Home ஆன்மிகம் ராஜயோகத்தை தரும் கருங்காலி மாலை அணிவதற்கு முன் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய என்னென்ன ?

ராஜயோகத்தை தரும் கருங்காலி மாலை அணிவதற்கு முன் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய என்னென்ன ?

காலம் காலமாக ருத்ராட்சம் அணிவது என்பது வழக்கத்தில் இருந்து வருகிறது. சமீப காலமாக கருங்காலி மாலையின் மேல் அதிக அளவில் ஈடுபாடு கொண்டுள்ளனர். இளைஞர்கள் கருங்காலி மாலை அணிவதன் மூலம் நேர்மறையான எண்ணங்கள், நோய் எதிர்ப்புசக்தி இந்த கருங்காலி மாலைகளால் கிடைக்கிறது என்கிறார்கள். ஒருவர் வெற்றியடைய வேண்டும் என்றால் கருங்காலி அணிய வேண்டும் என்று அதிக அளவு கூறப்பட்டு வருகிறது. இயற்கையில் நிறைய மரங்கள் மூலிகை மருத்துவ தன்மை கொண்டதாக இருக்கும் உதாரணமாக நாம் வேப்பமரம் அரச மரங்களும் தெய்வமாக வழிபட்டு வருகிறோம். ஆலமரத்தடியில் இறைவனை வைத்து பூஜை செய்து ஆலமரத்தில் இருந்து வரக்கூடிய காற்று சுவாசிப்பது நன்மை பயக்கும். முன்னோர்கள் அனைவரும் இதுபோன்ற மரங்களில் இருந்து ஆன்மீகத்தை மரங்களில் புகுத்தி அந்த மரங்களில் இருந்து வெளியிடப்படுகின்ற ஆக்ஸிஜனை சுவாசிக்கும் பொழுது நமக்கு நன்மை கிடைக்கும்.

-விளம்பரம்-

அதேபோல இந்த கருங்காலி மரம் சமீப காலமாக அதிக அளவில் மக்கள் பேசப்பட்டு வருகிறது. கருங்காலி மரம் அனைவருக்கும் நன்மை பயக்கும் என்று கூறி வருகிறார்கள். இந்த கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட மாலைகள், கை வளையங்கள் போன்றவை அணிந்து கொள்ளும்போது நேர்மறை எண்ணங்கள் அதிகரிப்பதோடு, செய்யும் வேலை ஈடுபாடு, அதிகம் சந்தோஷம், மன நிம்மதி, நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை கிடைக்கிறது. அப்படிப்பட்ட கருங்காலி மாலையில் யாரெல்லாம் அணியக்கூடாது யாருக்கெல்லாம் நன்மை பயக்கும்.யாருக்கெல்லாம் பலன்கள் கிடைக்காது என்பது எல்லாம் இதில் பார்க்க போகிறோம்.

கருங்காலி மட்டுமல்ல பலவிதமான செடிகள் விதைகள் கொட்டைகள் போன்றவற்றை அதிகளவு நேர்மறை எண்ணங்களை கொடுக்க கூடியவைகளாக இருக்கின்றன. உதாரணமாக தாமரை கொட்டை, வில்வ பழம், வில்வ ஓடு, ருத்ராட்சம் அணிவது. இது போல பல மரங்களில் இருந்து கிடைக்கக்கூடிய விதைகள் நமக்கு நன்மைகளை கொடுக்கின்றன. இப்பொழுது கருங்காலி மர மணிகள் பல நன்மைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அனைத்து விதமான தாவர சம்பந்தப்பட்ட பொருட்கள் எல்லாம் மனதிற்கு நிம்மதியையும் நேர்மறை எண்ணங்களை அதிகப்படுத்துவதனால் நாம் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுகிறோம்.

கருங்காலி மரம்

இந்த கருங்காலி மரம் வெப்பமான மரம் இதில் அதிக காந்த சக்தி இருக்கிறது. இறைவனை வழிபடுதல் எவ்வாறு நன்மை பயக்குமோ அதேபோல கோபுர தரிசனம் தல விருச்சங்களை வழிபடுதல் அதிக நன்மை பயக்கும். இந்த கருங்காலி மரங்களை கேவிலின் கலசங்கள் வைப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். கருவறையில் பயன்படுத்துவது இல்லை. அதேபோல் தலவிருட்சமாக இருக்கும் இடங்களில் இந்த கருங்காலி மரத்திற்கு அடியில் தீபம் ஏற்றுவது தவிர்க்கப்படுகிறது. காரணம் இந்த மருந்து வெப்பமான மரம் என்பதால் கருங்காலி மரத்திற்கு அடியில் தீபம் ஏற்றுவதை விட சிறிது நேரம் இந்த கருங்காலி மரத்தின் கீழ் அமர்ந்து விட்டு வருவது அதிக பலன்களை கொடுக்கிறது.

கருங்காலி அணிவதற்கு முன் கவனிக்க வேண்டியவை

ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் எப்படி இருக்கிறது என்பதை குறித்து தான் கருங்காலி மாலையை அவர் அணியலாமா? வேண்டாமா? என்பது முடிவு செய்ய வேண்டும் .ஒருவருக்கு செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் மாற்றத்தில் பாதிப்புகளை குறைத்துக் கொள்வதற்கு கருங்காலி கை பட்டை அணிந்து கொள்ளுதல் கருங்காலி மாலை அணிந்து கொள்ளுதல் நன்மைபயக்கும். கருங்காலி மரத்தின் கீழ் சிறிது நேரம் அமர்ந்து வருதல் போன்றவை நல்ல பலன்களை கொடுக்கும். ஆனால் இதற்கு முன்பு நீங்கள் தங்கள் ஜாதகத்தில் செவ்வாயின் பலன் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு பிறகு கருங்காலி மாலை அணிவது உங்களுக்கு நன்மை அளிக்கும். அனைவரும் செய்கிறார்கள் என்பதற்காக அல்லாமல் தங்களுக்கு உண்மையிலேயே நீங்கள் செய்யும் செயலால் பலன் கிடைக்குமா என்பதை ஆராய்ந்து பிறகு நீங்கள் அதை செய்யும் பொழுது உங்களுக்கு முழு வெற்றியும் நன்மையும் கிடைக்கும்.

-விளம்பரம்-