கள் இந்த கொய்யாப்பழத்தில் நமக்கு கிடைக்கும் அது மட்டும் இல்லாம சாப்பிடுவதற்கும் இந்த கொய்யா அல்வா செம டேஸ்டா இருக்கும் கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க.

ரொம்பவே ஈசியா செய்யக்கூடிய இந்த கொய்யாப்பழ அல்வாவை குழந்தைகளுக்கு மட்டுமில்லாம உங்க வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தாலும் வீட்டில் இருக்கிற பெரியவங்களுக்கும் கூட இதை செஞ்சு கொடுக்கலாம் கண்டிப்பா இதை சாப்பிட்டு பாராட்டுவாங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான கொய்யாப்பழ அல்வாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
3.50 from 2 votes

கொய்யா அல்வா | Guava Halwa Recipe In Tamil

கொய்யா அல்வா வா அப்படின்னு நிறையபேரு ஷாக் ஆகி இருப்பீங்க. ப்ரெட் அல்வா கோதுமை அல்வா அசோகா அல்வா காசி அல்வா பீட்ரூட் அல்வா கேரட் அல்வா அப்படின்னு நிறைய அல்வா கொய்யா அல்வா தான் பாக்க போறோம். இந்த கொய்யா அல்வா உங்க வாழ்க்கையில் நீங்க ட்ரை பண்ணி பார்த்து இருக்க மாட்டீங்க ஆனா ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் உங்க வீட்ல நிறைய கொய்யாப்பழம் இருந்துச்சுன்னா கண்டிப்பா இந்த கொய்யாப்பழ அல்வா நீங்க ட்ரை பண்ணி பாப்பிங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் சூப்பரா இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Guava Halwa
Yield: 4
Calories: 112kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 கொய்யாப்பழம்
  • 1 கப் சர்க்கரை
  • 1 சிட்டிகை உப்பு
  • 1/2 டீஸ்பூன் கேசரி பவுடர்
  • 3 டேபிள் ஸ்பூன் நெய்

செய்முறை

  • கொய்யா பழத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு குக்கரில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
  •  
    வேக வைத்த கொய்யா பழத்தை நன்றாக ஆற வைத்து ஒருமிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அரைத்த கொய்யாப்பழ விடுதலை ஒரு வடிகட்டியில் நன்கு வடிகட்டி ஒரு அடி கனமான பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்
  • அதனை அடுப்பில் வைத்து அதனுடன் சர்க்கரையை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறவும்.
  • ஐந்து நிமிடத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.
  • கேசரி பவுடர் சேர்த்து கலந்து நன்றாக அல்வா பதத்திற்கு வந்தவுடன் அதனை எடுத்து வேறு ஒரு தட்டில் நெய் தடவி சேர்த்துக் கொள்ளவும்.
  •  
    நன்றாக ஆரிய பிறகு உங்களுக்கு தேவையான வடிவத்தில் வெட்டி எடுத்தால் சுவையான கொய்யா அல்வா தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 112kcal | Carbohydrates: 3.6g | Protein: 4.5g | Sodium: 6mg | Potassium: 17mg | Vitamin A: 31IU | Calcium: 18.3mg | Iron: 2.26mg