மீன் உணவுகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் அதிலும் மீன் வறுவல் என்றால் தனி சுவை தான். மீன் குழம்புக்கு இருக்கும் மவுசை விட மீன் வறுவலுக்கு அதிக மவுசு உண்டு. இந்த மீன் வறுவல்களில் பலவகை இருக்கு. நாம்ம இப்போது ஹைதராபாத் ஸ்டைலில் செய்ய போறோம். வீட்ல இருக்குற குறைந்த பொருட்களை வைத்து ரொம்பவே சுலபமா டேஸ்ட்டா இந்த மீன் வறேவல் செய்திடலாம்.
இந்த மீன் வருவல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடிக்கும். நிஜாமி மீன் வருவல் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. மீன் குழம்பு விருப்பம் நிறைய பேருக்கு இருக்கும். சிலருக்கு மீன் குழம்பு சாப்பிடும்போது கூட மீன் வறுவல் எல்லா உணவுகளோடையும் சைடு டிஷ்ஷா சாப்பிடுவது ரொம்பவே பிடிக்கும். அப்படி மீன் வறுவல் விருப்பப்படுற உங்களுக்காக இந்த மாதிரி புதுவிதமா ட்ரை பண்ணி மீன் வறுவல் செய்து கொடுக்கும்போது இன்னுமே விருப்பமா சாப்பிடுவாங்க.
இப்படி சுவையான மீன் வறுவல்களை விதவிதமா அவங்களுக்கு செய்து கொடுக்கும்போது மனசு சந்தோஷப்படும். மீன்ல இருக்கிற நல்ல சத்துக்கள் அதிகமாகவே கிடைக்கும். கடல் உணவுகள் என்று நம்ப சொல்லும் போது நம்ம முதலிடம் கொடுக்கிறது மீனுக்கு தான். ஆகையால் அப்படி மீன் நமக்கு அதிக அளவு நல்ல கொழுப்பு உள்ள மீன்களாக இருக்கு. அதனால இதயத்துக்கும் நல்லது பண்ணுது. அது உடலுக்கு எந்த கேடும் மீன்களால ஏற்படறது கிடையாது. அதனால மீன்களை அதிக அளவு உணவில் சேர்த்துகிறதாஷ எந்த ஒரு பாதிப்பும் கிடையாது. சரி வாங்க இந்த ஹைதராபாத் ஸ்டைல் நிஜாமி மீன் வறுவல் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
ஹைதராபாத் நிஜாமி மீன் வறுவல் | Hyderabad Fish Fry Recipe In Tamil
Equipment
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ மீன்
- 1 துண்டு இஞ்சி
- 5 பல் பூண்டு
- 3 பச்சைமிளகாய்
- 1 கைப்பிடி கொத்தமல்லி
- 1 கைப்பிடி புதினா
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் மிளகு
- 1 ஸ்பூன் மைதா மாவு
- 1 ஸ்பூன் சோளமாவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் மீனைசுத்தமாக கழுவி வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகுஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு அதில் கொத்தமல்லித் தழை, புதினா சேர்த்து அரைத்து அதனுடன் மிளகு, சீரகம் சேர்த்து நன்றாக அரைத்துஎடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பிறகு சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள மீனில் அரைத்து வைத்துள்ள மசாலாக்களை சேர்த்து கலந்து விடவும்.அதில்மைதா மாவு , சோள மாவு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். மசாலா தடவிவைத்துள்ள மீன்களை ஒரு அரை மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும்.
- பிறகு அடுப்பில் ஒரு தவாவை வைத்து எண்ணெய் ஊற்றி மசாலா தடவி ஊறிய மீன்களை எடுத்து வைத்து வறுக்கவும்.ஒருபுறம் வெந்த பிறகு மறுபுறம் திருப்பி போட்டு மசாலாக்கள் நன்றாக மீனுடன் சேர்ந்துவெந்த பிறகு எடுத்து பரிமாறினால் சுவையான ஹைதராபாத் நிஜாமி மீன் வறுவல் தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : திருக்கை மீன் வறுவல் இப்படி ஒரு தரம் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுங்க பின் அடிக்கடி வீட்டில் திருக்கை மீன்!