குல்பி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவு வகை. வெயில் காலங்களில் வீட்டு வாசலில் மணி அடித்துக் கொண்டு வரும் குல்பிகாரரிடம் குல்பி வாங்கி சாப்பிடுவது, நம் குழந்தை பருவத்தில் யாராலும் மறக்கவே முடியாத இனிமையான நினைவுகள். சுவையான குல்பி, பால், சர்க்கரை, பாதாம், பிஸ்தா போன்றவற்றை பயன்படுத்தி மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயேசெய்யலாம். கடைகளில் வாங்குவதை காட்டிலும் சுவையாகவும் அதே சமயத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும். சுவையான குல்ஃபி நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
இதனை அதிகபட்சமாக 30 முதல் 40 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யலாம் இரவில் செய்து ஃப்ரிட்ஜில் வைத்தால் காலையில் சுவையான குல்பி தயாராகிவிடும். கோடைக்காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில் ஆங்காங்கு மாம்பழங்கள் விற்கப்படுவதைக் காணலாம். குழந்தைகளுக்கு மாம்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகைய குழந்தைகளுக்கு மாம்பழத்தைக் கொண்டு ஒரு வித்தியாசமான ஒரு ரெசிபி செய்து கொடுக்க ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் அருமையான முறையில் ஒரு குல்பி செய்து கொடுக்கலாமே!வெயிலில் இருந்து தப்பிக்க ஜூஸ், தயிர், மோர் வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். கோடை காலம் ஆரம்பித்துவிட்டால் ஜில்லென ஏதாவது சாப்பிட விரும்புவோம். அந்த வகையில் கோடை காலத்துக்கு இதமா மாம்பழ குல்பி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். இந்த மாம்பழ குல்பி செய்வது மிகவும் சுலபம். கோடைக்காலத்தில் கடைகளில் விற்கப்படும் ஐஸ்க்ரீம் களை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே குல்பியை செய்து கொடுத்து மகிழுங்கள்.
மாம்பழ குல்பி | Mango Kulfi Recipe In Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
- 1 டம்ளர்
தேவையான பொருட்கள்
- 1 மாம்பழம்
- 1/2 லி பால்
- 1/2 கப் சர்க்கரை
- 3 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி
- 2 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
செய்முறை
- முதலில் ஒரு பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி பாதியளவு குறையும் வரை தண்ணீர் விடாமல் நன்கு காய்ச்சவும்.
- பின் ஒரு பவுளில் சோள மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்து, ஊற்றி கைவிடாமல் நன்கு கலந்து விடவும்.
- பால் சிறிது கெட்டியானதும், ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- மாம்பழத்தை நன்கு கழுவி தோல் சீவி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
- பின் மாம்பழத்துடன் பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு அரைத்து ஒரு பவுளுக்கு மாற்றவும்.
- அதன்பிறகு அதன் மேல் நறுக்கின முந்திரி,பாதாம் போட்டு நன்கு கலந்து, டம்ளர்களில் 3 ஊற்றி நடுவில் ஐஸ்கிரீம் குச்சிகளை வைத்து பிரிட்ஜில் இரவு முழுவதும் வைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான, சுலபமான மற்றும் வித்தியாசமான மாம்பழ குல்பி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : மாம்பழம் வைத்து இப்படி ஜாம் கூட செய்யலாமா? மாம்பழ ஜாம் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!!