வாயில் கரைத்தோடும் ருசியில் கொய்யா ஐஸ்கிரீம் இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

கோடை காலம் வந்தாலே முதல்ல சாப்பிடணும்னு தோன்ற விஷயம் ஐஸ்கிரீம். கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஆயிரம் பானங்களை குடித்தாலும் சரி, வேறெதுவும் ஐஸ்கிரீம்க்கு நிகராக இருக்க முடியாது. வெயிலுக்கு ஜில்லுனு தொண்டைக்குள் ஐஸ்கிரீம் போகும் போது அடடா அந்த அனுபவமே தனி சொர்கம். ஐஸ்கிரீம் வயது வரம்பின்றி அனைவருக்கும் விருப்பமானது. கோடையை சமாளிக்க ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் ஒரு புறம் இருக்க, மறுபுறம் மாம்பழங்களை சாப்பிட கோடையை வரவேற்பவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். இன்றைய பதிவில் கொய்யா பழத்தை கொண்டு செய்யப்படும் சுவையான கொய்யா ஐஸ்கிரீம் எப்படி செய்வதென்று தான் பார்க்கப் போகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் கால நேரம் இல்லாமல் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்றால் குஷியாகி விடுவார்கள். ஆனால் சந்தைகளில் கிடைக்கும் ஐஸ்கிரீம்கள் ஃப்ரோஷன் டெஸட், அதாவது உறைய வைக்கப்பட்ட இனிப்பு மட்டுமே. அதில் பால் அல்லது சத்துமிக்க எந்தவகையான உணவுப் பொருளும் இல்லை. எந்த வித செயற்கை நிறமோ, சுவையூட்டியோ சேர்க்காமல் வெறும் வீட்டில் உள்ள‌ பொருட்களை வைத்து, இனி வீட்டிலேயே சுலபமாக ஐஸ்கிரீம் செய்து சாப்பிடலாம். தோணும் போதெல்லாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அதை செய்யலாம். சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட விடமாட்டார்கள். இதற்கு காரணம், ஐஸ்கிரீம் வெளியில் வாங்கி சாப்பிட்டால் ஆரோக்கியமான முறையில் இருக்காது என்பதால். நல்லது தான், ஆனால் இனி ஐஸ்கிரீமை ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.

-விளம்பரம்-
Print
4 from 1 vote

கொய்யா ஐஸ்கிரீம் | Guava Icecream Recipe In Tamil

கோடை காலம் வந்தாலே முதல்ல சாப்பிடணும்னு தோன்ற விஷயம் ஐஸ்கிரீம். கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஆயிரம் பானங்களை குடித்தாலும் சரி, வேறெதுவும் ஐஸ்கிரீம்க்கு நிகராக இருக்க முடியாது. வெயிலுக்கு ஜில்லுனு தொண்டைக்குள் ஐஸ்கிரீம் போகும் போது அடடா அந்த அனுபவமே தனி சொர்கம். ஐஸ்கிரீம் வயது வரம்பின்றி அனைவருக்கும் விருப்பமானது. கோடையை சமாளிக்க ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் ஒரு புறம் இருக்க, மறுபுறம் மாம்பழங்களை சாப்பிட கோடையை வரவேற்பவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். இன்றைய பதிவில் கொய்யா பழத்தை கொண்டு செய்யப்படும் சுவையான கொய்யா ஐஸ்கிரீம் எப்படி செய்வதென்று தான் பார்க்கப் போகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் கால நேரம் இல்லாமல் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்றால் குஷியாகி விடுவார்கள்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: Dessert
Cuisine: Indian
Keyword: Guava Icecream
Yield: 3 People
Calories: 112kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 கொய்யா பழம்
  • 250 மிலி பால்
  • 2 டேபிள் ஸ்பூன் கார்ன் ப்ளவர்
  • 1/4 கப் சர்க்கரை
  • 1 கப் வெண்ணிலா ஐஸ்கிரீம்
  • 1/4 கப் கண்டென்ஸ்ட்டு மில்க்
  • 1/2 டீஸ்பூன் பச்சை கலர்

செய்முறை

  • முதலில் கொய்யா பழத்தை தோல் நீக்கி விட்டு மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் சிறிதளவு பால் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து பால், சர்க்கரை மற்றும் கார்ன் ப்ளார் மாவை சேர்த்து கைவிடாமல் சிறிது கெட்டியாகும் வரை கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
  • இவை ஆறியதும் இதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள கொய்யா பழத்தை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் ஒரு பவுளில் ஃப்ரெஷ் கீரீம் மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும். நல்ல கீரிமீயான பதம் வரும் வரை நன்கு பீட்‌ செய்யவும்.
  • பின் அதில் பச்சை கலர் சேர்த்து கலந்து மீதம் வைத்துள்ள பால் சேர்த்து மற்றொரு முறை நன்கு பீட் செய்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது நாம் ரெடி செய்து வைத்துள்ள ஐஸ்கிரீமை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து ஒரு பேப்பரால் மூடி பிரிட்ஜில் 4 முதல் 5 மணி நேரம் வைத்து விடுங்கள்.
  • பின் அதனை வெளியே எடுத்து பரிமாறவும் போது நறுக்கிய பாதாம், முந்திரி, குங்குமப் பூ சேர்த்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான கொய்யா ஐஸ்கிரீம் தயார்‌.

Nutrition

Serving: 400g | Calories: 112kcal | Carbohydrates: 2.6g | Protein: 4.2g | Fat: 1.6g | Potassium: 417mg | Fiber: 4.1g | Sugar: 9.2g | Vitamin A: 22IU | Vitamin C: 8.9mg | Calcium: 31mg | Iron: 2.6mg

இதனையும் படியுங்கள் : இனி வரும் கோடைக்கு ஏற்ற குளு குளு மாம்பழ குல்பி இப்படி வீட்டிலயே இப்படி செஞ்சி பாருங்கள்!

- Advertisement -