Home ஐஸ் வீட்டில் முலாம் பழம் இருந்தால் சூப்பரான முலாம் பழ ஐஸ்கிரீம் இப்படி ட்ரை பண்ணி...

வீட்டில் முலாம் பழம் இருந்தால் சூப்பரான முலாம் பழ ஐஸ்கிரீம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முலாம் பழத்தில் ஐஸ்கிரீமா அப்படினு ஷாக் ஆகாதீங்க. சாக்லேட் ஐஸ்கிரீம், ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம், மேங்கோ ஐஸ் கிரீம், சேமியா ஐஸ் பால் ஐஸ் அப்படின்னு நம்ம பலவிதமான ஐஸ்கிரீம் சாப்பிட்டு இருப்போம். ஆனா முலாம் பழத்துல ஐஸ்கிரீம் செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டோம். முலாம் பழத்துல நம்ம ஜூஸ் செஞ்சு கொடுத்திருப்போம் இல்ல நம்ம முலாம் பழத்தை அப்படியே கூட சாப்பிட்டு இருப்போம் அதோட சுவை ரொம்பவே அருமையா இருக்கும் அதே நேரத்துல நம்ம உடம்புக்கு ரொம்ப ஆரோக்கியமானதும் கூட.

-விளம்பரம்-

ஆனா ஒரு சில குழந்தைகள் இந்த முலாம் பழத்தை சாப்பிடாமல் அடம் பிடிப்பாங்க. எல்லா குழந்தைகளுக்குமே ஐஸ்கிரீம் என்றால் ரொம்ப பிடிக்கும் அப்ப நம்ம இந்த முலாம்பழம் சாப்பிடாத குழந்தைகளுக்கு முலாம்பழம் வைத்து ஐஸ்கிரீம் செஞ்சு கொடுத்தோம் அப்படின்னா அவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க அதே நேரத்தில் உங்களுக்கு ஆரோக்கியமான ஒரு ஐஸ்கிரீமாவும் அது மாறிடும். நம்ம கடையில காசு கொடுத்து வாங்கி சாப்பிடுற ஐஸ்கிரீம் சுத்தமான முறையில் பண்ணி இருப்பாங்களா அப்படின்னு சொல்லி தெரியாது.

ஆனா நம்ம வீட்லையே சுத்தமா கடையில கிடைக்கிற அதே டேஸ்ட்டோட ஆரோக்கியமா ஐஸ்கிரீம் செய்யலாம். ஐஸ்கிரீம் செய்வது ரொம்ப கஷ்டம் அப்படின்னு நம்ம நினைப்போம் ஆனால் கிடையாது நம்ம ஈசியாவே ஐஸ்கிரீம் செஞ்சு முடிச்சிடலாம். இந்த முலாம்பழம் நம்ம சாப்பிட்டோம் அப்படின்னா நம்ம வயிறு சம்பந்தமான எல்லா பிரச்சனைகளும் சரியாகும். வயிறு புண் வயிறு எரிச்சல் அப்படின்னு எல்லாமே சரியாகும். இவ்ளோ ஆரோக்கியமான முலாம் பழம் வச்சு நம்ம ஐஸ்கிரீம் செய்வது எப்படின்னு வாங்க பார்க்கலாம்.

Print
5 from 1 vote

முலாம் பழ ஐஸ்கிரீம் | Muskmelon Ice cream Recipe In Tamil

சில குழந்தைகள் இந்த முலாம் பழத்தை சாப்பிடாமல் அடம் பிடிப்பாங்க. எல்லா குழந்தைகளுக்குமே ஐஸ்கிரீம்என்றால் ரொம்ப பிடிக்கும் அப்ப நம்ம இந்த முலாம்பழம் சாப்பிடாத குழந்தைகளுக்கு முலாம்பழம்வைத்து ஐஸ்கிரீம் செஞ்சு கொடுத்தோம் அப்படின்னா அவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க அதேநேரத்தில் உங்களுக்கு ஆரோக்கியமான ஒரு ஐஸ்கிரீமாவும் அது மாறிடும். நம்ம கடையில காசுகொடுத்து வாங்கி சாப்பிடுற ஐஸ்கிரீம் சுத்தமான முறையில் பண்ணி இருப்பாங்களா அப்படின்னுசொல்லி தெரியாது.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: deserts
Cuisine: tamil nadu
Keyword: Muskmelon Ice cream
Yield: 4
Calories: 201kcal

Equipment

  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 முலாம்பழம்
  • 1 கப் பால்
  • 1 கப் கண்டன்ஸ்டு மில்க்
  • 1/4 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  • 2 டேபிள் ஸ்பூன் ஸ்ட்ராபெரி சிரப்
  • 3 டேபிள் ஸ்பூன் பால் பவுடர்

செய்முறை

  • முதலில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். முலாம் பழத்தின் தோலை நீக்கி விதைகளை நீக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் முலாம் பழ விழுது, காய்ச்சிய பால், கண்டன்ஸ்டு மில்க், வெண்ணிலா எசன்ஸ், பால் பவுடர் அனைத்தும் சேர்த்து நன்றாக நுரை வரும் அளவிற்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த கலவையை ஒரு டப்பாவில் சேர்த்து அதனை பிரீஸருக்குள் ஏழு மணி நேரம் வைத்துக் கொள்ளவும்.
  • ஏழு மணி நேரம் கழித்து மறுபடியும் எடுத்து அப்புறம் மிக்ஸி ஜாரில் அதனை போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • மறுபடியும் அதை டப்பாவில் ஊற்றி 8 மணி நேரம் ஃப்ரீசருக்குள் வைத்து எடுத்தால் சுவையான டேஸ்ட்டானமுலாம்பழ ஐஸ்கிரீம் தயார். அதன் மேல் ஸ்ட்ராபெரி சிரப் ஊற்றி பரிமாறினால் குழந்தைகளுக்குமிகவும் பிடிக்கும்

Nutrition

Serving: 100g | Calories: 201kcal | Carbohydrates: 48g | Protein: 2.1g | Sodium: 12mg | Potassium: 178mg

இதையும் படியுங்கள் : குக் வித் கோமாளியில்‌ ஷ்ருத்திகா செய்த குளு குளு முள்ளங்கி ஐஸ்கிரீம் ரெசிபி இதோ!