வீட்டிலயே ஸ்வீட் செய்து சாப்பிடலாம் கொய்யா இலை அல்வா இப்படி சுலபமாக செய்து அசத்துங்கள்!

- Advertisement -

பொதுவாக இனிப்பு என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் அல்வா என்றால் சொல்லவா வேண்டும். அல்வா தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகவும் புகழ்பெற்றது. இது சர்க்கரை, நெய், ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படுகிறது. அதன் நாக்கில் வைத்ததும் கரைகின்ற சுவையை நிச்சயம் எல்லோருமே விரும்புவோம்.

-விளம்பரம்-

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அல்வா என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. அல்வாவில் ஏராளமான வகை உள்ளன. கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா, பிரட் அல்வா, திருநெல்வேலி அல்வா, கோதுமை அல்வா என பல வகைகள் உள்ளன. இவைகளை நாம் சுவைத்தும் இருப்போம். அல்வா என்று வரும் போது பலரும் கோதுமை அல்வா , பாதாம் அல்வா போன்றவற்றை தான் அதிகமாக சாப்பிட்டு இருப்போம்.

- Advertisement -

ஆனால், நீங்கள் கொய்யா இலை அல்வாவை சுவைத்தது உண்டா? அதன் பிளேவர் மற்றும் சுவை அட்டகாசமாக இருக்கும். கொய்யா இலையில் சிறிதளவு ‌புளி வைத்து நாம் அனைவரும் சாப்பிட்டிருப்போம். அதில் மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன என சொல்லப்படுகின்றது. கொய்யா இலையில் எப்படி சுவையான அல்வா செய்வதென்று பார்க்கலாம் வாங்க.

Print
5 from 1 vote

கொய்யா இலை அல்வா | Guava Leaf Halwa Recipe In Tamil

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அல்வா என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. அல்வாவில் ஏராளமான வகை உள்ளன. கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா, பிரட் அல்வா, திருநெல்வேலி அல்வா, கோதுமை அல்வா என பல வகைகள்உள்ளன. இவைகளை நாம் சுவைத்தும் இருப்போம். அல்வா என்று வரும் போது பலரும் கோதுமை அல்வா , பாதாம் அல்வா போன்றவற்றை தான் அதிகமாக சாப்பிட்டு இருப்போம். அதில் மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன என சொல்லப்படுகின்றது. கொய்யா இலையில்எப்படி சுவையான அல்வா செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Dessert
Cuisine: tamil nadu
Keyword: Guava Leaf Halwa
Yield: 4
Calories: 422kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் கொய்யா இலை
  • 1 1/2 கப் கப்
  • 4 டீஸ்பூன் நெய்
  • 10 முந்திரி
  • 2 டீஸ்பூன் கார்ன்பிளவர் மாவு

செய்முறை

  •  
    முதலில் கொய்யா இலைகளை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து ஒரு மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.பின் இதனை ஒரு வடிகட்டி மூலம் நன்கு வடித்து கொய்யா இலை சாறை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பவுளில் கார்ன் பிளவர்‌ மாவு எடுத்து அதனுடன் இந்த சாறை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு காய்ந்ததும் அதில் முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • .
    பின் அதே கடாயில் கார்ன் பிளவர் மாவு கலந்த கொய்யா இலை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 10 நிமிடங்கள் கைவிடாமல் தொடர்ந்து கலந்து கொள்ளவும்.
  • பின்னர் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 10 நிமிடங்கள் வரை நன்கு கலந்து ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கலந்து கொள்ளவும்.
     
  • கடாயில் ஒட்டாமல் நன்றாக ‌அல்வா பதத்திற்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இறுதியாக வறுத்து வைத்த முந்திரியை சேர்க்கவும்.
  • அவ்வளவுதான் சூடான, சுவையான ஆரோக்கியமான கொய்யா இலை அல்வா தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 422kcal | Protein: 8.1g | Fat: 4.5g | Fiber: 8.5g | Calcium: 90mg