மழைக்கு இதமா சூடாக சாப்பிட ருசியான வாழைப்பூ கட்லெட் இது போன்று செய்து பார்க்காலாம்!

- Advertisement -

தற்போது ஆங்காங்கு மழை பெய்து, காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. பொதுவாக குளிர்ச்சியான காலநிலையில் நல்ல காரசாரமாகவும், சூடாகவும், மொறுமொறுப்பாகவும் சாப்பிடத் தோன்றும். அதுவும் மாலை வேளையில் தான் இப்படியெல்லாம் தோன்றும். நீங்கள் எப்போதும் பஜ்ஜி, வடை, போண்டா என்று தான் செய்து சாப்பிடுவீர்களானால், அடுத்தமுறை கட்லெட் செய்யுங்கள்.

-விளம்பரம்-

உங்கள் வீட்டில் உள்ளோர் கட்லெட்டுகளை விரும்பி சாப்பிடுவார்களா? அவர்களுக்கு வழக்கமாக செய்யும் கட்லெட்டுகளை விட, சற்று வித்தியாசமான கட்லெட் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் வாழைப்பூ உள்ளதா? அப்படியெனில் வாழைப்பூவைக் கொண்டு கட்லெட் செய்து கொடுங்கள். அதுவும் வீட்டில் வாழைப்பூ அதிகம் இருந்தால், அவற்றைக் கொண்டு வாழைப்பூ கட்லெட்டை செய்யுங்கள். இந்த வாழைப்பூ கட்லெட் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

- Advertisement -

இந்த வாழைப்பூ கட்லெட் மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சற்று சுலபமாகவும் இருக்கும். சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகளில் வாழைப்பூவும் பரிந்துரைக்கப்படும். இது அவர்களுக்காக மட்டுமல்ல, குழந்தைகள் முதல் அனைவரும் அடிக்கடி செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. இதன் துவர்ப்பு தன்மையால் பலரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் கட்லெட் செய்து கொடுத்தால் அனைவரும் சண்டை போட்டுக்கொண்டு பங்குக்கு வருவார்கள். இந்த வாழைப்பூ கட்லெட்டை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Print
No ratings yet

வாழைப்பூ கட்லெட் | vaalaipoo cutlet recipe in tamil

தற்போது ஆங்காங்கு மழை பெய்து, காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. பொதுவாக குளிர்ச்சியான காலநிலையில் நல்ல காரசாரமாகவும், சூடாகவும், மொறுமொறுப்பாகவும் சாப்பிடத் தோன்றும். அதுவும் மாலை வேளையில் தான் இப்படியெல்லாம் தோன்றும். நீங்கள் எப்போதும் பஜ்ஜி, வடை, போண்டா என்று தான் செய்து சாப்பிடுவீர்களானால், அடுத்தமுறை கட்லெட் செய்யுங்கள். உங்கள் வீட்டில் உள்ளோர் கட்லெட்டுகளை விரும்பி சாப்பிடுவார்களா? அவர்களுக்கு வழக்கமாக செய்யும் கட்லெட்டுகளை விட, சற்று வித்தியாசமான கட்லெட் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் வாழைப்பூ உள்ளதா? அப்படியெனில் வாழைப்பூவைக் கொண்டு கட்லெட் செய்து கொடுங்கள். அதுவும் வீட்டில் வாழைப்பூ அதிகம் இருந்தால், அவற்றைக் கொண்டு வாழைப்பூ கட்லெட்டை செய்யுங்கள்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: vaalaipoo cutlet
Yield: 5 People
Calories: 89kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 கப் வாழைப்பூ
  • 2 வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு
  • 1 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/4 டீஸ்பூன் சாட் மசாலா
  • 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
  • 1/4 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி தழை
  • 1/2 கப் சோள மாவு
  • 1 கப் பிரெட் தூள்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வாழைப்பூவின்‌ காம்பை ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வாழைப்பூ சேர்த்து வதக்கி ஆற வைத்து எடுத்து கொள்ளவும்.
  • வதக்கிய வாழைப்பூவுடன் மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், மல்லிஇலை, இஞ்சி பூண்டு விழுது, சீரக தூள் மற்றும் சாட் மசாலா தூள், உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
  • இந்த கலவையை சிறிதளவு எடுத்து வடை போல் தட்டி வைத்துக் கொள்ளவும்.
  • சோள மாவை அரை கப் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
  • பின்னர் சோள மாவு கரைசலில் பிரட்டி எடுத்து பின் பிரெட் தூளில் பிரட்டி எடுத்து அரை மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான வாழைப்பூ கட்லெட் தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 89kcal | Carbohydrates: 2.8g | Protein: 9.1g | Fat: 0.3g | Sodium: 7mg | Potassium: 358mg | Fiber: 2.6g | Sugar: 2.2g | Vitamin C: 8.7mg | Calcium: 5mg | Iron: 0.26mg