பிரஷர் குக்கரில் சமைக்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்து வீடாதீர்கள் ? விபத்தாகிடும்.!

- Advertisement -

பிரஷர் குக்கர் சமையலறையில் மிகவும் பயனுள்ள உபகரணங்களில் ஒன்றாகும், ஏனெனில் இது உணவை தீய்ந்து போவதைத் தடுக்கும் அதே வேளையில் விரைவாக சமைக்க உதவுகிறது. பருப்பு, சாதம் முதல் கேக் வரை, இதில் சமைக்கக்கூடிய பல உணவுகள் உள்ளன. உணவை சமைப்பதற்கான எளிய முறைகளில் இதுவும் ஒன்றாகும், ஆனால் பிரஷர் குக்கரில் இருந்து தண்ணீர் வெளியேறுவது, மூடியிருக்கும் போது மூடியின் ஓரங்களில் இருந்து நீராவி வெளியேறுவதற்கான அழுத்தம் சரியாக உருவாக்கப்படாமல் இருப்பது போன்ற சில பொதுவான பிரச்சனைகளை நாம் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்கிறோம். நீங்கள் தொந்தரவின்றி குக்கரில் சமைக்க உதவும் எளிய குறிப்புகள் சிலவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

உபயோகிக்கும் முன் குக்கரை சரி பார்க்கவும்

கடையிலிருந்து குக்கரை வாங்கும் பொழுது அல்லது நீங்கள் பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு முறைக்கும் முன்னர் குக்கரில் ஏதேனும் பழுதுகள் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அதனை நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொழுது பழுது உள்ள குக்கராக இருந்தால் அது வெடிப்பதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. எனவே குக்கரை உபயோகிக்கும் முன் சரிபார்த்து எச்சரிக்கையாக பயன்படுத்துங்கள்.

- Advertisement -

சமையல் செய்யும் போது கவனிக்க வேண்டியவை

நம்மில் பலருக்கும் சாதம் வேக வைப்பதற்கு குக்கரே வசதியாக உள்ளது ஆதனால் தான், நாம் அதனையே பயன்படுத்துகிறோம். ஆனால் இன்றளவும் நமக்கு எவ்வளவு தண்ணீர் வைத்து வேக வைக்க வேண்டும் என்பது தெரியவில்லை. எனவே சாதம் வேக வைக்கும் பொழுது தண்ணீரின் அளவை சரியாக வைத்து சமைக்க பழகுங்கள். ஒருவேளை தண்ணீரின் அளவு கூடினால் அதுவும் குக்கர் வெடிப்பதற்கு காரணமாக அமையலாம்.

வெவ்வேறு உணவுகளை எப்படி சமைக்க வேண்டும்?

நாம் குக்கரில் விதவிதமான உணவை சமைத்து உண்கிறோம் அது இறைச்சியாகவும் இருக்கலாம், காய்கறியாகவும் இருக்கலாம். ஆனால் இவை சமைப்பதற்கு தண்ணீரின் அளவு மாறுபடுகிறது. எனவே தண்ணீரின் அளவை சரிபார்த்து எதற்கு எவ்வளவு தண்ணீர் வைக்க வேண்டும் என்பதனை நாம் உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் குக்கரில் சமைக்க வேண்டும். பொதுவாக இந்த பொருளை நாம் குக்கரில் சமைப்பதாக இருந்தாலும் அதனை குறைந்தது 10 நிமிடம் ஊற வைத்து சமைக்கும் பொழுது வேகமாக நம் சமையலும் முடிந்து விடும், அதிக நேரமும் எடுத்துக் கொள்ளாது.

நீராவியை எப்படி வெளியேற்ற வேண்டும்?

நம்மில் பலரும் அவசரத்தின் காரணமாக குக்கரை உடனடியாக அதன் நீராவி போவதற்குள் திறந்து விடுவோம், அதுதான் குக்கர் வெடிப்பதற்கு முதல் காரணம். இப்படி செய்வதுனால் நமக்கும் காயம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் வீடும் நாசமாகிவிடும். எனவே குக்கரை அடுப்பில் இருந்து இறக்கியவுடன் குறைந்தது 5 நிமிடமாவது அப்படியே வைத்து விடுங்கள், அல்லது சிறிது தண்ணீரில் குக்கரை காட்டி அதன் நீராவி போனவுடன் திறங்கள்.

-விளம்பரம்-

குக்கரை பாதி அளவே நிரப்ப வேண்டும்

நாம் சமைக்கும் பொழுது எப்பொழுதும் குக்கரை பாதியளவு தான் நிரப்ப வேண்டும். ஏனென்றால் நமக்கே தெரியும் நாம் இப்பொழுது, சாதம் சமைக்க போகிறோம் என்றால் அதை நாம் எந்த அளவுக்கு வைத்தோமோ அதனை விட இரண்டு மடங்கு அதிகமாக தான் இருக்கும். நம்மில் பலரும் குக்கர் நிரம்ப நிரம்ப சாதம் வைத்து விடுவோம், ஆனால் அது முற்றிலும் தவறான ஒன்று. நாம் இப்படி செய்தால் குக்கர் வெப்பம் தாளாமல் வெடித்து விடும். சாதம் மட்டுமல்லாமல் காய்கறி, இறைச்சி போன்றவற்றிலும் நாம் கவனம் எடுத்து எவ்வளவு சமைக்க வேண்டும் என்பதனை நினைவில் வைத்துக் கொண்டு சமைத்தால் குக்கர் வெடிப்பதனை நம்மளால் தவிர்க்க இயலும்.