விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபட நினைப்பவர்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை..!

- Advertisement -

பொதுவாக வீட்டில் என்னதான் நிறைய தெய்வங்களின் புகைப்படங்களும் சிலைகளும் வைத்திருந்தாலும் அனைவருடைய வீட்டிலும் கண்டிப்பாக விநாயகர் சிலையை வைத்திருப்போம். நிறைய பேருக்கு விநாயகரை மிகவும் பிடிக்கும் எனவே குட்டி குட்டி விநாயகர் சிலையை வாங்கி நாம் வீட்டில் வைத்து அலங்கரிப்போம். அதுமட்டுமில்லாமல் விநாயகர் வீட்டிற்கு செழிப்பையும் மகிழ்ச்சியையும் தரக்கூடியவர். விநாயகப் பெருமானை மனுதாரர் நினைத்த வேண்டினால் அவர் அவருடைய பக்தர்களுக்கு கண்டிப்பாக அருள் பாலிப்பார். வீட்டில் புகழ் அதிர்ஷ்டம் வளமான வாழ்வு என அனைத்தும் கிடைக்க வேண்டும் என்றால் வீட்டில் விநாயகர் சிலையை வைத்திருக்க வேண்டும். ஆனால் விநாயகர் சிலையை நம் வீட்டில் வைப்பதற்கு வாஸ்து சாஸ்திரங்களில் படி சில முறைகள் உண்டு. விநாயகர் சிலைகளிலேயே நிறைய சிலைகள் உண்டு அதில் எந்த சிலையை நம் வீட்டில் வைத்தால் வீட்டிற்கு மங்களகரமானது வரும் என்பதை பற்றியும் விநாயகரை வீட்டில் வைப்பதற்கான விதிமுறைகளை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்

-விளம்பரம்-

வீட்டில் கண்டிப்பாக வைக்க வேண்டிய விநாயகர் சிலை

வாஸ்து சாஸ்திரங்களின்படி வீட்டின் நுழைவு வாயிலில் வேப்பங்கொட்டை அல்லது மாம்பழ தோலால் ஆன விநாயகர் பெருமானை வைக்க வேண்டும்.

- Advertisement -

வீட்டு பஞ்சம் தீர்ந்து செல்வம் செழிக்க வேண்டும் என்றால் வெள்ளெருக்கு விநாயகர் பெருமானின் சிலையை வீட்டில் வைக்க வேண்டும்

வாஸ்துவின் படி சிறந்த உலோகமாக கருதப்படும் படிகத்தால் ஆன விநாயகர் பெருமானை வீட்டில் வைக்க வேண்டும். மேலும் இந்த விநாயகருடன் படிகத்தாலான லட்சுமி யையும் வணங்கி வந்தால் வீட்டில் செல்வம் செழிக்கும்.

விநாயகப் பெருமானை வீட்டில் வைப்பதற்கான சில விதிமுறைகள்

விநாயகப் பெருமான் சிலை பலவிதமான வண்ணங்களில் கிடைக்கும். ஆனால் பல விதமான வண்ணங்களில் கிடைக்கக்கூடிய விநாயகர் பெருமானின் சிலையை வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் வைக்கக் கூடாது. வெண்கல சிலை அல்லது வெள்ளை நிற சிலையை மட்டுமே வைக்க வேண்டும்

-விளம்பரம்-

வாஸ்து சாஸ்திரத்தின் படி அமர்ந்த நிலையில் இருக்கும் விநாயகப் பெருமானின் சிலையை மட்டுமே வீட்டில் வைக்க வேண்டும். நின்றபடி இருக்கும் விநாயகர் சிலையை வேலை பார்க்கும் இடத்தில் தான் வைக்க வேண்டும்