காரசாரமாக குண்டூர் கன் பவுடர் இருந்தா போதும், எல்லாத்துக்குமே இந்த பொடியை சேர்த்துக் கொள்வது சாப்பாட்டோட சுவை இன்னுமே அதிகமாகும்!!!

- Advertisement -

இட்லி பொடி, சாம்பார் பொடி, ரச பொடி  இப்படி பல பொடிகள் நம்ம செய்து வைத்திருப்போம். அதுலையும் இப்போ நம்ம பண்ண போற இந்த பொடியையும் சேர்த்து பண்ணி வச்சுக்கிட்டீங்கன்னா எல்லா சாப்பாடுகளையும் இதை கலக்கும் போது ரொம்பவே சுவையாவும் டேஸ்டாவும் இருக்கும். இந்த பொடியை நீங்க இட்லி மிளகாய் பொடி, பொடி தோசை, காய்கறிகள் வறுவல் இந்த மாதிரி எல்லாத்துக்குமே நீங்க பயன்படுத்திக்கலாம்.

-விளம்பரம்-

நல்ல காரசாரமான சுவைல இந்த பொடி செய்து சாப்பிடும்பொழுது எப்போதும் சாப்பிட விட அதிகமாகவே ருசித்து சாப்பிடுவோம். இந்த பொடியை சேர்த்துக்கொள்வது சாப்பாட்டோட சுவை இன்னுமே அதிகமாகும். அப்படி இந்த பொடிய நம்ம செய்து சாப்பாட்டில் சேர்க்க போறோம் அப்படின்னு பாத்தீங்கன்னா இது குண்டூர் ஸ்டைல் கன் பவுடர்.

- Advertisement -

இதோட காரத்துக்காகவே இதை கன் பவுடர் அப்படின்னு சொல்றாங்க. இந்த குண்டூர்  கன் பவுடர் எப்படி ரொம்ப ஈஸியா செய்யலாம் .இந்த குண்டூர் கன் பவுடர் எல்லாம் சாப்பாட்டுலையுமே நம்ம சேர்த்துக் கொள்வது ரொம்பவே சுவையா இருக்கும். அதுவும் சைட் டிஷ்களான வறுவல்களுக்கு இதுல லேசா ஒரு ஸ்பூன் சேர்த்து சமைக்கும் போது ரொம்ப சுவையா வரும்.எப்படி இந்த சுவையான குண்டூர் கன் பவுடர் காரசாரமா செய்றது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம் வாங்க பார்க்கலாம்.

Print
No ratings yet

குண்டூர் கன் பவுடர் | Guntur Gun Powder Recipe In Tamil

இட்லி பொடி, சாம்பார் பொடி, ரச பொடி  இப்படி பல பொடிகள் நம்ம செய்து வைத்திருப்போம்.அதுலையும் இப்போ நம்ம பண்ண போற இந்த பொடியையும் சேர்த்து பண்ணி வச்சுக்கிட்டீங்கன்னாஎல்லா சாப்பாடுகளையும் இதை கலக்கும் போது ரொம்பவே சுவையாவும் டேஸ்டாவும் இருக்கும். அதுவும் சைட்டிஷ்களான வறுவல்களுக்கு இதுல லேசா ஒரு ஸ்பூன் சேர்த்து சமைக்கும் போது ரொம்ப சுவையாவரும்.எப்படி இந்த சுவையான குண்டூர் கன் பவுடர் காரசாரமா செய்றது அப்படின்னு தெரிஞ்சுக்கஇருக்கோம் வாங்க பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Guntur Gun Powder
Yield: 4
Calories: 110kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் துவரம் பருப்பு
  • 1 கப் உளுந்து
  • 1 கப் கடலைப்பருப்பு
  • 2 ஸ்பூன் தனியா விதைகள்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1/2 ஸ்பூன் வெந்தயம்
  • 12 பல் பூண்டு
  • 25 குண்டு காய்ந்தமிளகாய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து அதில் துவரம் பருப்பை சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
     
  • பிறகு அதே கடாயில் கடலைப்பருப்பு, உளுந்து சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  •  பிறகு அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து தனியா விதைகள், சீரகம், வெந்தயம் சேர்த்து அவைகளையும் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் பூண்டு பற்களை தோளோடு அப்படியே சேர்த்துக் கொள்ள வேண்டும்.விருப்பமிருந்தால் இடித்தும்சேர்த்துக் கொள்ளலாம் பூண்டையும் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  •  
     பின் அதில் குண்டு காய்ந்த மிளகாய்களை சேர்த்து நன்றாகவறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  வறுத்து எடுத்து அனைத்து பொருட்களையும் ஆற வைத்துக்கொள்ள வேண்டும்.
     
  • பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய் மட்டும் முதலில் சேர்த்து பல்ஸ் மோடில் ஒன்று இரண்டாகஅரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  பின்பு அதில் வறுத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்துதேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  •  
    பொடியை வேறு பாத்திரத்தில் மாற்றினால் சுவையான குண்டூர் கனீ பவுடர் தயார். இந்த பொடி அனைத்து வறுவல்களுக்கும்,இட்லி பொடியாகவும், பொடி தோசைக்கும், பொடி இட்லிக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் ரொம்பவேசுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 110kcal | Carbohydrates: 45g | Protein: 13g | Saturated Fat: 0.5g | Potassium: 301mg | Sugar: 0.5g

இதையும் படியுங்கள் : மழைக்கு இதமா சூடாக சாப்பிட ருசியான வாழைப்பூ கட்லெட் இது போன்று செய்து பார்க்காலாம்!